சென்னை புத்தகக் கண்காட்சி – 35

ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 5-17 தேதிகளில் இரண்டு வாரங்களாக நடைபெறவுள்ளது.

இந்தப் புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் வியாழன் (5.1.2012) மாலை 5 மணிக்குத் தமிழகச் சட்டமன்ற அவைத் தலைவர் ஜெயக்குமார் தொடங்கிவைக்க இருக்கிறார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் 682 அரங்குகள் இடம் பிடித்துள்ளன; தமிழ், ஆங்கிலம் தெலுங்கு, இந்தி போன்ற இந்திய மொழி நூல்களும் பிரஞ்சு, ஆங்கிலம் போன்ற வெளிநாட்டு மொழிகளின் நூல்களும் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன.

திறப்பு விழா நாளான 5.1.2012 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும்,
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும்,
பிற நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக விற்பனைக்கு அரங்குகள் திறந்திருக்கும்.

புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ஓராளுக்கு 5 ரூபாய். 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்-சிறுமியருக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இந்தக் கண்காட்சியில் வாங்கப்படும் நூல்களுக்கு அதன் சில்லறை விற்பனை விலையிலிருந்து 10 விழுக்காடு தள்ளுபடி உண்டு.

இறைமறை குர்ஆனின் விளக்கவுரையான தஃப்ஸீர் இபுனு கஸீர் மற்றும் நபிவழித் தொகுப்பு நூல்களின் தமிழ் வெளியீட்டாளர்களான ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவனத்தினர் இந்தப் புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளனர்:

போலவே, புகழ்பெற்ற IFT நிறுவனமும் அரங்கு அமைத்து, நிறுவனத்தின் நூல்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.

இதை வாசித்தீர்களா? :   கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!