தினமலருக்கு இரண்டாவது அடி!

137
மதவெறி தூண்டும் தினமலர்.இன் தளத்திற்குத் தடை!
மதவெறி தூண்டும் தினமலர்.இன் தளத்திற்குத் தடை!


கடந்த 08.09.2008இல் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்ட “திருந்தாத தினமலர் இருந்தென்ன..?” என்ற தலையங்கத்தில் தினமலரின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தோம்.

சத்தியமார்க்கம்.காம் தலையங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பல சகோதரர்கள் தினமலரின் துவேஷத்திற்கு எதிரான முயற்சியைக் கையிலெடுத்தனர்.


அதன் விளைவாகக் கடந்த 10.09.2008 முதல் ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலர்.காம் என்ற இணைய தளம் முடக்கப் பட்டது. அதை, தினமலருக்கு முதல் அடி என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்திக்குப் பின்னூட்டமிட்ட வாசகர்கள் பலரும் தினமலருக்கு dinamalar.in என்ற முகவரியில் மாற்றுத் தளம் இயங்குவதையும் அதையும் தடை செய்ய வேண்டும் என்றும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.


விளைவாக, இன்று 15.09.2008 முதல் dinamalar.in என்ற மாற்றுத் தளமும் அமீரகங்களில் முடக்கப் பட்டு தினமலருக்கு இரண்டாவது அடி விழுந்திருக்கிறது.


நமது 08.09.2008 நாளிட்ட தலையங்கத்தின் இறுதி வரிகள்:


“முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான். முடிவு தெரியும்போது அதை வேறு நாளிதழ்களில்தான் தேடவேண்டியிருக்கும்”


அடிகள் தொடரும்!

இதை வாசித்தீர்களா? :   இராமநாதபுரம் தமிழகத்தின் உயிர்மூச்சு!