சத்தியமார்க்கம்.காம்

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்! print Email
பொதுவானவை - பொதுவானவை
திங்கள், 26 மே 2008 07:29

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், "என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு மேலே உள்ள ஹிஜாபைக் கண்டு அல்ல!" - என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் பிரபலம். அந்த வாசகங்கள் எத்துணை உண்மையானவை என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் முஸ்லிம் சகோதரிகள்.

அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி வழங்கிய வரலாற்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கும் ஈரான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே! அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அளிக்கும் தகவலின்படி ஈரானின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1994 - 2004 க்குள் பத்து மடங்கு உயர்ந்துள்ளது. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான அதிகரித்துள்ளது.

கொரியாவின் சர்வதேச பெண்கள் கண்டுபிடிப்பாளர்கள் மாநாடு!இத்தகைய விழிப்புணர்ச்சியின் காரணமாக ஈரானிய சமுதாயம் சர்வதேச அளவில் சாதனைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண் பெண் என்ற பால் வேற்றுமையின்றி "அறிவைத் தேடுதல்" எனும் அடிப்படை இங்கே நிருபணமாகிக் கொண்டுள்ளது.

ஆம்! கடந்த வாரத்தில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் இந்தப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி ஈரானியப் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றுள்ளனர். விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டனர்.

பரிசுகளை அள்ளும் முஸ்லிம் பெண்கள்

* சகோதரி மெஹ்ராஜ் கோல்கின்ஃபர் எனும் முஸ்லிம் பெண், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றுள்ளார். மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றுள்ளது.

* சகோதரி சோனியா சப்ரீ அவர்களின் பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது.

* அதே சமயம் சகோதரி மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.

சர்வதேச அளவில் 25 நாடுகளுடன் நடந்த போட்டியில் இரானின் முஸ்லிம் பெண்கள் சமர்ப்பித்தத் திட்டங்களில் வென்றவை பின்வருவாறு:
1. Mehrnaz Golchinfar: Power station without pollution for environment (Winner of the Special Jury Award)
2. Ladan Nakhaei, Saeideh Nooshzadeh and Naser Darijani: Laboratory washer device for washing non accessible points of the laboratory tools and devices.
3. Elena Horri, Mehrangiz Ebrahimi and Mohsen Horri: Washable polymer and elastic for x-ray absorption
4. Negar Mahmoodian: Automatic music stand
5. Marzieh Morselpour, Mohammad Ali jusefzadeh and Parvin Nejad Sarvari: Production of ointment and suppository of citrullus colocynthis extract to reduce blood sugar
6. Negar Molazadeh: Intelligent seat belt
7. Parvin Vasseghi, Anaheita Davoodi and Tahmasb Davoodi: Building energy management system (BEMS)
8. Soheila Kamrani and Saeed Naderian: Producing water color compounds special for use in water color painting technique on stone, as well as regular technique of water color prepared from pigments of fruits, herbal plants, food colors and powder paints
9. Sonya Saberi: (World Intellectual Property (WIPO) Award)
10. Fatemeh Soltanzadeh and Mojtaba Emamjome: The Optimization of Cement and Concrete with Usage of Oman Sea Chalky Conches
11. Samaneh Mollaghasemi, Mahtab Ahmadi and Mansoor Norooz Eidian: A device to relieve migraine pains.
12. Roghayeh Hashemi: Anti-Fertility effects of seed of cossypium herbaceum and ruta graveolens plants on adult male rats is regd
13. Hoda Jalali Nejad, Amir Jalali Nejad and Hamid Jalali Nejad: Recycling of polyethylene tare phthalate (PET) which used for water and soft drink
14. Maryam Eslami: An implement for reparation and surgery of osseous diseases in olecranon (nternational Federation of Inventors' Associations (IFIA) Award, also honored with the WIPO special emblem as the top laureate for her findings consistent with the treatment of bone and joint diseases at the 36th International Exhibition of Inventions held on April 2-6 2008,where she (photo to the right) won the first prize)
15. Mahnaz Saeedi Delcheh: Flat gelatins cover for shoes to attending high equilibrium and residence of foot ache
16. Zahra Sajjadi: Automatically system that change unpleasant air to pleasant air
17. Iman Kanani: Water Purifier/Softener
18. Sahar Sepehr: Robo School Police
19. Maryam Noori: Robo traffic police
20. Zeynab Abdolzahrai: Wireless Electric Skate Roller

ஈரானிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கூடுதல் தகவல்கள்:

பன்னாட்டு இயற்பியல் ஒன்றியத்தால் (The International Union of Pure and Applied Physics - IUPAP) இவ்வருடத்திய சிறந்த இளம் விஞ்ஞானியாக டாக்டர். யாஸமென் ஃபர்ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 34-ஆவது சர்வதேச உயர் ஆற்றல் பெளதீக மாநாட்டில் High Energy Physics (ICHEP2008) இதற்கான சாதனை விருதினை இவர் பெறவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அரசியல் ரீதியிலான உறவுகள் ஏதுமற்ற நிலையிலும், பல மேற்கத்திய நாடுகள் ஈரானின் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்கான மென்பொருள் / வன்பொருள் வாங்க பொருளியல் சார்ந்த அனுமதிகளை வழங்க மறுக்கும் சூழ்நிலைகளிலும் ஈரானின் விஞ்ஞான உற்பத்தித் திறன் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் அளிக்கும் தகவல்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்வோரில் 70% பெண்கள் ஆவர்.

இயற்பியல், கணிதம், மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் பல "முதன் முதலாய்" கண்டுபிடித்து சாதித்திருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுகள் இல்லாத காரணங்களினால் இவர்களது கண்டுபிடிப்புகள், இவர்களது ஆய்வுகளைப் பின்பற்றும் மேற்கத்தியர்கள் 'கண்டுபிடித்த'தாக அறிவிக்கப் படுகிறது.

உலகின் முதல் "பேட்டரி" தொழில்நுட்பத்தில் துவங்கி காற்றாலை மூலம் கொண்டு ஆற்றலைப் பெறுவது வரை மட்டுமில்லாமல் அல்ஜீப்ரா, வேதியியல், புவி ஈர்ப்பு விசை, ஒளியின் வேகம் ஆகிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்த ஈரான், பதிவேட்டில் தனது கண்டுபிடிப்பைப் பதிக்கத் தவறியதைக் காலம் கடந்து உணர்ந்துள்ளது.

காலம் கடந்து உணர்ந்தாலும், அதற்காகச் சோர்ந்து விடாமல் முயற்சி செய்து சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அரங்கில் தன்னை நிலை நிறுத்த ஈரான் முயன்று வருகிறது. நம்பிக்கை ஊட்டும் இத்தகைய விழிப்புணர்வுகள்தாம் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசியமான தேவைகளாகும்.

- அபூ ஸாலிஹா

கருத்துக்கள் (11)add comment
0
haneefm:
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான்!!! அல்ஹம்துலில்லாஹி!! நம் இஸ்லாமியா சமுதாயம் இன்னும் உலகளவில் சிறக்கட்டும்/வரும் கால [இஸ்லாமிய]இளைஞர்கள் இன்னும பலபல விஞ்ஞான தயரிப்புகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் தர காத்துயிருக்கிறார்கள் இவர்களின் புதிய ஆக்கங்களுக்கு நம் இஸ்லாமிய சமுதாயம் நிரைய ஊங்களை தந்து நம் சமுதாயம் உயர்வுக்கு பெற்றேர்களும்/ஆசிரியர்கள்/பள்ளிநிருவனங்கள்/இன்னும இஸ்லாமிய நிருவனங்கள்/ எல்லாம் ஒன்றுகூடி மாணவர்களை ஊக்குவைத்தால் இது போல இன்னும் நிரைய கண்டுபிடிப்புகளை அல்லாஹ் உதவியுடன் நம் இந்திய இஸ்லாமிய மாணவர்களும் நிச்சயம் தருவர்கள் என்பதில் எந்த அச்சமும் இல்லை!! இந்த ஆக்கத்தை தந்த அபூ ஸாலிஹா அவர்களுக்கு வாழ்த்துகள் ஹனீஃப்-குவைத்
1

May 26, 2008 10:39
0
மரைக்காயர்:
சானியா மிர்சா உடை விவகாரத்தை பெரிதுபடுத்திய ஊடகங்கள் இந்த செய்தியை தகுந்த முறையில் பதிந்திருக்கின்றனவா என்று தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
2

