சத்தியமார்க்கம்.காம்

சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி - 2008/09(அனைவரும் பங்கு கொள்ளலாம்) print Email
கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2008
வெள்ளி, 08 ஆகஸ்டு 2008 18:43

பங்குபெறுவீர்! பரிசுகளை வெல்வீர்!!அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

 

இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றைச் சத்தியமார்க்கம்.காம் நல்லமுறையில் நடத்தியது. அதனைப் போன்றதொரு கட்டுரைப் போட்டியினை தமிழ் மொழியில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் சத்தியமார்க்கம்.காம் நடத்தத் தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றோடு, எடுத்தாளப்படும் கட்டுரைத் தலைப்பில் சிறப்பான ஆய்வுடன் கூடிய சமுதாயத்தின் எதிர்கால நன்மைக்கான சரியானத் தீர்வைத் தரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் தங்களின் அரிய சிந்தனைகளைச் சிறப்பான ஆய்வுகளுடனும் அதற்குரிய சரியான தீர்வுகளுடனும் சமர்ப்பிக்க முன்வருமாறு தமிழ் சமுதாய வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

 

 

------------------------------------------
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
------------------------------------------

 (பரிசுகள் விபரம்:  ஆண்கள் & பெண்கள்)

சிறப்புப் பரிசு: x 1பங்குபெறுவீர்! பரிசுகளை வெல்வீர்!!

 

 

                 லேப்டாப் (acer-aspire)

 

முதல் பரிசு: x 2 (ஆண்-1, பெண்-1)

 

டிஜிட்டல் குர் ஆன்

 

 

              டிஜிட்டல் திருக்குர்ஆன்

இரண்டாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)

 

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்.

 

மூன்றாம் பரிசு :  x 2 (ஆண்-1, பெண்-1)

 

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்

 

ஆறுதல் பரிசுகள் : x 2 (ஆண்கள்-2, பெண்கள்-2) 

 

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்

 

 

 

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

  • 3.5 சத இடஒதுக்கீடு தீர்வாகுமா?.

  • இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?

  • இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!

  • உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்?

  • இந்திய அரசியல் முஸ்லிம்களுக்கு ஹராமா?!

  • இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு...?

  • காங்கிரஸில் சங்கபரிவாரத்தின் ஊடுருவல்.

  • பெருகிவரும் போலி முஸ்லிம் தீவிரவாத குற்றச்சாட்டுக்கான தீர்வு!

  • உலக அமைதி இஸ்லாத்தினூடாக..!

  • உலகின் அழியா நிலையான இஸம் - இஸ்லாம்!

  • இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு.

  • முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்!

  • உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!

  • இஸ்லாமியப் பிரச்சாரம் திரைப்படத்துறை மூலமாக...

  • சாவர்க்கரும் பாராளுமன்றத்தீட்டும்!

  • இலங்கை முஸ்லிம்களின் அவலநிலைக்கான தீர்வு!

  • குண்டுவெடிப்புகளும் திரைமறைவு சதிகளும்!

  • ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?

  • போராட்டம் - நிலையான வாழ்விற்கான ஒரே வழி!.

  • அமெரிக்கா இஸ்லாத்தை நோக்கி..!.

  • மத்திய கிழக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!

  • மஸ்ஜிதுல் அக்ஸா - முஸ்லிம்களின் ஆன்மா!

  • சியோனிஸ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி!

  • ஊழல் அரசியலை ஒழிப்பதற்கான வழி!

  • தமிழகம் - ஜாதி அரசியலிலிருந்து விடியலை நோக்கி! 

 

 

-------------------------------
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
-------------------------------
1.
போட்டியாளர் மேற்கூறப்பட்ட தலைப்புகளில் அதிகபட்சமாக மூன்று தலைப்பில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.

 

2. கொடுக்கப்பட்ட தலைப்பைத் தழுவி மட்டுமே கட்டுரை இருத்தல் வேண்டும்; சம்பந்தப்பட்டத் தலைப்புக்கான தீர்வு இஸ்லாமிய அடிப்படையில் அலசப்பட்டிருக்க வேண்டும்.

 

3. போட்டியாளர் சமர்ப்பிக்கும் கட்டுரைகள் தானே சொந்தமாய் எழுதியதாகவும் முன் எந்தத் தாளிகளிலோ இணையத் தளத்திலோ வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்.

 

4. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் குறிப்பிடும் பொழுதுத் தெளிவாக எண்களுடன் குறிப்பிட வேண்டும்.

 

5. கட்டுரை கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும். எந்த நாட்டினதும் சமயம், அரசியல் கட்சி, இயக்கங்கள் ஆகியவற்றையோ தனிமனிதரையோ இழித்துரைப்பதாகவோ தாக்குவதாகவோ இல்லாமல், தெளிவான ஆதாரங்களுடனும் அழகிய வாதங்களுடன் ஓர் அழகிய இஸ்லாமியப் படைப்பு என்ற தகுதியை நாடுவதாகவும் நயத்துடனும் எழுதப்படவேண்டும்.

 

6. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் கட்டுரைப்போட்டி குழுவினர்களால் தணிக்கை செய்யப்பட்டு தளத்தில் பதிக்கப்படும்.

 

7. கட்டுரைப் போட்டியில் பங்குபெறுபவருக்கு வயதிற்கான வரம்பு ஏதுமில்லை.

 

8. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அறிவிக்கப்படும்.

 

9. தமிழ் அறிந்த சர்வதேச அளவிலான அனைத்துலக வாசகர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

10. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.

 

11. போட்டியாளர் கண்டிப்பாகத் தனது தொடர்பு எண்ணைத் தவறாமல் கட்டுரையின் இறுதியில் தெரிவித்திருக்க வேண்டும்.

 

12. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

 

------------------------------
கட்டுரை எழுதுபவர் கவனத்திற்கு :
------------------------------

1. கட்டுரைகள் தட்டச்சியோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ எவ்வடிவில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.

 

2. கட்டுரை தட்டச்சப்பட்டு அனுப்பப்படுகிறது எனில், கட்டுரையின் எழுத்துரு எண் 10 அளவை தேர்ந்தெடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டு, A4 தாள் அளவில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டுரை வரைவதற்குத் துணை நின்ற நூல்கள், துணை ஆக்கங்களுக்கான குறிப்புக்களைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டும். இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தால் தள முகவரியைக் குறிப்பிட வேண்டும். சுட்டப்படும் ஆதாரங்கள் இணையத்தில் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரையின் துவக்கப் பக்கத்தில் கட்டுரைக்கான தலைப்பைக் குறிப்பிட வேண்டும்.

 

3. குர்ஆன், ஹதீஸ்களை பக்கபலமாக சேர்க்க விரும்புபவர்கள், மிகவும் அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிக அளவில் இறைவசனங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். இறைவசனங்கள், ஹதீஸ் சம்பவங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, சொல்லவரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.

 

4. கட்டுரையாளரின் பெயர் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்ணிட்டு முழு முகவரியுடன்  15.12.2008 அன்று இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வந்து சேரும் ஆக்கங்கள் போட்டிக்குப் பரிசீலிக்கப்படாது.


5. கட்டுரைகளை எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரையாளரின் ஆக்கத்தை நிர்வாகம் பெற்றவுடன் அதை உறுதிப்படுத்தும் செய்தி கட்டுரையாளருக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 

7. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிடும். பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் இருப்பின் அவர்கள் வெளியிட விரும்பும் புனைப்பெயர்களின் விபரங்களைக் கட்டுரையின் முடிவில் குறிப்பிட வேண்டும்.

 

போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், ஆலோசனை வழங்க விரும்புவோர் நிர்வாகத்தை  எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

கருத்துக்கள் (12)add comment
0
S.S.K:
அஸ்ஸலாமு அலைக்கும் ALHAMDULILLAAH அல்ஹம்துலில்லாஹ் JAZAAKALLAHU KAHAIRAN ஜஸாக்கல்லாஹு கைரன் S.S.K.
1

August 09, 2008 06:06
0
மஸ்தூக்கா:
கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் 'சத்தியமார்க்கம்' தளம் கட்டுரைப் போட்டி அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாலும் கட்டுரைத் தலைப்புகள் பெரும்பாலும் (ஒன்று அல்லது இரண்டைத் தவிர) அரசியல் பற்றியதாகவே உள்ளதாக அறிகிறேன். போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் அனைத்துமே மிகவும் அவசியமானவையும் காலத்திற்கேற்றவையும் தான் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் மார்கக விளக்கம், அழைப்புப் பணியின் அவசியம், நல்லொழுக்கம், நற்சிந்தனை, பெண்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் நலம், அதிமுக்கியமாக கல்வியின் அவசியம் மாணவர்களின் சிறப்பான எதிர்காலம் இன்னும் இவைபோன்ற பல்வேறு தலைப்புகளின் கலவையாக கட்டுரைப் போட்டியின் தலைப்புகளை அமைத்தி்ருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே பலதரப்பட்ட வாசகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.
2

August 12, 2008 20:25
0
ஹயா ரூஹி:
அஸ்ஸலாமு அலைக்கும் .போட்டி முடிவு திகதியை நீடிக்க முடியாதா?நான் இப்போது தான் அறிவிப்பைப் பார்க்கிறேன்.
3

