முனைவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்” என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் “கடவுள் இல்லை” என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் (முன்னாள்) பெரியார்தாசனும், இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் இவ்வுலகையும் படைத்த இறைவனை இறுதில் தேடிக் கண்டுகொண்ட அப்துல்லாஹ் (பெரியார்தாசன்), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்…

பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்). இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார்.

ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. பேராசிரியர் அப்துல்லாஹ் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் பலனின்றி 19-08-2013 அதிகாலை 1.25 மணியளவில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 63.

பேராசிரியர் அப்துல்லாஹ், உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்தார். அதன்படி அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுவினர் வந்து அவரது கண்களைத் தானமாக பெற்றுக் கொண்டனர். அதே போல் பேராசியர் அப்துல்லாஹ்வின் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

நடிகர்,  நாத்திகர் என்று தனது வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த அவர், நேர்வழி எதுவென்ற தேடலின் முடிவாக அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்ற வெற்றிப் பாதையைக் கண்டு தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டு,  அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திக் கொண்டிருந்த பேரா. அப்துல்லாஹ் அவர்களுக்கு மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் வெற்றியைத் தந்தருள்வானாக என்று பிரார்த்திப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

பேராசிரியர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்)மரணம்!

தேடுங்கள்; கண்டடைவீர்கள்!

நான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்… – பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ)

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

http://abdullahperiyardasan.blogspot.com/p/about-me.html

http://ta.wikipedia.org/wiki/பெரியார்தாசன்

இதை வாசித்தீர்களா? :   சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்