| மாலேகான் பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | ||
| வியாழன், 13 நவம்பர் 2008 18:24 | ||
|
இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மாலேகோன் குண்டு வெடிப்பை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு, புரோஹிதுதான் 'அபிநவ் பாரத்' என்ற இந்து பயங்கவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொடுத்திருக்கக் கூடும் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட புரோஹித், ஹிந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவராவார் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 37 வயதான பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோஹித், கடந்த செப்டம்பர் 29இல் மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து உபகரணங்களை ஏற்பாடு செய்து அதற்கான முழுமையான திட்டத்தையும் தானே வகுத்து நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
Dim lights Embed Embed this video on your site
புரோஹித்தை விசாரித்துள்ள மும்பையின் பயங்கரவாத தடுப்புத் துறைப் படையினரின் (Anti-Terrorism Squad) பார்வை, மேற்கொண்டு அடுத்தடுத்த இராணுவ உயர் அதிகாரிகளின் மீது விழுந்துள்ளது. புரோஹித் மீது போலிசாருக்கு சந்தேகம் விழ ஆரம்பித்த கணத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட அவரது தொலைபேசி உரையாடல்கள் அவருக்கும் அவருக்கு முன்னர் விசாரணை வட்டத்திற்குள் வந்து விட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நிறுவியுள்ளன.
மேஜர் ரமேஷ் சந்த் உபாத்யாயாவைப் பற்றிக் கடந்த 28.10.2008 அன்று சத்தியமார்க்கம் தளம் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
"மாலேகோனில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்குத் தேவையான வெடிமருந்துகளையும் திட்ட வடிவத்தையும் முழுமையாக வடிவமைத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், அது அபிநவ் பாரத் உறுப்பினர்களுக்குக் கைமாறிய விதம் குறித்து எனக்குத் தெரியாது" என்று துவக்கத்தில் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் புரோஹித். ஆனால், தொடர்ந்த போலிசாரின் புலன் விசாரணையில் இராணுவ உயர் அதிகாரியான புரோஹித், அபிநவ் பாரத் இந்து பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூர் நிறுவன உறுப்பினர் (Founder Member) என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ATS அளித்துள்ள தகவலின்படி இராணுவ உயர் அதிகாரி புரோஹித், தனது இயக்கத்தில் பணிக்கு அமர்த்தி உள்ள இளைஞர்களுக்கு வெடிமருந்துகளைத் தயாரிப்பது, வெடிகுண்டுப் பாகங்களை இணைப்பது ஆகிய பயிற்சிகளை முன்னின்று அளித்ததாகத் தெரிவித்துள்ளது. இதற்கான தகவல்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
அபிநவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத இயக்கம், பிற ஹிந்துத்துவா இயக்கங்களுடன் பரஸ்பர தொடர்பில் இருத்தல், இயன்றவரையிலான மத வெறியினை ஊட்டி அவர்களைத் தயார் செய்தல், தயார் ஆனவர்களை உறுப்பினர்களாக ஆக்குதல் போன்ற பணிகளில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 2007இல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள Army Education Corps Training College & Centreக்குப் பொறுப்பு வகித்த புரோஹித், அங்கு அரபுமொழி பயின்று தேர்ச்சி பெற்றிருப்பது வியப்புக்குரிய விஷயமாகும். பின் லெப்டினெண்ட் கலோனிலாகக் கடந்த ஏப்ரல் 2008இல் பதவி உயர்வு பெற்றார்.
இந்திய இராணுவத்தின் ஒரு பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான புரோஹித் இந்த பயங்கரவாதத்தினை நிகழ்த்த ஏராளமானவர்களுக்குப் பண உதவி செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானவை ஹவாலா மூலம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன. கருத்துக்கள் (5)
![]()
வெட்கக்கேடு, இது இந்தியாதானா? 'வேற்றுமையில் ஒற்றுமை', 'மதச்சார்பற்ற ஜனநாயக நாடு' என்றெல்லாம் இனி சொல்வதற்கு இனி இந்தியாவிற்கு தகுதியுண்டா?
நம் மாநிலங்களிலும் மத்தியிலும் முதுகெலும்பற்ற மானங்கெட்ட ஆட்சி நடைபெறுவதால் உண்மைகள் வெளிவராது.
சரி அது போகட்டும், சனநாயகத்தின் தூண்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் நாளிதழ்கள் என்ன செய்கின்றன.
பியூஸ் போன பல்பு, சோக், சிறு துண்டு ஒயர்கள், மொபைல் போன், சட்டி பானையெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளில் கிடைத்தால் பயங்கரஆயுதங்களுடன் முஸ்லிம் தீவிரவாதிகள் கைது என பக்கம் பக்கமாக எழுதும் போது, மூட்டை மூட்டையாக பயங்கர வெடிகுண்டுகள் நாடு முழுவதும் சங்பரிவார (தொண்டர்கள்!!) தீவிரவாதிகள் வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் கிடைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எதையும் வெளியிடாமல் மறைப்பதேன்.
இவர்களெல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்ற காரணத்தினால்தானே?
உப்பு சப்பில்லாத விசயத்திற்கெல்லாம் விடுமுறை நாட்களென்றும் பாராமல் தானாக முன்வந்து விசாரணை செய்யும் நீதிமன்றமும் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பதேன்.
நீதிவான்களே மனிதநேயம் உள்ளவர்களே நீங்கள் பிறருக்கு எந்த பதிலும் சொல்லவிரும்பாவிட்டாலும் உங்கள் மனசாட்சிக்கேனும் சொல்லிவிடுங்கள்.
1
November 15, 2008 05:39
இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதகவே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'.
2
November 15, 2008 07:21
கடந்த செப்டம்பர் 29-ல் மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆறு பேர் உடல் சிதறி இறந்தார்கள். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி அது. அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்த விசாரணையில் இப்போது அணுகுண்டே வெடித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு அக்கிரமச் செயலைச் செய்ததற்காக ஸ்ரீகாந்த் புரோகித் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வகிப்பவர்.
அதேபோல் இந்தூரைச் சேர்ந்த பிரக்யா சிங் தாகூரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறது போலீஸ். இவர் இந்து மதப் பெண் துறவி. இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களாக மேலும் சில இந்திய ராணுவ அதிகாரிகளும், இந்துமத அமைப்பினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட, தேசம் இப்போது அதிர்ச்சியின் விளிம்பில். மதிப்பிற்குரிய ராணுவத்தின் நடுநிலைத் தன்மையையும் இந்துமத அமைப்புகளின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும் மாலேகான் குண்டுவெடிப்பு ஒரே சமயத்தில் காலியாக்கியிருக்கிறது.
``மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏதோ அபூர்வமான விதிவிலக்கு மாதிரி பேசுகிறார்கள். உண்மையில் அது பெரிய நெட்வொர்க்கின் ஒரு சின்ன பகுதிதான். திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு, அந்தப் பழியை முஸ்லிம்கள் மேல் போடு கிற வேலையை இந்து அமைப்புகள் இதற்கு முன்பும் செய்துள்ளன.'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
``இதே மகாராஷ்டிராவிலுள்ள நந்தெத் பகுதியில் 2006லும் 2007-ம் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. பஜ்ரங்தள் அமைப்பினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடித்தது. பிரபல மனித உரிமை ஆர்வலரும் நீதிபதியுமான கோஸ்லே பாட்டில் `இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் இந்து பயங்கரவாதத்துக்கான அறிகுறி' என அப்போதே எச்சரித்தார்.
தமிழகத்தில் கூட இந்து மத அமைப்பினரின் சதி அரங்கேறியிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களேதான் சம்பந்தப்பட்டிருந்தார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகப் பிரசாரம் செய்கிற போக்கு இனியாவது இந்துமத அமைப்பினரால் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் மார்க்ஸ்.
எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், போலீஸ் கண்களை மூடிக்கொண்டு முஸ்லிம்களை கைது செய்யும் அணுகுமுறையையும் மாலேகான் குண்டுவெடிப்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
``இதுவரை குண்டு வெடிப்புகளில் தொடர்புள்ளவர்களாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்ற சந்தேகத்தை மாலேகான் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 2001-ல் நாடாளுமன்றத் தாக்குதல் முதல் சமீபத்தில் நடந்த மீரட் குண்டுவெடிப்பு வரை முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்ட அனைத்து பயங்கரவாதச் சம்பவங்களையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் .
இது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பினர் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவி உள்ளனர் என்றும் உளவுத்துறை தகவல்கள் சொல்லுகின்றன.
``ராணுவம் உள்ளிட்ட பல முக்கியத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்பினரின் ஊடுருவல் இப்போது வெட்டவெளிச்ச மாகியுள்ளது. இந்த ஆபத்தான போக்குக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று நடுநிலையாளர்கள் வைக்கும் கோரிக்கையை செவிமடுத்தால், இந்தியாவில் குண்டுவெடிப்புச் சப்தங்கள் குறையும்..
---------------நன்றி: 'குமுதம்' 19-11-2008
3
November 15, 2008 07:45
அநியாயம் செய்யும் கூட்டத்தினர்க்கு உதவும் காவல் துறையும், நீதித்துறையும், மற்றும் ஊடகங்கள். தன் மத சார்பு நிலையில் ஒரு பக்கமாக சாய்ந்து தன் கடமையை செய்யும் பொழுது. அதில் இந்திய நாட்டின் இறையாண்மை மிதிக்கப்படுகிறது.பாதிக்கப்படும் அபலையின் அழுகுரலும் அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தையும், நீதி மறுக்கப்படும் ஏழ்மை மக்களின் திருப்தி இல்லாமல் இந்தியா உருப்படாது. உருப்படவும் கூடாது.
மா சலாம்
அப்துல் அசீஸ்.
4
November 15, 2008 13:59
WHY NOT CENTRAL GOVERNMENT STILL BAN ALL THE SUNG PARIVAR GROUPS? FOR WHAT THEY ARE WAITING NOW? WHETHER TO 'BUY' ATS? or TO 'BUY 'JUDGES? or TO MAKE ANOTHER 'NANAVATHY COMMISION' ON THESE ISSUES? or WAITING FOR ELECTION OVER? or TO 'CLEAN-UP' ALL EVIDENCES? last but not least IS THE CONGRESS REALLY AN OPPONENT PARTY FOR BJP? or BOTH FROM SUNG PARIVAR GROUPS? (ya Allah! save us)
5
November 16, 2008 03:42
கருத்து எழுதுக :
|