சத்தியமார்க்கம்.காம்

ஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = சாத்வீ (துறவி) print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
செவ்வாய், 28 அக்டோபர் 2008 15:26

 சாதுக்கள் என்றால் சாத்வீகமானவர்கள்; உலகை வெறுத்து, கடவுளின் நினைப்பிலேயே காலந் தள்ளும் துறவிகள்; அவர்களின் பக்தர்களால் வணங்கப் படுகின்றவர்கள்; மற்ற மதத்தவர்களாலும் மதிக்கப் படுபவர்கள் என்றெல்லாம் எண்ணியிருந்த ஒரு காலம் இருந்தது - கடப்பாறைகளோடும் சூலாயுதங்களோடும் அயோத்தியில் ஆட்டம் போட்டப் 'புதுவகை சாது'க்களை உலகம் காணும் வரை.


 

சாத்வீ என்பது சாது என்ற சொல்லின் பெண்பாலாம். சாத்வீ ரிதம்பரா என்ற பெயரும் அவர் ஆடிய ஆட்டமும் உலகுக்கு அறிமுகமானதும் அயோத்தியில்தான். விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவியாக இருந்த உமா பாரதியும் சாத்வீ ரிதம்பராவும் டிஸம்பர் 6, 1992 இல் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் பங்கு வகித்த பெண் தீவிரவாதிகளாவர்.


இந்தூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புக் காவல் படை(ATS)யினால் கடந்த வியாழக்கிழமை (23.10.2008) கைது செய்யப் பட்டு, தற்போது நாஸிக் நகரக் காவல் துறையினரால் (24.10.2008 முதல் 03.11.2008 வரை) பத்து நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கும் ப்ரக்யா சிங் தாகூர் (38), சற்றுக் கூடுதல் வித்தியாசமான 'சாத்வீ'.

கடந்த நோன்புப் பெருநாளைக்கு முதல் நாள் (29.09.2008) மகாராஷ்டிர மாநிலம் மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று முஸ்லிம் இளைஞர்களும் ஒரு சிறுவனும் பலியானார்கள்; 89 பேர் படுகாயமடைந்தனர். அதே நாள் அதே நேரத்தில் குஜராத்திலுள்ள மொடஸா என்ற ஊரிலும் குண்டு வெடித்து ஒருவர் பலியானார்; பலர் காயமடைந்தனர்.

 

மாலேகோனில் நடந்தேறிய குண்டு வெடிப்புக்குப் பயன் பட்ட மோட்டார் சைக்கிளின் நம்பர் ப்ளேட்டையும் சேஸையும் ரசாயனப் பொருட்களை உபயோகித்து அடையாளம் காண முடியாதவாறு குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஆக்கியிருந்தனர்.

"மிகுந்த முயற்சி எடுத்து, குண்டு வெடிப்பில் பயன் படுத்தப் பட்ட மோட்டர் சைக்கிள் சாத்வீ ப்ரக்யா சிங் தாகூருக்குச் சொந்தமானது என்று கண்டு பிடித்தோம்" என்று தீவிரவாத தடுப்புக் காவல் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரெ கூறினார். குற்றம் ஐயத்துக்கிடமின்றி உறுதியானதும் சாத்வீ ப்ரக்யாவோடு ஷாம்லால் பவார் சாஹூ (42) என்பவரும் சிவநாரயண் சிங் (36) என்பவரும் உடனடியாகக் கைது செய்யப் பட்டனர். மூவர் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 16 (பயங்கரவாதச் செயல்கள்), பிரிவு 18 (பயங்கரவாதச் செயல்களுக்கான சூழ்ச்சி செய்தல்) மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு, கூட்டுக் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றங்களுக்காக (302,307,326) வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், திலீப் நெஹர், தர்மேந்திரா பஜ்ரங்கி ஆகிய இருவர், சந்தேகத்தின் பேரில் காவல் படையால் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். விசாரணையில் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரைக் கைது செய்யக் காவல் படை மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றது.

இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVB)க்கு நெருங்கிய தொடர்புடைய 'ஹிந்து ஜாக்ரன் மன்ச்' என்ற பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பதை மகாராஷ்டிர மாநிலத் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே உறுதிப் படுத்தினார்.

வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சிப் பள்ளி

இந்த வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, 'இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்' என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, 'ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா' என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.

பெண் துறவி ப்ராக்யாவின் வழிகாட்டுதலில் செயல்படும் இந்தப் பயிற்சிப் பள்ளியில் உபாத்யாயாவும் குல்கர்னியும் வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, வெடிகுண்டுகளைக் கையாள்வது பற்றிப் பாடமும் பயிற்சியும் அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர் என்று கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப் பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Dim lights Embed Embed this video on your site

அடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப் படுவதாகத் தீவிரவாதத் தடுப்புப் படையின் நாசிக் யூனிட் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார். மேலும் மாலேகோனில் 2006 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்த இந்து அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநிலத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இரு முன்னாள் இராணுவ மேஜர்களையும் தவிர்த்து, மூன்றாவதாக மேஜர் Y.D. சஹஸ்ரபுத்தே என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ப்ரக்யா தாகூர்
கடந்த 2006ஆம் ஆண்டு அலஹாபாத்தில் நடைபெற்ற கும்பமேளாவின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரான சுவாமி அவ்தேஷனன் கிரியைத் தன் ஆன்மீக குருவாக வரித்துத் துறவியான பின்னர் சாத்வீ பூர்ணா சேத்தானந்த் கிரி என்று பெயரை மாற்றிக் கொண்டார் செல்வி ப்ரக்யா சிங் தாகூர் (38)

ப்ரக்யாவின் குடும்பம் மத்தியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற சாம்பல் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பின்த் மாவட்டத்தின் லஹர் என்ற ஊரைச் சேர்ந்ததாகும். ப்ரக்யாவின் தந்தையும் ஆர்.எஸ்.எஸ் ஊழியருமான ஸீ.ப்பீ சிங் தாகூர் (C P Singh Thakur) ஓர் ஆயுர்வேத மருத்துவராவார். இவருக்கு லஹரில் இப்போதும் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையும் சொத்துகளும் உள்ளன.

முஸ்லிம்களை நாடு முழுதுமிருந்தும் அழித்தொழிக்க ஒரு சோதனைக் களமாகத் தேர்வு செய்யப் பட்ட குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2001இல் ப்ரக்யாவின் குடும்பம் மாறியது. ஒரு புத்தகக்கடை முதலாளியான சஞ்சீவ் குப்தா என்பவருக்குச் சொந்தமான இல்லத்தில் ப்ரக்யா வசித்து வந்தார். அண்மையில் கர்ஹா, காட்னி ஆகிய ஊர்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியபோது காந்திஜிக்கும் இந்திய சிறுபான்மையினருக்கும் எதிராகச் சூடான சொற்களைப் பயன்படுத்திய வீடியோ கேசட் சிக்கியதாக ப்ரக்யாவின் வீட்டைச் சோதனையிட்ட தீவிரவாதத் தடுப்புக் காவல் படையின் கூடுதல் ஆணையர் மனீஷ் கபூரியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பேட்டியின்போது கோரக்பூர் சரகக் காவல்துறைப் பொறுப்பாளர் D.K. தீட்சித்தும் உடனிருந்தார்.

ஆளும் பி.ஜே.பிக்கு வக்காலத்து வாங்குபவரான மாநிலக் காவல்துறைத் தலைவர் எஸ்.கே. ரவுட் கூறும்போது, "அவரது ஜபல்பூர் ஆசிரமத்தைச் சோதனையிட்டதில் ஆட்சேபனைக்குரிய எதுவும் கண்டெடுக்கப் படவில்லை" என்றார்.

இயல்பிலேயே ஆண்மைத் தனம் கொண்டவரான ப்ரக்யா, கல்லூரி நாட்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் சாகசங்கள் புரிபவர் என்றும் எவரையும் அச்சமூட்டக் கூடிய முரட்டுக் குணம் கொண்ட மாணவர் தலைவி என்றும் ப்ரக்யாவைக் குறித்து அவரின் கல்லூரித் தோழர்கள் கூறினர்.