May 26, 2008 11:02
0
abdul azeez:
பொதுவாக மேற்க்குலகத்தவர்கள் தாங்கள் எப்படிப்பட்ட பண்பாட்டில் இருக்கின்றோமோ ! அந்த (?) அர்ப்புத கலாச்சார வாழ்க்கையை தான். பிற சமூக மக்களும் பின்பற்றனும் என்ற எதிர்ப்பார்ப்பு அவர்களின் மனங்களில் காங்க்ரீட் போட்டது மாதிரி அழுத்தமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட கேடுகெட்ட பழக்க வழக்கங்களில். பெண்களை எந்த வகையில் எல்லாம் உபயோகிக்கமுடியுமோ அத்தனையும் தங்கள் வேதங்களில் அட்வான்சாகவே வசதிக்கேற்றவாறு எழுதி வைத்துக்கொண்டு ரொம்ப அருமையாக காமுகர்களுக்கு பெண்களை பலிகொடுக்கின்ற ஈனச்செயல் மாற்றி அமைத்த வேததிர்க்கேற்றவாறு தொன்றுதொட்டு நடைமுரைப்படுத்திகொண்டு தான் இருக்கின்றனர்.இவர்களுக்கு ஒத்து ஊதுவது தங்கள் குலதொழிலாக செம்மறியாட்டு ஊடகங்கள் ஜால்ரா போடும் அவல நிலையும் நம் நாட்டில் இருக்கின்றன. அவர்களுக்கு தலையில் போடும் ஆடை தான் பெரிதாக படுமே ஒழிய தலைக்குள்ளே இருக்கும் அறிவுக்கூர்மை அவர்களின் மாலைகன்னிர்க்கு தென்படாது. சிந்திக்க சொல்லும் மார்க்கம் நம் மார்க்கம். இதன் அடிப்படையை கொண்டு ஈரானியப் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் சாதனைகள் செய்தது முன்னோடியாக வைத்து நம் மக்களும் சாதனை புரியணும். இது அருமையான ஆக்கமும் கூட. சகோதரர் அபூ சாலிஹா இது போன்ற பொரிபறக்கும். ஆக்கங்கள் தேடி எடுத்து எழுத அல்லாஹ் அருள் புரிவானாக அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.
3

May 27, 2008 02:14
0
முஸ்லிம்:
//சானியா மிர்சா உடை விவகாரத்தை பெரிதுபடுத்திய ஊடகங்கள் இந்த செய்தியை தகுந்த முறையில் பதிந்திருக்கின்றனவா என்று தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.// அது எப்படி...? முஸ்லிமான ஆணும், பெண்ணும் உலகத்தில் எந்த மூலையில் இஸ்லாத்திற்கெதிரான ஒரு காரியத்தைச் செய்தாலும் அதைத்தான் விளம்பர நோக்கத்துடன் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும்.
4

May 27, 2008 05:05
0
Masar khan:
அருமையான தகவலுக்கு நன்றி சத்யமார்க்கம்.காம். காமுகர்களின் குமுறல் என்னவென்றார் பெண்கள் ஹிஜாப் போட்டுக்கொண்டால் உலகத்தில் எதுவுமே அவர்கலால் சாதிக்க முடியாது என்பதுதான். அதன் முகமுடியை கிழித்து எறிந்துவிட்டது இச்செய்தி. அதோடு முஸ்லிம்கள் தங்கள் கண்டுபிடிப்புகளாஇ பிராஜக்டுகளை உரிய முறையில் உரிய இடங்களில் 'பதிவு' செய்யாமல் கோட்டை விட்டதால் கை சேதப்பட்டவர்களில் முதன்மையானவர்களாக இருக்கிறோம் என்பதை சாட்டையடி கொடுத்து உணர்த்துகிறது இது. இயன்றால், கண்டுபிடிப்புகளை பதிக்கும் Pattern Registration பற்றிய தகவல்களை உங்கள் தளத்தில் பதியுங்கள். என் போன்ற மாணவர்களுக்கு மிக உதவியாய் இருக்கும்.
5

