பகிரங்க விவாதத்திற்கு போப்பிற்கு அழைப்பு

{mosimage}ஜெர்மன் சுற்றுப்பயணத்தின் போது கடந்த செவ்வாய் கிழமை ஒரு கல்லூரியில்  சொற்பொழிவாற்றுவாற்றிய கிறிஸ்த்துவ மத தலைவரான 16-ஆம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மத் நபியைக் குறித்து வெளியிட்ட கருத்துக்களை எதிர்த்து உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கண்டனங்கள் அதிகரித்துள்ளன.

இஸ்லாத்தைக் குறித்தும் தூதர் நபி(ஸல்) அவர்களைக் குறித்தும் 16-ஆம் போப் பெனடிக்ட் கூறிய விஷமத்தனமான கருத்துக்களைத் தொடர்ந்து இஸ்லாம்-கிறிஸ்தவ பற்றிய ஓர் திறந்த வெளிப்படையான  விவாதத்திற்கு போப் தயாரா? என கத்தர் பல்கலை கழகத்தில் ஷரீஅத் பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் முஹம்மத் ஆயாஸ் அல் குபய்ஸி அறைகூவல் விடுத்துள்ளார்.

விவாதத்திற்கு தயாராக அழைப்பு விடுத்து போப்பிற்கு ஆயாஸ் கடிதம் அனுப்பினார். கடிதத்தின் நகல் ஒன்றினை அல் ஜஸீரா செய்தி தளத்திற்கும் அவர் அனுப்பியிருந்தார். போப்பின் இது போன்ற கருத்துக்கள் கிழக்கு மற்றும் மேற்குலகிற்கிடையில் மதரீதியாகவும், கலாச்சார ரீதியிலும் குழப்பங்களை உருவாக்கும் என அக்கடிதத்தில் முஹம்மத் ஆயாஸ் குறிப்பிட்டிருந்தார். இஸ்லாமிய கொள்கைகளை தெளிவாக படிக்காதது தான் போப் இது போன்ற கருத்துக்கள் வெளியிடக் காரணம் என்றும், இராக்கையும் ஆப்கானையும் தன்னுடைய சுய இலாபங்களுக்காக ஆக்ரமித்த அமெரிக்காவின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு போப்பின் இது போன்ற கருத்துக்கள்  மேலும் ஊக்கம் அளிக்கும் என்றும்,  இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கமாக இருப்பின் அரபு-முஸ்லிம் நாடுகளில் பணியிலிருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிமல்லாதோர் இங்கு நிம்மதியாக வேலையில் தொடர முடியுமா? என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டி ஆயாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாத்தில் நிர்பந்தம் கிடையாது என குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது. சமூகங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த வேண்டிய கடமையுள்ள போப் இரு பெரும் மதப்பிரிவுகளுக்கிடையில் இடைவெளியை கூட்ட முயற்சிப்பது எதனால் என்பது தனக்கு புரியவில்லை எனவும் அக்கடிதத்தில் வருத்தம் மேலிட ஆயாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிஞர் என முஸ்லிம் உலகால் சிறப்பிக்கப்படும் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் போப்புக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நவீன உலகில் இஸ்லாத்திற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் கூட்டு சதியின் தொடரே கிறிஸ்த்துவ மத மேதாவியின் முட்டாள்தனமான புதிய அறிக்கை என்றும் கேலிச்சித்திரம் மூலம் இறை தூதரை கேவலப்படுத்த முயற்சித்தவனை விட மிகமோசமான செயல் இது என்றும் கத்தாரில் உள்ள உமருல் ஃபாரூக் மஸ்ஜிதில் கடந்த வெள்ளி ஜும்ஆ பிரசங்கத்தில் அவர் கூறினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக மக்கள் முழுவதற்கும் நியமிக்கப்பட்ட தூதரின் இலட்சியம் என்னவாக இருந்தது என்பதை, இனியும் புரிந்து கொள்ளாதவர்கள் தங்களுடைய சொந்தக் கொள்கைகளையாவது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரதேசத்தை கடந்து செல்லும் கிறிஸ்தவர்கள் அப்பிரதேசத்திலுள்ள ஆண்களை முழுவதும் வாள் கொண்டு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று பைபிளின் புதிய ஏற்பாடும், யூதர்கள் கடந்து செல்லும் இடங்களில் உள்ள அந்நிய வர்க்கத்தை ஒன்றையும் மீதி வைக்கக்கூடாது என்ற பைபிளின் பழைய ஏற்பாட்டின் வசனங்களைத் தான் இவர்கள் தற்போதும் பின்பற்றுவதாக யூத மற்றும் கிறிஸ்தவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நுழைந்த கிறிஸ்தவர்கள் பைபிளின் இச்சட்டங்களை நடைமுறைபடுத்தியிருக்கின்றனர். யூதர்கள் மத்திய ஆசியா பகுதிகளில் இதனை நடைமுறைபடுத்த முயற்சிக்கின்றனர். அமெரிக்காவின் தலைமையிலுள்ள கிறிஸ்தவ-யூத லாபியும் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தவே முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தான் இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டது என்ற புழுத்து நாறிய வசனங்களுடன் அடிக்கடி அறிக்கை வெளியிடுகின்றனர் என்று யூசுப் அல் கர்ளாவி பேசினார்.
 
மேலும் இஸ்லாத்தையும் தூதரையும் அவமானப்படுத்த முயற்சிக்கும் யாருடைய செயலையும் முஸ்லிம் உலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என அவர் எச்சரிக்கை விடுத்தார். நசுக்கப்படுவதற்க்கு எதிராக பொறுமையோடு இருப்பதற்கல்லாமல், நம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் எதிர்ப்பதற்கே கவுரவமுடைய சமூகத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. என்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, முஸ்லிம் சமூகத்திற்கெதிராக ஒருங்கிணைந்துள்ள எதிரிகளை எதிர்கொள்ள முஸ்லிம் உலகம்  ஒற்றுமையுடன்  தயாராக வேண்டும் என அவர் முஸ்லிம்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
 
போப்பின் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனத்திற்கு எதிராக ஷியாக்களின் ஆன்மீக தலைவர் அஹ்மத் காதமியும் கடும் கண்டனத்துடன் அறிக்கை வெளியிட்டார். இஸ்லாத்தைக் குறித்து தெளிவாக படிக்காமல் வெட்கமின்றி போப் கூறியது துர்பாக்கியகரமாகி விட்டது. இதுபோன்ற அவதூறுகள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரவலாக்கும் என அவர் கூறினார்.

இதை வாசித்தீர்களா? :   ஜிஹாத் என்று பெயரிட ஜெர்மன் அரசு விதித்த தடை அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கம்