இராக்கில் தொடரும் ரணகளம்

Share this:

{mosimage}இராக்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளில் 4 அமெரிக்கப் படையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேற்கு பாக்தாதில் முஸ்தன்ஸீரியா பல்கலைகழகத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 70 பேர் கொல்லப்பட்டனர். 110 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் அதிகம் பேர் பல்கலைகழகத்தில் பயின்று கொண்டிருந்த மாணவர்களும் அங்கு பணிபுரிபவர்களும் ஆவர். இவர்கள் வீட்டிற்கு செல்ல வாகனத்திற்காக காத்து நிற்கும் முக்கிய வாயிலின் முன்னிலையில் இக்குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் மரணமடைந்ததில் பலர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களாயினர்.

மரணமடைந்த மாணவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். இப்பல்கலைகழகம் ஷியாக்களின் இயக்கமான அல் மெஹ்தி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என அல்ஜஸீரா தொலைகாட்சி கூறியுள்ளது. முதலில் வெடித்தது கார் வெடிகுண்டு எனவும் பின்னர் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இராக் காவல்துறை அறிவித்தது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இரு தினங்கள் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்புக்கு முன் மத்திய பாக்தாதில் ஒரு சுன்னி பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வாகனச் சந்தையில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 15 பேர் மரணமடைந்தனர்; 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருந்தனர். கர்ராதாவில் ஒரு காவல்துறை வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இரு காவலர் உட்பட 4 பேர் மரணமடைந்தனர்.

 

பத்ர் நகரத்தில் சாலை ஓரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 4 அமெரிக்கப் படையினர் வடக்கு இராக்கில் கொல்லப்பட்டதாக அமெரிக்க படைப்பிரிவினர் அறிவித்தனர்.

 

2006 – ல் 34,452 பொதுமக்கள் இராக்கில் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கழகத்தினர் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. 2006-ல் மட்டும் 36,000 க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் இராக் பிரதிநிதி ஜியான்னி மகாஸெனி (Gianni Magazzeni) அறிவித்தார். இது இராக்கின் தற்போதைய அரசு வெளியிட்ட கணக்கை விட மும்மடங்கு அதிகமாகும். சுகாதாரத்துறை, மருத்துவமனை, சவக்கிடங்கு மற்ற ஏஜன்ஸிகள் போன்றவைகளிலிருந்து கிடைத்த விவரங்களை வைத்து தற்போதைய கணக்குகளை வெளியிடுவதாக மகாஸெனி கூறினார்.

 

இராக்கிற்கு மேலும் 21,500 படைவீரர்களை அதிகமாக அனுப்ப புஷ் அரசு கடந்த வாரம் தீர்மானித்திருந்தது. ஆனால் இப்புதிய திருப்பம் இராக்கின் தற்போதையை நிலையை மேலும் மோசமடையவே செய்யும் என்பதைத் தான் அங்கிருந்து கிடைக்கும் இப்புதிய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.