மும்பையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை: சிவசேனா தலைவர் கைது

மும்பை, செப். 6–

மும்பையைச் சேர்ந்தவர் வாசுதேவ் நம்பியார். சிவசேனா கட்சியின் துணைத் தலைவரான இவர் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு படிக்கும் 15 வயது மாணவியை வாசுதேவ் நம்பியார் ஆசைவார்த்தை கூறி கற்பழித்தார்.

தொடர்ந்து மாணவியை மிரட்டியே கற்பழித்து வந்துள்ளார். இதை வெளியில் சொன்னால் பள்ளியில் இருந்து நீக்கி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி நடந்த சம்பவம் பற்றி வெளியே சொல்லவில்லை.

இதை சாதகமாக பயன் படுத்தி வாசுதேவ் நம்பியார் கடந்த 7 மாதமாக மாணவியை கற்பழித்து வந்தார். இதில் கர்ப்பமான மாணவி அதையும் வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார்.

இந்த நிலையில் மாணவிக்கு 7 மாதத்திலேயே குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறினாள்.

இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தி சிவசேனா தலைவர் வாசு தேவ் நம்பியாரை கைது செய்தனர்.

– மாலைமலர் (Sep 06, 2014)

 


சிறுமி பலாத்காரம்: சிவசேனா உள்ளூர் தலைவர் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 61 வயதாகும் சிவசேனா கட்சியின் உள்ளூர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவியான அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து இந்த பலாத்கார சம்பவம் வெட்டவெளிச்சமானது.

கைது செய்யப்பட்டுள்ளவரின் பெயர் வாசுதேவ் நம்பூதிரி. அவர் சிவசேனா கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். காசிமீரா நகரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது பள்ளியில் படித்து வந்த 9-ம் வகுப்பு மாணவியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் அச்சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் வாசுதேவ் நம்பூதிரியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தி இந்து (தமிழ்) செப்டெம்பர் 7, 2014

 


62-year-old Shiv Sena leader held for raping minor in Mumbai

MUMBAI: A Shiv Sena deputy district president, Vasudev Nambiar (62), has been arrested for allegedly sexually exploiting a 15-year-old Mira Road girl over nine months.

இதை வாசித்தீர்களா? :   ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்: மோடி

The girl, who was seven months pregnant, recently delivered a premature boy.

The Kashimira police said Nambiar has been sexually abusing the class IX student, who used to visit a temple run by him, since January.

When she got pregnant, he threatened her. Her parents found out about the abuse only when she got pregnant.

On Thursday, the survivor filed a police complaint and Nambiar was booked under IPC section 376 (rape) and the Protection of Children from Sexual Offences Act.

– Times of India