ரஹ்மத் அறக்கட்டளையின் மாபெரும் பரிசுப் போட்டி

ரஹ்மத் அறக்கட்டளை
ரஹ்மத் அறக்கட்டளை

“உலக முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு” – The Muslim World League (رابطة العالمي الإسلامي) (சுருக்கமாக “ராபிதா”) எனும் பெயரில் மக்காவில் இயங்கும் அமைப்பு, கடந்த 1976ஆம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டது:

“அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, சான்றுகளோடு எழுதித் தருவோருக்கு 1,50,000 ஸவூதி ரியால் அன்பளிப்பு வழங்கப்படும்”

உலகளாவிய ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரின் 1,182 படைப்புகள் ராபிதாவுக்கு வந்து சேர்ந்தன. அவற்றுள் மொத்தம் 171 ஆய்வுகள் அலசப் பட்டன.

அரபு மொழியில் 84, உருது மொழியில் 64, ஆங்கிலத்தில் 21, ஃப்ரெஞ்ச் மொழியில் 1, ச்சாட் நாட்டின் ஹவ்ஸா மொழில் 1 என ஆய்வுக் கட்டுரைகள் பரிசீலிக்கப் பட்டன.

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் கட்டுரைகள் ஆய்வு செய்யப் பட்டன.

இறுதியில் நமது நாட்டின் முபாரக்பூர் (உ.பி) அறிஞர் ஸஃபியுர்ரஹ்மான் அவர்களின் “அர்ரஹீக்குல் மக்தூம் – முத்திரையிடப்பட்ட முற்றமுது” முதல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, 50,000 ஸஊதி ரியால் பரிசளிக்கப் பட்டது.

இரண்டாவது பரிசு பெற்றவரும் இந்தியரே. புதுடெல்லியைச் சேர்ந்த முனைவர் மாஜித் அலீகான் அவர்களின் ஆங்கில ஆய்வு இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 40,000 ஸஊதி ரியால் வழங்கப்பட்டது.

பகிஸ்தானைச் சேர்ந்த முனைவர் நாஸிர் அஹ்மது அவர்கள் உருது மொழியில் எழுதிய ஆய்வுக் கட்டுரை மூன்றாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 30,000 ஸஊதி ரியால் வழங்கப்பட்டது.

எகிப்துப் பேராசியர் ஹாமித் மஹ்மூது அவர்களின் அரபி ஆய்வுக் கட்டுரை நான்காம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 20,000 ரியால் வழங்கப்பட்டது.

ஸஊதிப் பேராசியர் அப்துஸ்ஸலாம் ஹாஷிம் அவர்களின் அரபி ஆய்வுக் கட்டுரை ஐந்தாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 10,000 ரியால் வழங்கப்பட்டது.

ராபிதாவை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டி ஒன்றை, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் விபரம் பின்வருமாறு:

சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும்

மாபெரும் பரிசுப் போட்டி

உலகப் பெருந்தலைவர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு

உலகம் போற்றும் உன்னதத் தலைவர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வரலாற்றை அழகுத் தமிழில், ஆய்வு நடையில், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்துச் சமூகத்தாரையும் கவரும் வண்ணம் வெளியிட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

அண்ணல் நபிகளாரின் புனித வரலாற்றைத் தமிழ் உலகம் நேசிக்கும் வண்ணம் எழுதும் எழுத்தாளருக்கு “ரூபாய் ஒரு இலட்சம் பரிசும் பாராட்டுப் பத்திரமும்” வழங்கி கௌரவிக்க சென்னை ரஹ்மத் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் தலைமையில், ஒரு மார்க்க அறிஞர், ஒரு தமிழறிஞர் ஆகிய மூவரைக் கொண்ட குழு, சிறந்த படைப்பைத் தேர்வு செய்யும். சிறப்புத் தகுதி படைத்த மற்ற நூல்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளின்படி தங்களது படைப்பைத் தயார் செய்து 31.12.2010க்குள் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

  • நூல் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; அதற்காக முஹம்மத் ஹுசைன் ஹைகல் அவர்கள் எழுதிய ‘ஹயாத்து முஹம்மத்’ எனும் நூலை வழிகாட்டியாகக் கொள்ளவும். இந்நூல் அரபியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

  • கிரவுன் சைசில் 450 பக்கங்களுக்குள் நூல், கணிணி அச்சுச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  • நல்ல தமிழில் அனைத்து சமயத்தாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட வேண்டும்.

  • நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.

  • தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் பிரசுர உரிமைக்குரியதாகும்.

இதை வாசித்தீர்களா? :   மாத்யமம்: ஒரு முஸ்லிம் ஊடகத்தின் வெற்றிப் பயணம்!

 

தொடர்புக்கு : M. A.முஸ்தபா, கைப்பேசி : 95000 37000
ரஹ்மத் பதிப்பகம் : 6, இரண்டாவது பிரதான சாலை,
சி.ஐ..டி.காலனி, மயிலாப்பூர், சென்னை-600 004.
தொலைபேசி : 044 2499 7373;கைப்பேசி : 94440 25000
Website : http://www.rahmath.net, E.mail: buhari@rahmath.net

அண்ணலாரின் வரலாற்றை அறிந்த தமிழ் எழுத்தாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென சத்தியமார்க்கம்.காம் கேட்டுக் கொள்கிறது.