அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை!

திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

அதன்படி இவ்வருடமும், 10 ஆம் வகுப்பில் தேறிய அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊக்கத் தொகை வழங்க உள்ளது.

மதிப்பெண்கள் வரையறை கல்வி ஊக்கத்தொகை
480 மற்றும் அதற்கு மேல் ரூ.3,000
460-479 ரூ.2,500
400-459 ரூ.2,000
300-399 ரூ.1,500
299 அல்லது அதற்கு கீழ் ரூ.1,000

இந்த அறக்கட்டளை மூலம் ஊக்கத் தொகை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள், 31.05.2013 அன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பிக்கத் துவங்கலாம்.

கவனிக்கவும்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 03.06.2013 மாலை 4 மணி

 

 

கூடுதல் விபரங்களுக்கு http://mvrc.miet.edu/ என்ற இணைய தளத்தைக் காண்க.

தகவல்: ஜாஃபர்

இதை வாசித்தீர்களா? :   சவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி!