கஸ்தூரியும் கொல்லன் உலையும்

இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உள்ள உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம், அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! ஆனால் கொல்லனின் உலை (நீங்கள் அதன் நெருக்கமாகவோ அலட்சியமாகவோ இருந்தால்) உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும், அல்லது  அவனிமிருந்து கெட்ட வாடையை (விலை கொடுத்து வாங்காமலே)பெற்றுக்கொள்வீர்." றிவிப்பவர்: அபு மூஸா (ரலி); நூல்: புகாரி; ஹதீஸ் எண்: 2101.

இன்றைய நவீன உலகில் மனிதர்கள், நண்பர்களெனும் வகையில் என்றும் இல்லாத அளவு அதிகமாக பிணைந்துள்ளார்கள் என்பது யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை நிலையாகும்.

வ்வுலகை ஆட்கொண்டிருக்கும் இன்றைய நவீன அறிவியல் சாதனங்கள் மனித குலத்தை உலக அளவில் ஒரு குடும்பமாக, மிக நெருக்கமாக ஆக்கக்கூடிய நிலையில் இன்று மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

  

மொபைல் போன்கள், SMS போன்றவற்றில் துவங்கி இன்டெர்நெட் மூலம் இமேஜிங், வீடியோ மெயிலிங், வீடியோ சாட்டிங் எனும் நிலைவரை இன்று தொலைத் தொடர்பு சாதனங்கள் சர்வசாதாரணமாக மனித சமுதாயத்தின் பிரிக்கவியலா அங்கமாகி உலக அளவில் நண்பர்கள் வட்டாரத்தையும் பெருக்கிவிட்டது.

 

இது போன்ற உயர்தொழில் நுட்பங்களினால் மிகுந்த பயன்கள் மனித சமுதாயத்திற்கு விளைந்திருந்தாலும், பல்வேறு தீமைகளையும் மனித குலம் நேரிட்டுக் கொண்டிருக்கிறது. இதனைப்பற்றி இந்த நபிமொழியின் வெளிச்சத்தில் சிந்தித்து எச்சரிக்கையாக இருக்கவும், சமூகத்தின் இளைய தலைமுறையை எச்சரிக்க வேண்டிய கடமையுணர்வுகள் பரவலாக்க படவேண்டியதும் மிகவும் அவசியமாகிறது.

 

நட்பு மனிதனுக்கு தேவையான ஒன்றே. நல்ல நட்பு மனிதனின் வாழ்வின் ஏற்றத்துக்கு வழிவகுக்கும். கெட்ட நட்பு அவனை சீரழிக்கவும் செய்யும். எனவே நட்புக்கு பாத்திரமானவராக ஒருவரை ஆக்கிக் கொள்ளும் முன் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

ஒரு மனிதர் நட்பு கொண்டுள்ள நல்ல நண்பர் ஒருவரின் மூலம் எந்நாளும் நன்மையே பெறுவார். அவருக்கு ஏற்படும் சிரமத்தின்போது புரிந்துணர்வுடன் அந்த நண்பர் விரைந்து வந்து துன்பத்திலிருந்து விடுவிப்பார். ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து அவரை காப்பாற்றுவார், ஆதரவு தேவைப்படும் சமயங்களில் ஆதரவளிப்பார். தயங்காமல் எல்லாவிதமான நன்மை தீமைகளிலும் பங்கு கொண்டு அவரை நல்வழியில் சந்தோஷமாக மனநிம்மதியாக வாழ உதவுவார்.

 

மேலும், நல்ல நண்பன் என்பவன் ஒருவருக்கு எந்நிலையிலும் உறுதுணையாக இருப்பான். அவரை வழி தவறாமல் பாதுகாப்பான். நல்ல விஷயங்களில் ஈடுபடத் தூண்டுவது மட்டுமின்றி அவரது வாழ்க்கையில் ஒரு ஒளிவிளக்காகத் திகழ்வான். நல்ல நண்பனது ஒளியினால் நேர்வழியில் நடைபோடலாம். றை நாட்டத்தினால் இம்மையும் மறுமையும் இதன்மூலம் சீராக வழி பிறக்கலாம். சில சமயங்களில் நல்ல நண்பனின் சிறு அறிவுரை கூட மிகப் பெரியதொரு பலனைப் பெற்றுத் தரும்.

 

இதை வாசித்தீர்களா? :   தனிமனித கடமைகளைப் பேணுதல்

இதனைத் தான் இறைத்தூதரின் மேற்கண்ட அறிவுரையின் முதற்பகுதி பறைசாற்றுகிறது. கஸ்தூரி வைத்திருப்பவனிடமிருந்து கஸ்தூரியை அதற்கு பகரமான விலைக் கொடுத்து வாங்கலாம் அல்லது கஸ்தூரி வைத்திருப்பவனின் அருகில் இருந்தால் அதன் மணம் மட்டுமாவது கிடைக்கும். இங்கு கஸ்தூரியை நல்ல குணத்திற்கும் கஸ்தூரி வைத்திருப்பவரை நல்ல நண்பனுக்கும் உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். என்ன ஓர் அற்புதமான உதாரணம்!

 

ஒருவர் தனக்கு நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நண்பர்களின் குணநலன்கள் எப்படியோ அப்படியே அவரும் மாறிவிடும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. தான் நல்ல நண்பனாக இருந்து தனது நண்பர்களை நல் வழியில் நடைபோடச் செய்ய வேண்டிய பொறுப்பு மனித நேயம் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதை மறந்து, தான்தோன்றித்தனமாக இருக்கக்கூடாது. மேலும் அவ்வாறு இருப்பவரை நண்பராக்கவும் கூடாது.

நண்பன் என்பவன் தனது சக நண்பனின் நலனை நாடவேண்டும. அவனுக்கு எந்த விதத்திலும் (இம்மையிலோ மறுமையிலோ) நஷ்டம் ஏற்பட்டு விடும்படியான காரியங்களைச் செய்யக்கூடாது.

சக நண்பனின் நலனை நாடவேண்டும. அவனுக்கு எந்த விதத்திலும் (இம்மையிலோ மறுமையிலோ) நஷ்டம் ஏற்பட்டு விடும்படியான காரியங்களைச் செய்யக்கூடாது.

 

உலகின் எந்த மூலையில் இருப்பினும் நண்பனுக்கு இயன்றவரை தொடர் முயற்சிகள் மேற்கொண்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், கருத்துக்கள் வழங்கி உதவவேண்டும். நேரான பாதையில் தானும் வாழ்ந்து அவ்வழியில் தனது நண்பனையும் செலுத்த முனைய வேண்டும். இதுவே சிறந்த நட்பின் இலக்கணமாகும்.


இப்படி
ப்பட்ட நண்பர்களை ஒவ்வொருவரும் தேடிப் பெறவேண்டும். அதுபோல் ஒவ்வொருவரும் தானும் அவ்வாறு சிறந்த நண்பனாக மாற முயலவும் வேண்டும். இதில் ஏதும் இயலாமல் போகும் போதே நட்பு எனும் உறவு, நலனை விட கேட்டையே அதிகமாக ஏற்படுத்துகிறது. சமுதாயத்தில் அவ்வப்பொழுது பரவலாக நடைபெரும் சில சம்பவங்கள் இதற்கு சான்று பகர்கின்றன.

 

நல்ல குணங்களுக்கு நேர் எதிர்மறையானவன் தீய நண்பனாவான்.

 

அவனால் ஏற்படுவதோ கொல்லனின் உலையின் பக்கம் இருப்பவர்களுக்கு ஏற்படும் வெக்கையும், வேர்வையும், உடல் எரிச்சலும் போன்று தீமையானவைகளே.

 

இன்றைய நவீன உலகில் தமது உயிருக்கும் மேலாக கருதும் இந்த நட்புறவுகளின் மூலமாக ஒருவர் கஸ்தூரியின் பலனையோ மணத்தையோ பெறுவதை விடவும் அதிகமாக இளைய தலைமுறையினர், கொல்லனின் உலையின் இதமான வெட்பத்தில் தம்மை உட்படுத்தி இன்பம் கிடைப்பதாக கருதி தம்முடைய வீடுகளையும் தமது இறையச்சம் எனும் மிகச் சிறந்த ஆடைகளையும் எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர் என்பது மறுக்கவியலா உண்மையாகும்.

 

ம். இது தான் இன்றைய நவீன அறிவியல் உலகம் இளைய தலைமுறையினருக்கு அளித்திருக்கும் பரிசு ஆகும்.

 

நல்ல நண்பனின் நற்பண்புகள் அவருடன் நட்புறவு வைத்திருப்பவரிடம் எளிதாக வந்து விடும். ஒருவரது குறைகளும், தவறுகளும், கவனக்குறைவான மனப்போக்கும் மாறி ஒரு கட்டுக்கோப்பான நிலையில் வரது வாழ்க்கை ப் பயணம் தொடர்வது நல்ல நட்பினால் ஏற்படலாம். நல்ல பழக்க வழக்கங்கள், நல்லொழுக்கங்கள், நல்ல விஷயங்களின் ஞானம் வளர்ந்து அவருக்கு இலாபகரமாகலாம்.

இதை வாசித்தீர்களா? :   அல்குர்ஆன்

 

ஆனால் தீய நண்பன் மூலம் அவருக்கு தீய பழக்க வழக்கங்கள், தீய பண்புகள், தீய செயல்களில் ஈடுபாடு ற்பட்டு அவரது இம்மை மறுமை வாழ்க்கை பாழாகும் விதத்தில் அவரின் நிலை மாறிவிடலாம்.

ஆனால் தீய நண்பன் மூலம் அவருக்கு தீய பழக்க வழக்கங்கள், தீய பண்புகள், தீய செயல்களில் ஈடுபாடு ற்பட்டு அவரது இம்மை மறுமை வாழ்க்கை பாழாகும் விதத்தில் அவரின் நிலை மாறிவிடலாம்.

 

மது, மாது, மோசடி, சூதாட்டம் போன்ற பல தீய பழக்கங்களுக்கும் தீயநட்பே பெரும்பாலும் காரணம். இதன் மூலம் இம்மை மறுமை இரண்டிற்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடும். இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டு.

 

தமது பொறுப்புகளைப் பற்றி இறைவனிடம் பதிலளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மக்கள் குடியிருப்புப் பகுதி, பள்ளிக்கூடம், கல்லூரிகள், அலுவலகம், பேனா நட்புகள் முதல் இன்றைய இதர (மிக பாதகமான)மொபைல் SMS மற்றும் அரட்டை சேவை நட்புகள் வரை எல்லா இடங்களிலும், தலைவராகவும், பெற்றோர்களாகவும், கணவன், மனைவி, சகோதரர் என எல்லா நிலைகளிலும், சமூகத்தில் ஒவ்வொருவரும் ஏற்படுத்தியுள்ள  ற்படுத்தவிருக்கும் வல்ல நட்புறவுகள் மூலமாக, சமூகம் எனும் வீட்டை அதன் சூபிட்சத்திற்கு அவசியமான ஒழுக்க மாண்புகளை வலியுறுத்தும் "இறையச்சம்" எனும் வலுவான அடிக்கல்லை உறுதியாக்கி கஸ்தூரி மணம் வீசும் உன்னத சமூகமாக அதனை மாற்றி வாழ ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.

 

இல்லையென்றால்…

 

இம்மையின் வீடும் ஆடையும் எரிவதை எவரும் காணவில்லையென்றாலும் மறுமையின் வீட்டையும், ஆடையையும் இம்மையிலேயே எரித்து சாம்பலாக்கி விட்டு, மறுமையில் இறைவெறுப்புக்கு வழிவகுத்த அந்த கூடா தீய நட்புகளோடு என்றென்றும் எரியும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

இன்றைய இந்த வெளிப்படையான/மறைமுகமான தீயநட்புறவுகளின் பாதிப்புகள் இன்று ஒருவேளை வெளிப்படாவிட்டாலும் அது மறுமை எனும் அனைத்தும் வெட்டவெளிச்சமாக்கப்படும் அந்நாளில் அவசியம் வெளிப் பட்டே தீரும் என்பதை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிக்க முயல வேண்டும். தூய்மையான இறைவழியை தமது வாழ்வின் அடிப்படையாக்கி அதை தன் நட்புறவுகளுக்கும் குறிப்பாக இளைய தலைமுறைகளுக்கும், பொதுவாக முழு மனித சமூகதிற்கும் போதித்து கஸ்தூரியை உதாரணமாகக் கூறி இறைத்தூதர் எடுத்தியம்பிய இவ்வாழ்வியல் நெறி எனும் நறுமணத்தை உலகெங்கும் பரப்பவேண்டும்.

 

இறைத்தூதரின் வழியை முழுமையாகப் பின்பற்றி, தூய கஸ்தூரியைப் போன்றே மனித வாழ்வில் உள்ள அனைத்து உறவுமுறைகளிலும் ஒழுக்கம் எனும் நறுமணம் வீசிட இறைவன் துணை புரிவானாக! ஆமீன்!

 

ஆக்கம்: இப்னு ஹனீஃப்