”மூளைச்சாவு” என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காகச் செய்யப்படும் உயிர் கொலை…!

ண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையிலுள்ள ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால், அவருக்கு ”மூளைச்சாவு”  ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடுகின்றனர்.

உயிரோடு இருக்கும் அவரை அறுத்து, அவரது உடலில் நல்லவிதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்றவற்றை அப்படியே வெளியே எடுத்து அதன் இயக்கம் அடங்குவதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள், வேகமாக  அந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டு அவர்களை உயிர்பிழைக்கச் செய்கிறார்கள்.

மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரை இப்படியாக சாகடித்துக் குறைந்தது ஐந்து பேரையாவது  உயிர்பிழைக்கச் செய்கிறார்கள்.

இது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ”உயிர் கொலை” என்றுதான் சொல்லவேண்டும். இதைச் சட்டமும், அரசாங்கமும் எப்படி அனுமதிக்கிறது என்றுதான் புரியவில்லை. உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிர்வாழ முடியாதவர்களைக்கூட ”கருணைக் கொலை” செய்ய அனுமதியளிக்காத சட்டம், இந்த உயிர் கொலையை எப்படி வேடிக்கைப்பார்க்கிறது என்றுதான் புரியவில்லை. மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கு இதயம் இயங்கும்; மூச்சுக்காற்று உள்ளே போய் வெளியே வரும்; இரத்த ஓட்டம் இருக்கும்; நாடித் துடிப்பு இருக்கும்; சிறுநீரகங்களும் அதன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கும்; வயிறு உணவு கேட்கும். அதுமட்டுமல்ல மருத்துவர்களால் இறந்து விட்டதாகச் சொல்லப்படும் மூளைகூட இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் எந்தவித சலனமும் அசைவும் இல்லாமல் விபத்துக்குள்ளானவர் படுத்துக்கொண்டிருப்பார். உயிரோடுதான் இருப்பார். அப்படி உயிரோடு இருப்பவர்களை அறுத்து இயங்கிக்கொண்டிருக்கும் உடலுறுப்புகளை எடுத்து ஒருவரைச் சாகடிப்பது என்பது எந்தவகையில் நியாயமாகும். பல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகம் திருடுவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். மூளை இறந்துவிட்டால் மேலே சொன்ன அத்தனை இயக்கமும் நின்றுவிடும். அதனால் இது மூளைச்சாவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றும் அறியாத அப்பாவிகள்தான் இதில் பெரும்பாலும் பலியாகிறார்கள். அறிவியல் மற்றும் மருத்துவம் அதீதமாக வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் தலையில் அடிப்பட்டு கோமா நிலைக்குப் போனவர்களை இந்த மருத்துவத்தால் காப்பாற்றமுடியாதா…? நிச்சயம் முடியும். அதற்குக் காலதாமதம் ஆகலாம். நேரமும் பணமும் செலவாகலாம். அதுவரையில் அவர் உயிரோடுதான் இருப்பார். நிச்சயமாக ஒரு நாள் எழுந்து நடமாடுவார். ஆனால் அதுவரையில் காத்திராமல், தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை ”மூளைச்சலவை” செய்துவிடுகிறார்கள். கோமாவில் இருப்பவர் எழுந்து நடமாட வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை அல்லது எழுந்து நடமாட அதிக காலம் பிடிக்கும், அதற்கு அதிக செலவாகும், அதற்கு மாதங்களாகலாம், வருஷங்களாகலாம் அல்லது எழுந்திருக்காமல்கூட முடியாமல் இறந்து விடலாம் என்றெல்லாம் குழப்பி உடலுறுப்பு தானத்திற்குச் சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.

இதை வாசித்தீர்களா? :   இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து!

சரி… இந்த உடலுறுப்புகளை அந்த அப்பாவிகளிடமிருந்து தானமாக பெறுகிறார்களே தவிர, உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு தானமாக பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதில்லை. அந்த மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பல இலட்சங்களைப் பெறுகிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சை என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போதே, நகரம் முழுதும் உள்ள மற்ற எல்லா மருத்துவமனைகளிலும், அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடமும் உடனடியாக பதியப்படுகிறது. சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்து வருபவர்களை அவர்களுக்கு மருத்துவம் செய்து நடமாட வைப்பதற்கு பதிலாக, ”உடலுறுப்புதானம்” என்ற பெயரில் உயிர் கொலை செய்துவிடுகிறார்கள்.

இனியாவது அரசாங்கமும், சட்டத்துறையும், பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற உயிர்கொலையை விசாரிக்க வேண்டும். மேலும் நடக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும்.

நன்றி : படமும் கட்டுரையும் ஆயுத எழுத்து