மும்பையைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் ஓர் அமைதி மாநாடு!

மீண்டும் ஒரு முறை, மும்பையைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அமைதி நோக்கு (Peace Vision of Islam) என்ற நோக்கத்தைக் கருவாக கொண்டு 10 நாட்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. ஜனவரி 11 முதல் 20 ஜனவரி வரை,காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை, இம்மாநாடு சென்னை அண்ணா சலையில் உள்ள மதரஸா ஏ ஆஜம் மேல்நிலை பள்ளி, (L.I.C மற்றும் ஸ்பென்ஸர் சந்திப்பு அருகில்) வளாகத்தில் நடைபெற உள்ளது. மகளிருக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், மதம் எதையும் சாராதவரும் இதில் கலந்து கொள்ளலாம். இம்மாநாட்டில் கலந்துகொள்ள எவ்வித நுழைவுக் கட்டணமும் இல்லை.

உலக அமைதிக்கு வழி வகுக்கும் உன்னதமான நோக்கத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்து டாக்டர் பிலால் பிலிஃப்ஸ், அப்துர் ரஹ்மான் கிரீன், யூஸுஃப் எஸ்டஸ், டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற தலைசிறந்த பேச்சாளர்கள் பலர் இந்த பத்துநாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமது கருத்துக்களை தக்க சான்றுகளுடன் எடுத்து வைக்க உள்ளார்கள். சென்னையிலும் மும்பையிலும் இதற்கு முன்னர் நடந்த இது போன்ற 10 நாட்கள் அமைதி மாநாடுகள் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இம்மாநாட்டில் தமிழ், மலையாளம் மற்றும் உருது மொழியிலும் சிறந்த பேச்சாளர்களின் உரைகள் நடைபெறும் மேலும் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தமது சந்தேங்களை நேரடியாகக் கேட்டு பதில் பெறவும் இயலும் என்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

இம்மாநாட்டில் உள்ள கண்காட்சிகள் மூலம் அமைதியின் தூதை அழகான முறையில் எடுத்துரைக்கும் விதம் அனைவரின் உள்ளத்தையும் கவரும். இது தவறவிடக் கூடாத ஒரு அரிய நல் வாய்ப்பாகும். மேலும் இதில் ஹலால் பொருள்களின் கண்காட்சி மற்றும் ஸ்டால்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயந்திரம் போல் இவ்வுலகில் இயங்கும் மனித குலம் அமைதியெனும் இறை அருளைப் பெற வழி வகுக்கும் இந்தப் பத்து நாட்கள் மாநாடுகளில் அனைவரும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பலன் பெற தமது நேரங்களை ஒதுக்கி முயல வேண்டும், இம்மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் விதமாக தமது அலுவல்கள் மற்றும் விடுமுறைகளை அமைத்து இதில் தாமும் தமது குடும்பத்தினர், நண்பர்கள் என்று அனைவரும் கலந்து பலன் பெற நாம் அனைவரும் முயல வேண்டும்.

இது குறித்த மேலதிக விபரங்களை இம்மாநாட்டின் தளச்சுட்டியிலும், இணைப்பில் உள்ள அறிவிப்பிலும் காணலாம். இயன்றவரை அதிகமானோருக்கு இச்செய்தியை எடுத்துரைப்பதுடன் இதன் மூலம் நாமும் முழு மனிதகுலமும் பலன் பெற பிரார்த்திப்போமாக.

இதை வாசித்தீர்களா? :   இயற்கை மார்க்கத்திற்கு மீண்ட சகோதரிகள்!