May 27, 2008 07:19
0
சத்தியமார்க்கம்.காம்:
சகோதரர் மஸார் கான் அவர்களது ஆலோசனையை ஏற்று இன்ஷா அல்லாஹ் 'பேட்டன் ரெஜிஸ்ட்ரேஷன்' குறித்த ஆக்கம் விரைவில் சத்தியமார்க்கம்.காம் இல் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! சகோதரர் கான் அவர்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி! சமுதாயத்துக்குப் பயனளிக்கும் இதுபோன்ற ஆலோசனைகளை வாசகர்களிடமிருந்து மேலும் எதிர் பார்க்கிறோம்.
6

May 27, 2008 07:27
0
பிறைநதிபுரத்தான்:
ஈரானிய இஸ்லாமிய பெண்கள் சாதித்ததை - இஸ்லாமிய உலகம் சாதித்ததாக ஒப்பிட கூடாது. 21 ஆம் நூற்றாண்டிகியும் இஸ்லாமிய பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும், கார் ஓட்டவும் அனுமதி மறுக்கும் சில அரபு நாடுகளைப் போலல்லாமல், ஈரான் பெண்களுக்கு அதிக உரிமைகளை தந்து - அவர்களின் கல்வி நிலை - வேலை வாய்ப்பு விகிதம் உய்ர பல திட்டங்களை தீட்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு தேவையான உரிமைகளை தந்து விட்டதாக 'கூறியும்‘ ‘எழுதியும்' வந்ததோடு சரி - இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் எந்த ஒரு நாட்டின் ஆட்சியாளரும் இஸ்லாம் பெண்களுக்கு தந்த உரிமைகளை நியாயமாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. உலகின் நடைமுறை மாற்றங்களுக்கேற்ப ‘பெண்களை' பற்றிய அளவீடுகளை-மதிப்பீடுகளை மாற்றாமல் - அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைகளாகவும் -பிற்போக்குவாதிகளின் மிரட்டலுக்கு அடங்கிவாழும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஈரானிடமிருந்து கற்க வேண்டியது ஏராளம். இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான ‘முத்தலாக்' முறையை ஆதரித்து - ‘18 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு திருமணத்தை தடை செய்யும் சட்டத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் - இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கும் வரை இந்திய் முஸ்லிம் பெண்கள் - அறிவும் ஆற்றலும் பெற்ற ஈரானிய பெண்களாக மாறுவது கடினம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு தேவையான உரிமைகளை தந்து விட்டதாக 'கூறியும்‘ ‘எழுதியும்' வந்ததோடு சரி - இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் எந்த ஒரு நாட்டின் ஆட்சியாளரும் இஸ்லாம் பென்களுக்கு தந்த உரிமைகளை நியாயமாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. உலகின் நடைமுறை மாற்றங்களுக்கேற்ப ‘பெண்களை' பற்றிய அளவீடுகளை-மதிப்பீடுகளை மாற்றாமல் - அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைகளாகவும் -பிற்போக்குவாதிகளின் மிரட்டலுக்கு அடங்கிவாழும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஈரானிடமிருந்து கற்க வேண்டியது ஏராளம்.
7

May 27, 2008 11:13
0
abdul azeez:
சகோதரர் மசார்கான் போன்றோர்களின் ஊக்கத்தை அதிகப்படுத்த 'பேட்டன் ரெஜிஸ்ட்ரேஷன்' பற்றிய ஆக்கம் விரைவில் வரும் என்பதில் மிகவும் சந்தோசமே! உங்களைப்போன்ற மாணவர்களின் கைகளில் தான் கோட்டைவிட்டத்தை. திரும்ப கைப்பற்றும் தகுதி இருக்கின்றது நம் சமுதாய மக்களுக்கு அதன் மூலமும் விடிவு காலம் இருக்கலாம். வாழ்த்துக்கள். நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள். அது உங்களில் அநியாயம் செய்தவர்களைத்தான் குறிப்பாக பிடிக்கும் என்பதில்லை. தவிர அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடினமானவன் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இந்த குர்ஆன் வசன எண் யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பதியுங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.
8

