தினமலருக்கு முதல் அடி!

தினமலருக்கு முதல் அடி!
Share this:

 

டந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.


கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.


இது குறித்து நாம் விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) தலையங்கம் எழுதி இருந்தோம்.


அத்தலையங்கம், “உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்” என்று முடிந்திருந்தது.


உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.


இது தொடக்கம்தான் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.