1997வரை பி.ஜே.பியின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி(ABVP)யின் மகளிரணியின் செயற்குழுவிலும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் பொறுப்பு வகித்து உஜ்ஜையினிலும் இந்தோரிலும் பணியாற்றியவர். இந்தோரில் ராஷ்ட்ரிய ஜர்கன் மன்ச் என்ற அமைப்பைப் பிரபலப் படுத்தியதோடு, குஜராத் அரசின் நிதி உதவியோடு 2002இல் சொந்தமாக ஓர் அமைப்பைத் தொடங்கி அதற்கு 'ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யான் சமிதி' என்று பெயரிட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். கைது செய்யப் பட்ட நாளிலிருந்து மெளன விரதம் அனுஷ்டித்து வரும் ப்ரக்யாவிடம் திங்கட்கிழமை உண்மை அறியும் சோதனை நடத்தப் படவுள்ளதாகவும் அதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப் படையின் சிறப்பு ஆலோசகர் அஜய் மிஸர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கும் கையாள்வதற்கும் வெடிக்க வைப்பதற்கும் பயிற்சி கொடுப்பதற்கு இராணுவ மேஜர்களைப் பணியிலமர்த்தி நாட்டைச் சுடுகாடாக மாற்றுவதற்கு ஹிந்துத்துவாக்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமான பிறகும் மாலேகோன் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவ தீவிர அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, ஆர்.எஸ்.எஸ், ஹிந்து ஜர்கன் மன்ச் ஆகிய அமைப்புகள் மீது இதுவரை தீவிரவாதத் தடுப்புச் சட்டமான பொடா பாயாதது ஏன் என்று வியப்புத் தெரிவித்தால் நிச்சயமாக நீங்கள் தேசபக்தர்(!)களுக்கு விரோதிதான்.

கருத்துக்கள் (5)add comment
0
Thaz:
பஜ்ரங்தள் உபயோகப்படுத்திய இராணுவப்பள்ளி: நாஸிக்கில் அமைந்துள்ள 'போன்ஸ்லே இராணுவப்பள்ளி' சில வருடங்களுக்கு முன் தனது பள்ளி வளாகத்தை, பஜ்ரங்தள்ளின் பயிற்சி முகாமிற்கு அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இந்த பயிற்சி முகாமிற்கும், மலோகோன் மற்றும் மொடாஸா குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இது பற்றி பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் 'சதீஸ் சல்பி(f)கர்' கூறுகையில் 'சில வருடங்களுக்கு முன் எங்களது பள்ளி வளாகத்தில் பஜ்ரங்தள் 10 நாள் பயிற்சி முகாம் நடத்த அனுமதித்தோம்' என்றும், மேலும் இது பற்றி மும்பை போலீஸின் தீவிரவாத ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்தியதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பள்ளியின் ஆவணங்கள் மும்பை போலீஸாருக்கு திருப்திகரமாக இருந்ததாகவும் சதீஸ் கூறினார். மேலும் விரிவான செய்திகளுக்கு: செய்தி: http://ibnlive.in.com/news/military-school-says-its-bajrang-dal-link-clean/76932-3.html வீடியோ: http://ibnlive.in.com/videos/76932/military-school-says-its-bajrang-dal-link-clean.html நன்றி: CNN-IBN.
1

October 28, 2008 20:15
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் Thaz, தங்கள் தகவல்களுக்கு நன்றி! ஐயங்களுக்கும் ஆட்சேபனைகளுக்கும் உரிய செய்திகளை சத்தியமார்க்கம்.காம் தவிர்த்து விடுவது வழக்கம். காட்டாக, பெண் துறவியோடு கைது செய்யப் பட்டவர்களை எலக்ட்ரிக்கல் & மெக்கானிக்கல் துறைகளில் பயின்றவர்கள் என்றும் ராம்நாராயண் சிங் என்பவர்தான் பல குண்டு வெடிப்புகளின் மூளையாகச் செயல் பட்டவர் என்றும் 'Lal and Singh were educated in mechanical and electrical engineering streams. Sources say a man named Ramnarayan Singh, the brother of Singh, is the master mind of the blasts' செய்திகள் http://ibnlive.in.com/news/three-rightwing-activists-held-for-malegaon-blast/76675-3.html தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி நமக்குத் தெரிந்திருந்தும் அது உறுதிப் படுத்தப் படாத ஒன்று என்பதால் அதை நாம் இங்குச் சேர்த்துச் சொல்லவில்லை. நமது தளம் தந்திருக்கும் செய்தியோடு 'ஹிந்து தளப் பதிப்பு'ச் செய்தி 'The other two former servicemen, Major Y.D. Sahasrabuddhe and Major Ramesh Upadhyay whom ATS sleuths are grilling along with Maj. Kulkarni, also taught at the Bhosala school and later assisted the former commandant in providing training in making and exploding bombs using RDX, the officials said' உறுதி செய்வதையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்: http://www.hindu.com/2008/10/27/stories/2008102755981200.htm. விசாரணை என்று வந்துவிட்டால் பூசி மெழுகுவது, கைவிரிப்பது, கைகழுவுவது, திசை திருப்புவதெல்லாம் ஹிந்துத்துவாக்களுக்கு வழக்கமான செயல்களாகும். நாங்களோ நீங்களோ ஒருவாரம் கேம்ப் நடத்த வேண்டும் என்று கேட்டால் இராணுவப் பயிற்சிப் பள்ளி இடமும் பயிற்சியும் தருமா?
2

October 29, 2008 06:01
0
Thaz:
உண்மையான செய்திகளை மட்டும் வெளியிட்டு சத்தியமார்க்கம்.காம் ஆற்றி வரும் பணி பராட்டத்தக்கது. மேலும் மனிதகுலத்துக்கு எதிரான தேச விரோத சக்திகளின் முகமூடிகளை கிழித்து அவர்களின் சதிகளை அம்பலப்படுத்தி, நமது இஸ்லாமிய சமுதாய மற்றும் ஒடுக்கபட்ட மக்களின் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளை களைந்தெடுக்க, எல்லாம் வல்ல அல்லா உங்களுக்கும் உங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கும் அருள் புரிவானாக(ஆமீன்).
3

October 30, 2008 00:53
0
வாஞ்ஜுர்:
தீவிரவாத பெண் சாமியாருடன் கூட்டு-லெப்டினென்ட் கர்னல் சி்க்கினார் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31, 2008 போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர். மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார். அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி: இதற்கிடையே பெண் சாமியார் பிரக்யா சிங்கு விரும்பினால், மத்திய பிரதேசத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படு்ம் என உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது. பிரக்யா ஒரு அப்பாவி. சாமியார்களின் புகழைக் கெடுக்கவும், அரசியல் உள்நோக்கம் காரணமாகவும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் மத்திய பிரதேசத்தில் போட்டியிடலாம். அவரை பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவருக்கு எதிராக நிறுத்துவோம் என அந்தக் கட்சி கூறியுள்ளது. http://thatstamil.oneindia.in/news/2008/10/31/india-malegaon-ats-picks-up-lt-col-in-mp.html
4

October 31, 2008 10:33
0
ஸாஜித்:
HC restores MCOCA against Sadhvi, others
The Indian Express Agencies Posted: Jul 19, 2010 at 1706 hrs
Mumbai The Bombay High Court on Monday ordered that Sadhvi Pragya Thakur and other 10 accused in the 2008 Malegaon bomb blasts case will face trial under Maharashtra's tough MCOCA, a year after charges on them under this anti -terror law were dropped.

In a boost to the Anti-Terrorism Squad(ATS), the High Court restored the charges under Maharashtra Control of Organised Crime Act (MCOCA) on all the 11 accused that also included Lt Col S P Purohit after quashing the order of a special court last year in this regard.

The Court said the application of MCOCA by the prosecution was justified.

The ruling was given by Justice B H Marlapalle and Justice Anoop Mohta on an appeal by the State government in the Bombay High Court challenging the order of the special court.

The trial of the case will now resume before a Special MCOCA court in Mumbai. The accused, currently lodged in Nasik Central Prison, would be brought to a jail here to stand the trial.

Seven people were killed in a bomb blast on September 29, 2008, at Malegaon, a communally-sensitive textile town in Nasik district of North Maharashtra, bringing into focus some right-wing Hindu groups.

On July 31 last year, a Special MCOCA court here had ruled that ATS had wrongly applied MCOCA in this case against Pragya, Purohit and nine others.

The special Court had opined that none of the accused was part of organised crime syndicate and also no one had more than one chargesheet filed against him for invoking MCOCA.

Accordingly, the special court dropped MCOCA charges and the case was transferred to a Nasik court for trial under IPC.

The 4,000-page chargesheet had alleged that Malegaon was selected as the blast target because Muslims form sizeable part of its population. It named Pragya Thakur, Purohit and another accused Swami Dayanand Pandey as the key conspirators.

The chargesheet had further alleged it was Pandey who had instructed Purohit to arrange for RDX while Sadhvi owned the motorcycle used in the blast.

Ajay Rahirkar, another accused, allegedly organised finances for the terror act while conspiracy meetings were held at Bhonsala Military School in Nasik.

Rakesh Dhawde, Ramesh Upadhyay, Shyamlal Sahu, Shivnarain Kalsangra, Sudhakar Chaturvedi, Jagdish Mhatre and Sameer Kulkarni were the other seven accused.

http://www.indianexpress.com/news/hc-restores-mcoca-against-sadhvi-others/648776/
5

July 20, 2010 10:22

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு