எதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு?

Share this:

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு – இரண்டு குறிப்புகள்:
“1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக விரோதசக்திகள் மசூதியில் ஏறி இடித்தனர்: அத்வானி முதலானோரின் ஆடியோ பேச்சுக்கள் தெளிவாக இல்லை” – முதலான காரணங்களைச் சொல்லி இன்று அத்வானி முதலானோர் குற்ற நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நினைவுக்கு வரும் சில தகவல்கள்:

1.மசூதி இடிப்பை ஒட்டிய கலவரங்களில் சுமார் 1000 பேர்கள் கொல்லப்பட்டனர்.

2.’ஜன்மோர்ச்சா’ எனும் இந்தி இதழாசிரியர் சுமன் குப்தா அவர்கள் (அவர் நேரடியாக அந்த இடிப்பைக் கண்டவர்) லிபரான் கமிஷன் முன் அளித்த தகவல்களில் சில இங்கே:

(அ) அன்று மசூதியை ஒட்டிய அவ்வளவு இடத்திலும் கரசேவகர்கள் குழுமி இருந்தனர். அந்தப் பகுதி முழுவதையும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

(ஆ) ‘ராம் கர்சேவா’ பாஸ்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே கரசேவகர்களால் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

(இ) உ.பி பா.ஜ.க அரசின் காவலர்கள் எந்த ஆயுதங்களும் இன்றி அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

(உ) நரசிம்மாராவ் அரசு அனுப்பி இருந்த ஆயுதம் தாங்கிய para military forces ஐ கல்யாண்சிங் அரசு அங்கே நிறுத்தவில்லை.

(ஊ) இரண்டு லட்சம் பேர்கள் அன்று அயோத்தியில் கூடி இருந்தனர்.

(எ) மசூதி அருகே ‘போடியம்’ அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முதலான அமைப்புகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். ‘மைக்’கில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

(ஏ) விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வந்தவுடன் தடுப்பு அரண்கள் தகர்க்கப்பட்டு கரசேவகர்கள் மசூதியை நோக்கி ஓடி அதன் மீது தாவினர்.

(ஐ) அன்று சுமன் குப்தா உட்பட 71 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் கேமராக்கள் உடைக்கப்பட்டன.

(ஒ) மசூதி மட்டும் அன்று உடைக்கப்படவில்லை. அதோடு அங்கிருந்த கபர்ஸ்தான்களும் உடைக்கப்பட்டன்.

(ஓ) உள்ளூர் நிர்வாகம் கர சேவகர்களுக்குப் பூரண ஒத்துழைப்பையும் அளித்தது. (முன்னொரு முறை) 1990 இல் இம்மாதிரி கரசேவகக் கூட்டம் கூட்டப்பட்டபோது அப்போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரி ராமச்சந்திர ஸ்ரீவத்சவா என்பவர் பெருங் கூட்டம் கூட்டப்படுவதைத் தடுத்து அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தடுக்கவும் செய்தார்.

3. கோப்ரா போஸ்டின் ‘ஆபரரேஷன் ஜன்மபூமி’ : 2014 ஏப்ரலில் “கோப்ரா போஸ்டின்” அசோசியேட் ஆசிரியர் கே. அசிஷ், தன்னை ராமஜன்ம பூமி இயக்கம் பற்றி ஆய்வு செய்ய வந்தவர் எனக் கூறிக் கொண்டு, 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டம் ஆக்கியதில் முன்னணியில் நின்ற வினய் கத்தியார் உட்பட்ட 23 முக்கிய தலைவர்களைப் பேட்டி கண்டு, அவர்களின் வாய் வழியாகவே சங் பரிவாரம் எப்படி மசூதி இடிப்பைத் திட்டமிட்டு நிறைவேற்றின என்பதை அம்பலப் படுத்தினார். கோப்ரா போஸ்ட் தளத்தில் இதை நீங்கள் நேரடியாகக் காணலாம். இவர்களில் 19 பேர் மசூதி இடிப்பிற்காக ‘சார்ஜ் ஷீட்’ போடப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:

(I) வி.எச்.பி, சிவசேனா மட்டத்தில் இச்சதி திட்டமிடப்பட்டது;

(ii) ஆர்.எஸ்.எஸ் அணிகளைக் கொண்டு ஒரு தற்கொலைப் படை (பலிதானி ஜாதா) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது;

(iii) பலமாதங்களுக்கு முன்னதாகவே கரசேவகர்களுக்கு உயரமான கட்டிடங்களில் தாவுவது உட்பட பயிற்சிகள் அளிக்கப்பட்டன;

(iv) எளிதான முறைகளில் மசூதியை இடிக்க இயலாவிட்டல் வெடி வைத்துத் தகர்க்க தயார் நிலையில் இருந்தனர்;

(v) அசோக் சிங்கால், வினய் கத்தியார், வி,எச் டால்மியா முதலியோர் அடங்கிய இரகசியக் கூட்டம் ஒன்று மசூதி இடிப்பு தொடர்பாக வி.எச்.பி, பஜ்ரங்தள், ஆர்.எஸ். எஸ் அமைப்புகள் நடத்தின;

(vi) உள்ளூர் நிர்வாகம் பூரண ஒத்துழைப்பு நல்கியது; அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் முன்னின்று கர சேவகர்களுக்கு சத்தியப் பிரமாணம் (சங்கல்ப்) செய்வித்தனர்.

நன்றி : முனைவர் அ. மார்க்ஸ்

பாபர் மஸ்ஜிதும் சேகர் ரெட்டியும்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.