May 28, 2008 02:38
0
Ilhan Ali:
நன்பர் பிறைநதிபுரத்தானின் கருத்துக்கள் சிந்திக்கவேண்டியவை. நம் சமுதாய பின்னடைவிற்கு - மற்றவர்கள் எவ்வளவு காரணம் என்று ஆராயும் அதே சமயத்தில் நாமும் நம்மை சுயவிமர்சனத்துக்கு ஆளாக்கி நம்மிடையே இருக்கும் குறை நிறைகளை நேர்மையாக சுட்டிக்காட்ட வேண்டும். அப்பொழுதுதான் நாம் முன்னேற முடியும்..
9

May 28, 2008 09:41
0
அல் அமீன்:
//ஈரானிய இஸ்லாமிய பெண்கள் சாதித்ததை - இஸ்லாமிய உலகம் சாதித்ததாக ஒப்பிட கூடாது.// புரியவில்லை பிறைநதி! பின்னர் எதனுடன் ஒப்பிடுவது?. வார்த்தைகளில் போலும் பிரிவினை என்பதைத் தவிர்ப்போமே. அல் அமீன்
10

May 28, 2008 10:01
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும்.அனைத்து முஸ்லிம்களுக்கும். சகோதரர் பிறைநதிபுரத்தான் அவர்களின் கருத்துக்கள் கார் ஓட்டும் உரிமை, ஓட்டு போடும் உரிமை, போன்ற பல வகையானதை சொல்லலாம். இன்னும் முத்தலாக் விஷயம் நம் சமூகத்தில் சில இடங்களில் மார்க்கத்திற்கு முரணாக தான் ஒரே சமயத்தில் சொல்வதும். இன்னும் சில பேர் கேட்ட வரதட்சணை கிடைக்காமல் போனதாலோ சீர் வரிசையில் பேசி வைத்ததில். பெண் வீட்டாரால் கொடுக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாலோ! கட்டிய பெண்ணை தாய் வீட்டிலேயே கடைசிவரை காலம் கழிக்கும் அவல நிலையும் நம் சமூகத்தில் நிறைய சொல்லலாம். இதில் எந்த தலாக்கும் அடங்காது அந்த பெண்ணிற்கு குழந்தையும் இருந்து அதுவும் மனமுடித்துகொடுக்கும் அளவுக்கு வயதும் வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட ஓரவஞ்சனை செய்யும் நம் சமூகமக்களும் திருந்தி வாழ கடமைப்பட்டுள்ளார்கள். அதே நேரத்தில் // 18 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு திருமணத்தை தடை செய்யும் சட்டத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் - இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கும் வரை இந்திய் முஸ்லிம் பெண்கள் - அறிவும் ஆற்றலும் பெற்ற ஈரானிய பெண்களாக மாறுவது கடினம். // என்று எழுதியதை ஏற்க்கமுடியாது. ஒரு பெண் எப்பொழுது மாதவிலக்கு ஆரமபமாகிறதோ ! அது தான் கன்னி என்பதற்கு ஆதாரமே தவிர இத்தனைவயது தான் என்று ஒவ்வொரு ஆட்சியாளரும் வருடத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி அறிவித்துக்கொண்டு இருப்பது பால்ய வயது இதுவரைதான் என்ற ஆராய்ச்சி முழுமையடையவில்லை என்பதை அப்பட்டமாக தோலுரித்து காண்பிக்கிறது. உதாரணம் இஸ்லாம் உங்களுடையதே என்ற தளத்தில் இறுதி தூதரும் பால்யவிவாகமும் என்ற கேள்வி பதிலில் எடுத்து போட்டுள்ளேன் // இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான்.// அதனால் மனிதர்கள் நிர்ணயிக்கும் சட்டம் பெரிது படுத்த அவசியமில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன் அதற்காக இஸ்லாம் குழந்தைகளை மனம் முடிக்கதூண்டுவதாக ஆகாது. இன்னும் பெண் தாய்மையடையும் விலக்கு காலம் வந்த உடனேயே பெண் வீட்டார்.மணமுடித்து கொடுத்துவிடுவார்கள் என்ற நினைப்பும் நாமாக நினைக்கும் தவறான நினைப்பு என்பதை அறியவும். மா சலாம். அப்துல் அசீஸ்.
11

May 28, 2008 22:41

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு