| கல்வி உதவித் தொகை! |
|
|
| Help Line - Education Guide | |||
| புதன், 16 ஏப்ரல் 2008 15:16 | |||
|
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள். இறையருள் பெறுங்கள்! விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: TAMAM P.O.BOX 1263 MUTTRAH-114 SULTANATE OF OMAN விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008
கருத்துக்கள் (3)
![]() எழுதியவர்: abdul azeez , April 16, 2008 22:25 வாழ்த்துக்களும், சலாம்களும், நம் மஸ்கட் தமிழ் முஸ்லிம்களுக்கு. இவர்களைப்போன்று மற்ற அனைத்து அரபு தேசத்தில் வாழும் நம் சகோதரர்களும் இந்த மாதிரியான நற்செயல்கள் செய்து மறு உலக நன்மையை பெறுவோமாக! ஆமின். அனைத்து சகோதரர்களுக்கும். மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: haneefm , April 17, 2008 06:54 هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاء الْفِتْنَةِ وَابْتِغَاء تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الألْبَابِ அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7) அல்ஹம்துலில்லாஹ் இவர்களின் இந்த பணி மேன்மேலும் சிறக்கட்டும் இன்னும் நமது இஸ்லாமிய மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளட்டும்/ இதன் முலமும் நம் சமுதயா மாணவர்கள் உறிய கல்விவாய்ப்பை பெற்றட்டும்/இன்னும் அல்லாஹ் இவர்களின் சேவைக்கு தகுந்த கூலியை தந்துதருள்வானாக ஆமீன் ஹனீஃப்-குவைத் கருத்து எழுதுக :
|