| மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: நான்கு பேர் குற்றமற்றவர் என விடுதலை! |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் |
| சனி, 08 நவம்பர் 2008 07:44 |
|
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று நடந்த ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை கைது செய்த நான்கு பேரைக் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அவ்வழக்கிலிருந்து விடுவித்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரை கூடுதல் பெருநகர அமர்வு நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றத்தை நிறுவுவதில் அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதிமன்றம் கூறியது.
அப்பாவிகள் கைதிகளாகச் சிறைச்சாலைகளில் தொலைக்கும் அநீதியான காலத்துக்கு நமது நீதிமுறையில் பதிலேதுமில்லை.
கருத்துக்கள் (2)
![]()
The police terrorists are again prooving their shamful acts, They are Against our India Consitution, we must have to file case against these arrest of any Innocents, Someone want muslims to be vanished from our country India, I think Isreal's hand may be joined with Brahmins, that is why they are clearly planning to catching innocent muslim boys & playing with their own Cash Medias.
1
November 08, 2008 10:06
(வாசகர்)கேள்வி:
நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது?(முகம்மது அன்சாரி, தஞ்சை.)
(அரசு)பதில்:
இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் 'ஹூசேன்''. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். 'ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் 'இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.
நன்றி- குமுதம் அரசு பதில்கள்( 05-நவம்பர்-2008)
2
November 09, 2008 10:53
கருத்து எழுதுக :
|