‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

Share this:

‘மதமாற்றத்தைத் தடுத்ததால் கேட்டரிங் ஏஜண்ட் ராமலிங்கம் படுகொலை…’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

*நடந்தது மதமாற்றமல்ல; மதப் பரப்புரை மட்டுமே. அது சட்டப்படியானது. இந்திய அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தரும் உரிமை அது.

Freedom of religion in India is a fundamental right guaranteed by Article 25-28 of the Constitution of India. Every citizen of India has a right to practice and promote their religion peacefully. Article 25 says “all persons are equally entitled to freedom of conscience and the right to freely profess, practice, and propagate religion subject to public order, morality and health.”
  • சட்டப்படி நடந்த ஒரு நிகழ்வில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலைச் சட்டவிரோதமாகச் செய்தவர் ராமலிங்கம்.
  • தேசத்தின் பிதாவான மகாத்மா காந்தியை, “அயோக்கியப் பயல்” என்று குறிப்பிட்டதோடு, காந்திஜியைப் படுகொலை செய்த கோட்சேயை, “என் அண்ணன்” என்று கூறியதோடு அல்லாமல், “காந்தியைக் கொலை செய்தது சரிதான்” எனவும் தேசவிரோதப் பேச்சு பேசியவர் கோட்சேயின் சித்தாந்தத் தம்பி ராமலிங்கம்.

  • “முஸ்லிம்கள் இந்தியாவில் வாடகைக்குக் குடியேறிய அந்நியர்கள்” என, பிரிவினையைத் தூண்டும் மதவெறிப் பேச்சுகளைப் பேசி, கலகம் செய்தவர் ராமலிங்கம்.
  • முஸ்லிம்களின் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி அவர்களின் நெற்றியில் திருநீறு பூசி அத்துமீறி அடாவடித்தனம் செய்தவர் ராமலிங்கம்.

இத்தனை சட்டமீறல்களிலும் அடாவடித்தனத்திலும் ராமலிங்கம் ஈடுபட்டபோதும், அவ்விடத்தில் பொது அமைதி கெட்டுவிடாமல் அமைதிகாத்தவர்கள் முஸ்லிம்கள்.

இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டே அவற்றைக் குறித்து வாயே திறக்காமல்,

  • கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுள் எவரும் என் தந்தையினைக் கொல்ல வந்தவர்கள் அல்லர்” என்று நிகழ்வை நேரில் பார்த்த சாட்சியும் ராமலிங்கத்தின் மகனுமான ஷியாம் சுந்தர் கூறிய பின்னரும்,
However, Ramalingam’s son, 17-year-old R Shiyamsundhar, who was with his father when he was attacked, told Scroll.in that none of the arrested men had been in the group that had killed his father. “I saw the pictures of those arrested,” said Shiyamsundhar. “They did not attack my father. I have never seen the persons who attacked him before. They were not from this town. They were outsiders and smelled of alcohol.”
நன்றி : ஸ்க்ரோல்.இன்

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில்,

‘மதமாற்றத்தைத் தடுத்ததால்தான் ராமலிங்கம் படுகொலை’ என செய்தி வெளியிடும் உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா?

சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்திலும் மதக்கலவரத்தை உருவாக்கும் வகையிலும் பொய்ச் செய்தி பரப்பும் இத்தகைய சட்ட விரோதச் செயல்பாடுகளை இனிமேலாவது நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ராமலிங்கத்தின் மரணத்துக்குக் காரணமானவர்கள் முஸ்லிம்களா, இந்துத்துவ பயங்கரவாதிகளா, சொந்தக்காரர்களா, கட்சிக்காரர்களா என்பதல்ல இங்குப் பேசுபொருள். வெட்டியவன் எவனாக இருந்தாலும் அவன் குற்றவாளியே. குற்றவாளிக்குத் தக்க கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பதே பேசுபொருளாக வேண்டும். அத்துடன், ராமலிங்கம் செய்தது போன்று சட்ட விரோதமாக அடாவடித்தனங்களில் ஈடுபட்டுப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். அதுவே நாட்டின் நலனுக்கும் சமூக நலனுக்கும் உகந்தது.

ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய தூணான நீங்களே அதனைக் குழிதோண்டி புதைப்பதற்கான வேலைகளைச் செய்கின்றீர்கள் என்பதை உணருங்கள்!

இனியாவது செய்திகளின் தன்மையை ஆராய்ந்து, பொறுப்புணர்வுடன் நேர்மையாக வெளியிடுங்கள்!

— அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.