September 08, 2008 15:28
0
M. HAROON RASHEED:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு வரவேற்கிரேன் ... இதுபோன்ற போட்டிகள் அவசியம்தான் சமூக அக்கறையுடன் கூடிய உங்களின் பனி சிறக்க அல்லாஹ் அருள்வானாக இணையத்தில் எழுதுவதற்கு இதுபோன்ற ஊக்கம் தரும் போட்டிகள் சகோதர முஸ்லிம்களை ஈர்க்கும் இன்ஷா அல்லாஹ.
4

September 16, 2008 11:01
0
Mohammed Hasaan - Sri lanka:
போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளும் இன்று முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளமை சிறப்பான அம்சமாகும். அது மாத்திரமன்றி சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வை அலசி ஆராய்ந்து எமது சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சியின் ஒரு படியாக இம் முயற்சி அமையும் என்பதிலும் எந்ந ஐயமுமில்லை. சகோதரர் மஸ்தூக்கா குறிபிட்டது போல் போட்டிக்கான முடிவுத் திகதியை நீடிக்க முடியாதா? ஏனெனில் இந்ந அறிவிப்பைப் நான் இப்போது தான் பார்க்கின்றேன்.
5

September 22, 2008 17:41
0
பாபு:
மீண்டும் இந்த க.போ பற்றி மடலில் குறிப்பிடவும், ' சரி, தேதியத்தான் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டீங்களோ' ஓடிவந்து பார்த்தேன். ம்ஹூம்.. அப்டிலாம் ஒண்ணுமில்ல.
6

September 22, 2008 19:08
0
அழகன்:
அஸ்ஸலாமு அலைக்கும்.... இணையதள பொறுப்பாளர்களே... உங்களுடைய எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரியில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிகிறது. gmail லிலிருந்து அனுப்பப்படும் மடல்கள் திரும்பி வந்துவிடுகின்றன. தயவுசெய்து அதனை சரிசெய்யவும்.
7

October 06, 2008 10:19
0
S.S.K:
DATE EXTENDED to 15.11.08 சகோ பாபு அவர்களே கட்டுரைப் போட்டி இறுதி தேதி நீடிக்கப்பட்டுள்ளது அறியவும். //மீண்டும் இந்த க.போ பற்றி மடலில் குறிப்பிடவும், ' சரி, தேதியத்தான் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டீங்களோ' ஓடிவந்து பார்த்தேன். ம்ஹூம்.. அப்டிலாம் ஒண்ணுமில்ல.//
8

October 07, 2008 05:43
0
சகோ ::
COUNT DOWN HAS BEGUN நன்றாக உள்ளது. அருமையான தலைப்புகளிலான ஆக்கத்தின் இறுதி வடிவத்தை முடித்து சம்ர்ப்பிக்க அனைவரும் சுறு சுறுப்பாக வேண்டும் என்ற நல்ல முயற்சி வாழ்த்துக்கள். சகோ :
9

November 08, 2008 13:53
0
Ahmed_Nisar:
அன்புள்ள நிர்வாகத்தினருக்கு, போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இதற்கான 2 கட்டுரைகளுக்கான தயாரிப்பில் உள்ளேன். என்றாலும் போட்டிக்கான இறுதித் தேதியை நீட்டித்துத் தர இயன்றால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். தயவு செய்து தேதியை நீட்டித்து தாருங்கள். நன்றி.
10

November 12, 2008 05:32
0
சத்தியமார்க்கம்.காம்:
முதன் முறையாக வருகை தந்திருக்கும் சகோதரர்களுக்கு நல்வரவு! தங்களது வருகைகளை வழக்கமாகக் கொள்வதும் தளத்தில் பதிக்கப் படும் ஆக்கங்கள் குறித்த தங்கள் கருத்துப் பின்னூட்டங்களும் எங்களை மென்மேலும் உற்சாகப் படுத்தும். வாசகர்களின்/போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டுரைப் போட்டிக்கான ஆக்கங்களை அனுப்பி வைக்கும் கடைசித் தேதி நீட்டிக்கப் படவிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இறுதித் தேதியின் அறிவிப்பு வரும். தொடரும் வாசகர்களின் ஆதரவை எதிர்நோக்கும் உங்கள், சத்தியமார்க்கம்.காம்.
11

November 12, 2008 10:51
0
சத்தியமார்க்கம்.காம்:
வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீட்டிக்கப்பட்ட நாளான இன்றுடன் கட்டுரைப் போட்டிக்கான கடைசித்தேதி நிறைவுற்றது. போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து வாசக, வாசகிகளுக்கும் நன்றி! கட்டுரையில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் விரைவில் தளத்தில் வெளியாகும்!
12

December 15, 2008 22:22

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு