இராக்கிய சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை!

{mosimage}இராக்கிய சிறுமியை மானபங்கப் படுத்தி கொடூரமாகக் கொன்ற அமெரிக்க சார்ஜெண்ட் பால் கோர்ட்டசுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டதால் 100 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது அறிந்ததே. இந்த சதியில் பங்கு பெற்ற படைவீரர் ஸ்பீல்மென் மீது நடைபெற்ற விசாரணை முடிவு பெற்று அவர் மீது 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்கொடூர செயலுக்கான சதித் திட்டம் தீட்டியது முதல் சிறுமி அபீர் அல்-ஜுனூபியை மானபங்கப் படுத்தியதோடு அல்லாமல் அவரையும் அவரது குடும்பத்தையும் கொடூர முறையில் கொலை செய்து வீட்டையும் தீக்கிரையாக்கிய கொடுஞ்செயல் இராணுவ விசாரணையின் போது நிரூபணம் ஆனது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைவீரர் ஸ்பீல்மென்னுக்கு 110 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்வதாகவும், அவரது அனைத்துப் பணி ஓய்வு ஊதியங்களையும் ரத்து செய்வதாகவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இக்கொடுஞ்செயலுக்குக் காவலாக இருந்து துணைபுரிந்த பிரையன் ஹோவர்டு என்ற இன்னொரு படைவீரருக்கு 27 மாத சிறைதண்டனை அளித்து இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கொடுஞ்செயலோடு தொடர்பு உடைய கிரீன் என்ற இன்னொரு படைவீரர் மீது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதை வாசித்தீர்களா? :   ஹாஜிக்கா...!