செங்கோட்டையை அசத்தும் இளம் ‘கலைக்களஞ்சியம்’!

{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து வரும் ஷேக் ராஜா-ராபியத்துல் பஷரிய்யா தம்பதிக்கு இரு குழந்தைகள் உளர்.

மூத்த குழந்தையான மஹ்பூப் நிஷா(4) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் UKG படித்து வருகிறார்.

இந்தச் சிறுமியின் திறமையைக் கண்டு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் விக்கித்து நிற்கிறார்கள்.

ஆசிரியர்களுக்குக் கூட தெரியாத பல தகவல்களைக் கேட்டவுடன் சொல்லி விடுகிறார் மஹ்பூப் நிஷா.

இவர், உலகின் 195 நாடுகளின் பெயர்கள், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மற்றும் உலக நாடுகளின் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள், தலைவர்களின் பெயர்கள், யூனியன் பிரதேசங்கள், 50 திருக்குறள், திருமறை குர்ஆனில் சூராக்கள் பகுதி, உலகின் பல நாடுகள் எந்த ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன, நாடுகளும் அவற்றின் தேசியச் சின்னங்களையும் அடி பிறழாமல் சுமார் 20 நிமிடம் அருவி நீராய்க் கொட்டி அசத்தும் இம்மாணவி 10க்கும் மேற்பட்ட கோப்பைகள், பதக்கங்களை பெற்றுள்ளார்.

இரண்டரை வயது முதல் தாய் ராபியத்துல் பஷரிய்யா இவருக்குப் பயிற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தென்காசி வட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் இம்மாணவி கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி வருகிறார்.

 

தகவல் நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

இதை வாசித்தீர்களா? :   இணைந்தது சமுதாயம் ! எதிரிகளுக்கு அதிர்ச்சி!!