அறிவுப் போட்டி – 13 : விடைகளும் வெற்றியாளர்களும்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் – 13இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 18 பேர் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

01) ஆதில் mbe…gmail.com
02) அப்துல் ஹமீத் hameed742…gmail.com
03) அப்துல் மஜீத் majeed_..yahoo.com
04) அப்துல் நஸீர் ஏ.பி. zaihaft…yahoo.co.in
05) அபு abusi…yahoo.in
06) அஹ்மது allam1…rediff.com
07) அஸ்மா msasma2…yahoo.com
08) ஆயிஷா aysj…gmail.com
09) ஆயிஷத் kaniays_1…yahoo.com
10) பாஸித் basith_…yahoo.co.in
11) ஃபெரோஸ்கான் ஏ. fekhan1…gmail.com
12) ஈமான் ummiim…gmail.com
13) கே.ஏ. ஹஃப்ஸா ருக்கையா zaihaft…yahoo.co.in
14) மர்யம் பீவி mariamaad…yahoo.com
15) முஹம்மது ஸாலிஹ் mohdaa…hotmail.com
16) முஹம்மது யூஸுஃப் muhamedyu…gmail.com
17) சாம் அப்துல் பாஸித் basit…gmail.com
18) தாஹா அல்லாம் alallam…hotmail.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 18 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி ஆயிஷா (வரிசை எண் 08) – முதலாம் பரிசு
(2) சகோதரர் முஹம்மது யூஸுஃப் (வரிசை எண் 16) – இரண்டாம் பரிசு
(3) சகோதரி ஆயிஷத் (வரிசை எண் 9) – மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-13க்கான சரியான விடைகள்:

வினா-01: அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களின் தாயார் பெயர் என்ன?

விடை : ஸுமைய்யா (ரலி)


வினா-02: “இந்தியாவின் வறுமையை இஸ்லாமிய வங்கிகளால் தீர்க்க இயலும்!” என்ற தோஹா வங்கி அதிகாரி யார்?

விடை : ஆர். சீதாராமன் (https://www.satyamargam.com/1183)


வினா-03: அண்மையில் இந்தியப் பிரதமர் பயணம் செய்த, இஸ்லாமிய வங்கிகள் செயல்படும் நாடு எது?

விடை : மலேஷியா (https://www.satyamargam.com/1583)


வினா-04: நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் எத்தனை தடவை உம்ரா செய்தார்கள்?

விடை : 4 தடவை


வினா-05: நூறு ஒட்டகங்களுக்காக நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய நினைத்தவர் யார்?

விடை : ஸுராக்கா (ரலி) (https://www.satyamargam.com/1577)


வினா-06: இரு வாருடையவர் என்று அழைக்கப் பட்டவர் யார்?

இதை வாசித்தீர்களா? :   அறிவுப் போட்டி - 14 : விடைகளும் வெற்றியாளர்களும்

விடை : அஸ்மா (ரலி) (https://www.satyamargam.com/1590)


வினா-07: அபூஜஹ்லுடைய உண்மையான பெயர் என்ன?

விடை : அம்ரிப்னு ஹிஷாம்


வினா-08: ஹிஜ்ரத்தின் போது நபி (ஸல்) அவர்கள் எதிரிகள் கண்ணில் படாமல் மறைந்து தங்கி இருந்த இடம் எது?

விடை : தவ்ருக் குகை (https://www.satyamargam.com/1590)


வினா-09: அகழ்ப் போரில் அகழ் வெட்டும் யோசனையளித்த நபித் தோழர் யார்?

விடை : ஸல்மானுல் ஃபாரிஸீ (ரலி) (https://www.satyamargam.com/1415)


வினா-10: “தொழுகை, முஃமின்கள்மீது நேரம் குறிப்பிட்ட கடமையாக உள்ளது” எனும் இறைவசன எண்?

விடை : 4:103


 

மதிப்பெண் இல்லா உபரிக்கேள்வி:

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இடம் பெற்றுள்ள தன்ஜில் குர்ஆன் ஒலிப்பேழையில் (Recitation) மொத்தம் எத்தனை காரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன?

விடை : 25 (https://www.satyamargam.com/quran)

oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 13இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.