12-ம் வகுப்பிற்கு அடுத்து என்ன படிக்கலாம்?

Share this:

12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? எங்கு படித்தால் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும்.

இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘+2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது கல்வி விகடன். இந்நிகழ்ச்சியை Chennai’s Amirta கல்வி நிறுவனம் இணைந்து வழங்கியது.

வெளிநாட்டு கல்வி ஆலோசகரான ஸ்ரீநிவாஸ் சம்பந்தம், கல்வியாளர் ரமேஷ் பிரபா, சென்னை ஐ.ஐ.டி-யின் இணை பேராசிரியரான முனைவர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளரான ஆ.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தனர்.

கல்வியாளர்கள்

1. பி.எஸ்ஸி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) க்கும், பி.சி.ஏ க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்பது பி.சி.ஏ. அதுவே கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைப் பற்றி விரிவாக படிப்பது பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் குறித்த அடிப்படையான விஷயம் அனைத்தையும் தெரிந்துகொள்ள பி.எஸ்ஸி படிக்கலாம். அதை வெறும் அப்ளைடாக (பயன்பாட்டு ரீதியாக) படித்தால் மட்டும் போதும் என்றால் பி.சி.ஏ படிக்கலாம். பி.எஸ்சி படித்தால் பின்னாளில் எம்.சி.ஏ கூட நாம் எடுக்க முடியும். அதனால் உங்களுடைய இளநிலை கல்வியைப் பொருத்தமட்டில் விரிவான பாடத்தை எடுங்கள். அதிலிருந்து உங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் எடுக்கும்போதே ஒரே நேர் வழியான படிப்பை தேர்வு செய்தால், பின்னர் உங்களுக்குதான் சிரமம்.

மாணவர்கள்

2. நீட் இல்லாத மருத்துவ படிப்புகள் என்னென்ன இருக்கின்றன. அதில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ன ?

ஆரம்பத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு மட்டுமே NEET இருந்தது. பின், ஆல்டர்னேட் மெடிசன் என்று சொல்லப் படக்கூடிய சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கும் நீட் அறிமுகப் படுத்தப்பட்டது. தற்போது BNYS ( Bachelor of Naturopathy and Yogic Sciences) என்ற ஒரு கோர்ஸிற்கு மட்டுமே நீட் இல்லை. இந்தப் படிப்பு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இரண்டிலும் உள்ளன. இதற்கடுத்து பி.ஃபார்ம், பார்ம் டி, பிசியோதெரபி, ஆப்டோமெட்ரி, மெடிக்கல் ரெக்கார்ட் சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கும் நீட் இல்லை. இதைத் தவிர பி.எஸ்சி-ல் 21 வகையான மருத்துவ படிப்புகள் உள்ளன. அவை எதுக்குமே நாம் கவனம் அளிப்பதில்லை. இதைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்வதற்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம். இவை எல்லாவற்றிருக்குமே வேலைவாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

3. மருத்துவ படிப்பை வெளிநாடுகளில் பயின்று அங்கேயே பணிபுரிவதற்கும், இங்கு வந்து வேலை பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மருத்துவத் துறையைப் பொருத்தமட்டில் ப்ராக்டிஸ்தான் ரொம்ப முக்கியம். இங்குள்ள மருத்துவப் படிப்புகள் இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆனால் நீங்கள் வெளிநாடுகளில் இதைப் பயிலும் போது அந்த நாடுகளுக்கு ஏற்ற சூழ்நிலையில்தான் படிப்புகள் இருக்கும். நீங்கள் அங்கு படித்து முடித்து அங்கு வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அங்கு வைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அது பெரும்பாலும் அவர்கள் மொழி குறித்தத் தேர்வாகத்தான் இருக்கும். ஏனென்றால், அங்குள்ள மக்களின் மொழி தெரிந்தால்தானே நோயாளிகளின் பிரச்னைகளை உணர முடியும். அங்கு படித்துவிட்டு இந்தியாவில் வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி சதவிகிதம் வெறும் 21% தான். இது மிகவும் சவாலான ஒன்று.

மாணவர்கள் கேட்ட சந்தேகங்களையும் அதற்கான விளக்கங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

4. மெரைன் டெக்னாலஜி மற்றும் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

மெரைன் மற்றும் ஏரோனாடிக்கல் இரண்டுமே மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கின் கீழ் தான் வருகிறது. இந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க நினைத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் 99 சதவிகித மாணவர்களுக்கு அத்தெளிவு +2 படிக்கும் போது இருப்பதில்லை. அதனால் உங்களுக்கு மெரைன் தான் படிக்க வேண்டுமென்றால், முதலில் மெக்கானிக்கல் எடுத்து படித்து, அதன்பிறகு மேற்படிப்பிற்கு மெரைன், ஆட்டோமொபைல் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுங்கள்.

5. கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டா? அதற்கான நுழைவுத்தேர்வுகளை பற்றி கூறுங்கள்..

அரசு கல்லூரிகளில் பி.எஸ்ஸி ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று ஒரு கோர்ஸ் உள்ளது. கேட்டரிங் என்பது உணவு சமைப்பது, பரிமாறுவது, ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒட்டுமொத்த ஹோட்டலையும் நிர்வகிப்பது. இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் இந்தப் படிப்பு. நாடு முழுவதும் 8 அரசு நிர்வகிக்கும் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தரமணி மற்றும் திருச்சி துவாக்குடியில் இரண்டு கல்லூரிகள் உள்ளன. இதை தவிர நாடு முழுவதும் ஒரு 76 கல்லூரிகள் உள்ளன. இங்கு நாம் சேர்ந்து படிக்க JEE மெயின்ஸ் நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். கடந்த சில வருடங்களாக வேலைவாய்ப்புகள் வளர்ந்து வரும் துறையாகவே இது உள்ளது. இங்கு எல்லாப் பாடங்களுமே ப்ராக்டிகலாக இருக்கும். எதுவுமே மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்றபடி உங்கள் கம்யூனிகேசன் மற்றும் ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொண்டால் நிச்சயம் பெரிய அளவில் ஜொலிக்கலாம்.

6. எனக்கு ஃபைன் ஆர்ட்ஸ் படிக்க வேண்டுமென ஆசை. ஆனால் என் தந்தை என்னை இன்ஜினீயரிங் படிக்கச் சொல்கிறார்; நான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன்…

ஒரு பெற்றோருக்கு அந்தக் கோர்ஸ் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் தான் பயம் வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் அரசு நுண்கலைக் கல்லூரி உள்ளது. இதைத் தவிர கும்பகோணத்திலும், மகாபலிபுரத்திலும் இரண்டு நுண்கலைக் கல்லூரிகள் உள்ளன. அங்கு படிப்பதற்கு எந்தவித மதிப்பெண்களும் தேவையில்லை. உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு வைப்பார்கள். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் போதும். இன்று தமிழ் சினிமாவில் உள்ள மிகப் பெரிய ஆர்ட் டைரக்டர்களும் இந்த கல்லூரிகளில் படித்து வந்தவர்கள் தான். நெசவாளர்களுக்கு டிசைன் செய்துக் கொடுப்பதற்கு அரசு நடத்தும் ‘நெசவாளர் சேவை மையம்’ உள்ளது. அதில் செராமிக் டிசைன், இன்டீரியர் டிசைன் போன்ற பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

7. Humanities and Social Science துறையை எங்குப் படிக்கலாம்? அதில் வேலைவாய்ப்புகள் உள்ளனவா?

பள்ளிகளிலே இதற்குத் தனியாக ஒரு குரூப் உள்ளது. நிறைய பேருக்கு அது தெரிவதில்லை. பெரும்பாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள்தான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு சென்னை ஐஐடியிலேயே டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்று ஐந்து வருட கோர்ஸ் உள்ளது. அதற்கு தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நிறைய மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்தக் கோர்ஸைப் படிக்கிறார்கள்.

8. இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் வேலை கிடைக்கும். இன்ஜினியரிங் இன்று நிறைய பேர் படிக்கிறார்கள். எல்லாருக்கும் சீட்டு கிடைத்து விடுகிறது. அதனால், இன்ஜினியரிங் ஒரு கேலிப் பொருளாக்கப்படுகிறது. பெரும்பாலும் அப்பா அம்மா சொல்லி இன்ஜினியரிங் படிக்கிறவர்கள் தான் அதிகம். ஆனால் வேலைவாய்ப்பை பொருத்தவரை இன்று இன்ஜினியரிங் தான் முதல் இடத்தில் உள்ளது. ஒரு பரோட்டா மாஸ்டருக்கு ஏன் இன்ஜினியரை விட அதிக சம்பளம் வருகிறதென்றால், அவர் ஒரு பதினைந்து வருடம் வேலை பார்த்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டு மாஸ்டர் ஆகியிருப்பார். ஆனால் இன்ஜினியரிங்கில் எல்லா பாடத்திலும் சராசரியாக 50 மதிப்பெண் வைத்துக்கொண்டு வெளியில் வந்து, உடனே எனக்கு வேலை கொடுக்கணும் என்று சொன்னால் சொன்னால் எப்படி? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர வேண்டுமென்றால், அவர்களின் எதிர்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஏற்றார்போல உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இன்ஜினியரிங் என்பது ஒரு எவர்கிரீன் கோர்ஸ் தான்.

9. கேள்வி: பி.எஸ்.சி முடித்து மருத்துவம் சார்ந்து என்ன படிக்கலாம்?

கீழே குறிப்பிட்டிருக்கும் சில படிப்புகள் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் (இதில் மேல் படிப்புகளும் உண்டு)
Accident and Emergency Care Technology
Cardiac Technology
Cardio Pulmonary Perfusion Care Technology
Dialysis Technology
Radiography & Imaging Technology
Operation Theatre and Anesthesia Technology
Medical Laboratory Technology
Biomedical sciences
Optometry
Clinical Pathology
Clinical Psychology

10. +2 Complete பண்ணிட்டு JEE entrance prepare செய்து எழுதி Pass செய்ய முடியுமா?

முடியும். Concentrate, Understand & Prepare. வெறும் பாஸ் செய்வது மட்டும் தேர்ச்சி ஆகாது. கட்ஆஃப் வேண்டும். 11 & 12 படிக்கும் பொழுது JEE பயிற்சி எடுப்பது நல்லது.

11. டேட்டா சயின்ஸ், மெஷின் லர்னிங் ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? எந்தப் படிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ளது?

டேட்டா சயின்ஸ்-ஐ தமிழில் தரவு அறிவியல் என்று சொல்வோம். இன்றைய உலகில் எல்லாமே டேட்டா தான். உதாரணத்திற்கு, நீங்கள் யூடியூபில் சென்று ஒரு இளையராஜா பாட்டு பார்த்தால், நீங்கள் மீண்டும் யூடியூப்பிற்கு செல்லும்போது ஒரு ஏ.ஆர்.ரகுமான் பாடல் உங்களுக்கு காட்டும். உங்கள் டேட்டாவை எடுத்து, உங்களுக்கு எது பிடிக்கும் என்று அறிந்துவைத்து, அதற்கேற்ப உங்களுக்கு அவுட்புட் கொடுக்கப்படுகிறது. இதைப்பற்றி படிப்பது தான் டேட்டா சயின்ஸ்.

இதே மெஷின் லர்னிங் என்பது டேட்டா சயின்ஸ்-க்கு தேவையான ஒரு டூல். ஒரு டேட்டாவை எப்படி ஆய்வுக்கு உட்படுத்தலாம், அதை எப்படி வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்று திறனாய்வு செய்வது தான் மெஷின் லர்னிங். இந்தப் படிப்பிற்கு கணிதம் மற்றும் புள்ளியலில் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட பல்வேறு புரோகிராம்கள் தற்போது இணையத்தில் கிடைக்கிறது. இனிவரும் காலங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் துறையாக இது மாற உள்ளது.

12. கலை அறிவியல் படிப்புகளுக்கு சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

இன்ஜினீயரிங்கை எடுத்துக்கொண்டால், அதற்கு ஒரே ஒரு கவுன்சலிங்தான். ஆனால் கலை அறிவியல் படிப்பிற்கு பல்வேறு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் கலை அறிவியல் படிப்புகளுக்கென கிட்டத்தட்ட 10 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு அருகிலுள்ள பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து, அதில் எத்தனை கோர்ஸ் இருக்கிறது, அதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்று பார்க்க வேண்டும். கலை அறிவியல் துறைக்கு இதுவரை நுழைவுத் தேர்வு கிடையாது. முழுக்க முழுக்க நம் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் சீட் கிடைக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு tngasa என்று ஒரு கவுன்சலிங் நடக்கிறது. இந்த ஒரு அப்ளிகேஷனை பூர்த்தி செய்தால், தமிழ்நாட்டிலுள்ள 151 அரசு கல்லூரிகளிலும் உங்களுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கோர்ஸ்க்கும் தனித்தனியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். அதையும் இப்போது ஆன்லைனிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.

13. NEET, JEE போன்ற தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டால், தேர்வில் தேர்ச்சி பெறும் வரை படிப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. இதனால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு உண்டாகிறது?

நீட், JEE போன்ற போட்டி தேர்வுகளைக் கூட விட்டு விடுவோம். இன்ஜினீயரிங் முடித்து ஒரு கல்லூரியில் சேர்ந்த பின்னர், அது பிடிக்கவில்லை என்று மீண்டும் ஒரு வருடம் வீண் செய்து வேறு ஒரு கல்லூரியில் சேர கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கிறார்கள். அப்போது புதிதாக சேரும் கல்லூரியும் உங்களுக்கு பிடித்துவிடும் என்பதில் என்ன நிச்சயம். ஒரு வருடம் என்பது ரொம்பவே மதிப்பு வாய்ந்த ஒன்று. அதை அசால்ட்டாக மாணவர்கள் எண்ணி விடுகிறார்கள். இதற்கு மாணவர்களைக் காட்டிலும் பெற்றோர்கள்தான் பெரும்பாலும் காரணம். நீட் தேர்வில் ஒரு மாணவன் தோல்வி அடைந்துவிட்டால், ‘இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாரேன்’ என்று மாணவர்களை இரண்டு மூன்று அட்டெம்ப்ட்கள் கொடுக்க வைக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவிகித மாணவர்கள் இரண்டாவது முறையாக நீட் எழுதுகிறார்கள் என்று தரவுகள் சொல்கின்றன. அப்போது புதிதாய் வரும் 70 சதவிகித மாணவர்களின் வாய்ப்புகள் இவர்களால் குறைகிறது. ஒருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலே மனம் உடைந்துப் போகும் மாணவர்கள், தொடர்ந்து இரண்டு மூன்று முறை எழுதி தோல்வி அடையும் போது அவர்கள் மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் இதை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும்.

14. தொழில்முனைவோர் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

தொழில்முனைவோர் ஆவதற்கு தனியாக படிக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ரிஸ்க் எடுக்கும் தைரியம் மட்டும் இருந்தால்போதும். இன்று கல்லூரிகளிலேயே இன்குபேஷன் சென்டர்கள் எல்லாம் வைத்து, தொழில்முனைவோருக்கான திறன்களை மாணவர்களிடையே கொண்டுவர பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் எந்தப் பாடத்தில் இளங்கலை முடித்திருந்தாலும், எம்.பி.ஏ முதுகலை சேர வாய்ப்புள்ளது. முன்னாடியெல்லாம் ஒரு எம்.பி.ஏ படிப்புதான் இருக்கும். இப்போது அதுவே உடைந்து பல படிப்புகள் உருவாகிவிட்டன. இதை தாண்டி பிசினஸ் சம்பந்தப்பட்ட ஸ்டோரிஸ் படிப்பது, சக்சஸ் ஸ்டோரிஸ் படிப்பது, தினமும் செய்தித்தாள் படிப்பது என தினந்தினம் உங்களை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

15. Question: Is the Chemical engineering worth to study in India? What are the future and job security in this course and which colleges are best this course?

There are two factors for Chemical engineering. One is on industrial side and other one is on pharmaceutical side. There are plenty of jobs available for UG Chemical Engineering. Refineries, Chemical Manufacturing, Petrochemical, Pharmaceutical Companies etc. Getting jobs will vary based on the courses you choose and the project you work during UG. Next to Civil and Mechanical Chemical Engineering also have widespread population.

16. Question: Sir, I would like to know the job and higher studies opportunities at abroad specifically in Germany, after completing Mechatronics UG in Tamilnadu. 

Yes, you can have higher studies in Germany for Mechatronics. One of my friend’s son went there for higher studies after completing B.Tech in Mechatronics. You will get good jobs not only in Germany but also in other European countries like Italy, Sweden, France etc. Mechatronics is part of research for EVs and Engineering side.

17. Question: Which is the best college for Data science -in Tamilnadu/India? Is there bright future for data science?

First you need to do your UG in Computer Science or Information Technology. You can do PG in Data Science or AI etc. If you want to know best college then you need to choose Govt. Colleges and Govt Aided colleges. After UG you can try PG in IIT, BITS, Anna University etc. Also there are online PG Courses by Foreign universities thru IIT, BITS. You can try that as well. Better pitch for Government Institutions.

18. Question: In BTech, can we choose Artificial intelligence and data science?

It is good to do Computer Science in UG and specialization in PG.

19. Question: My son wants jobs like ISRO, what is to be studied? He completed 12th exams now.

Your son can do Engineering Physics (In my knowledge it is available in NIT Calicut. But Engineering Physics may be available in other Government Institutions as well) in UG and do higher studies in Astronautics in PG. If you are pitching for Aeronautics then IIT Madras is the best after that MIT Madras is an option. However either you can do Physics or ECE in UG and can do specialization in PG.

He can go for Physics or Astrophysics. Electrical Electronics Communication can be done. You can also check at Indian Institute of Space Science and Technology (https://www.iist.ac.in/)

20. Question: Your valuable suggestion for IIIT please?

International institute information technology Hyderabad (https://www.iiit.ac.in/) one choice for ECE and CSE and Indian Institute of Information Technology (IIIT) Kancheepuram is another choice (https://www.iiitdm.ac.in/). There are 25 IIITs available these institutes are better than NITs, You need to clear JEE Mains for both International Institute Information Technology and Indian Institute of Information Technology institutes.

21. Question: What are all the opportunities available for commerce group student?

You can do CA, ICWA, CPA, Company Secretaries (https://www.icsi.edu/home/). There are various B.Com (combination of various ancillaries) and B.A (Economics), BBA (industry specific and with or without Computer aided courses) are also available.

Following are equivalent of Charted Accountancy:
CPA US (Certified Public Accountant)
CIMA (Chartered Institute of Management Accountants)
ACCA (Association of Chartered Certified Accountants)
CFA (Chartered Financial Analyst)
CMA (Certified Management Accountant)
CS (Company Secretary)

Also you can try CLAT and go for LLB in Central Law universities.

22. Question: After +2, what is to be studied in UG for HR related jobs?

BBA specific to HR. It may be in very few institutes. Better do BBA / B.Com or any other UG and then select HR in MBA will be ideal.

23. Question: My daughter wants to join law (L.L.B )how can I apply ?

There are many Law universities and colleges in India. You need to write CLAT.

உயர்கல்வி கற்பது தொடர்பாகவோ அல்லது இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவைக்கு மேற்கொண்டு விளக்கங்களோ தேவைப்பட்டால் கீழே கமெண்ட் பகுதியில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.