பயங்கர வெடிபொருள்களுடன் நால்வர் மும்பையில் கைது

மும்பையில் இன்று அதிகாலை ஆறரை கிலோ எடையுள்ள TNT என அறியப்படும் ட்ரைநைட்ரோடொலுவீன் (Trinitrotoluene) என்ற பயங்கர வெடி பொருட்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் வடகிழக்கில் உள்ள மேற்கு ரயில்வேயைச் சேர்ந்த அந்தேரி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அந்த நால்வரிடம் இருந்து ஒரு தொலைபேசி துப்பு மூலம் கைது செய்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் இருவர் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த சாகு கெய்க்வாட், கவுதம் தெலோர் என்று போலீசார் கூறியுள்ளனர்.

அவர்களிடம் இந்த வெடி பொருட்கள் எப்படி வந்தது என்றும் அவர்கள் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் ஜனவரி 26 குடியரசு நாளன்று நாசம் விளைவிக்க இவர்கள் திட்டம் தீட்டியுள்ளார்களா என போலீசார் விசாரித்து வருவதாக V K சௌபே என்ற காவல் உயரதிகாரி தெரிவித்தார்.

இதற்கு முன் மும்பையில் கடந்த ஜூலையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180 பேர் மாண்டதும், இந்த குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்கள் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

இம்முறை கைது செய்யப்பட்டோரின் பெயர்கள் முஸ்லிம் பெயராக இல்லாததால் பிரபல ஊடகங்கள் இச்செய்தியை பிரதானமாக வெளியிடவில்லை.

இதை வாசித்தீர்களா? :   ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் முன்னோடி - திப்புசுல்தான் (இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு)