தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!

தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்பில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவித்திருக்கும் அறிக்கையை சுருக்க வடிவில் இங்கே முன் வைத்துள்ளோம்.

இந்த திட்டத்தின் கீழ்,

1. ஆண்டு ஒன்றுக்கு தொழிற்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படும் முஸ்லிம்கள் எண்ணிக்கை 366 ஆகும். இதில் 30 சதவீதம் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

2. விண்ணப்பங்களில் முதல்தர பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி.

3. படிப்புகள்: தொழில், தொழில் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள்.

4. தகுதி: நுழைவுத்தேர்வு தேர்ச்சி அல்லது 12 ஆம் வகுப்பில் 50 சதவித மதிப்பெண் மற்றும் தந்தை/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் எவ்விதத்திலும் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் நீதிமன்றம் சாரா முத்திரைத் தாளில் பெற்றிருக்க வேண்டும்.

5. உதவித்தொகைப் பெறத் தகுதியுடையவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனம் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பவும்.

சிறுபான்மை நல ஆணையம் மற்றும் மேலாண்மை இயக்குனர்,

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,

807, அண்ணா சாலை, 5வது தளம், சென்னை 2.

6. இவ்வருடம் விண்ணப்பிக்க இறுதி நாள்: 25/10/2007.

7. இது தொடர்பான மேலதிக விவரங்களை கீழ்கண்ட இணைய தளத்திலிருந்துப் பெறலாம்: 

 

www.minorityaffairs.gov.in/newsite

 

தகவல்: முதுவை ஹிதாயத்

இதை வாசித்தீர்களா? :   ஆந்திரா I.T மாநிலமானது எப்படி?