கத்தர் நாட்டிற்கு வருகை தரும் கல்வியாளர் CMN சலீம்!

CMN சலீம்
CMN சலீம்

மூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் அமைந்து கொண்டுள்ள கல்லூரி பற்றி ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாகிக் கொண்டு வரும் இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம்.

இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட இந்தச் சிறப்புமிகு முயற்சியில் நீங்களும் கரம் கோத்து, இறைவனுடைய அருளைப் பெறலாம்.

மேற்கண்ட கல்லூரி தொடர்பான, சகோதரர் CMN சலீம் அவர்களின் சுற்றுப் பயணத்தின் ஓர் அங்கமாக, இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26-09-2012 அன்று கத்தருக்கு வரவிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். சகோ. சலீம், 29-09-2012 வரை கத்தரில் இருப்பதால், (புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் அமைய உள்ள ‘அன்னை கதீஜா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி’யின் அறிமுகம் மற்றும் பங்கு சேர்க்கை குறித்த) விபரங்கள் அறிய விரும்புவோர் சகோ CMN சலீம் அவர்களைக் கீழ்க்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். (நிகழ்ச்சி விபரங்கள் விரைவில்)

தமிழகத் தொடர்புக்கு:

கத்தரில் நிகழ்ச்சி

மற்றும் சந்திப்புகள் தொடர்புக்கு:

CMN சலீம்

தலைவர், சமூக நீதி அறக்கட்டளை

129/64 தம்புச்செட்டித் தெரு,

மண்ணடி, சென்னை -1

தொலைபேசி : +91-44-25225784

அலைபேசி : +91-9382155780

மின்னஞ்சல் : cmnsaleem@yahoo.co.in

 

சகோதரர் அப்துல் ரஹ்மான் : +974 – 33051519

சகோதரர் சிராஜுத்தீன் : +974 – 55471661

சகோதரர் முஷ்தாக் : +974 – 55465678

இதை வாசித்தீர்களா? :   பிபிசியின் நிஜ முகம்