மீண்டும் ஐ எஸ் ஐ செய்திகள் : வாசிப்பவர் மு.க.

Share this:

பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கௌஹாத்திக்கு வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், பெங்களூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 5.40 மணிக்கு செண்ட்ரலுக்கு வந்து சேரும்.

கடந்த 1.5.2014 வியாழக்கிழமை சென்னை செண்ட்ரல் நிலையத்துக்கு கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தபோது காலை மணி 7.10.

வந்து சேர்ந்த ஐந்து நிமிடங்களில் எஸ்5 பெட்டியில் 30ஆம் எண்ணுள்ள படுக்கைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது.

அதே வேளை எஸ்4 பெட்டியின் 70ஆம் எண்ணுள்ள படுக்கைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த இரண்டாவது குண்டும் வெடித்தது. 70ஆம் எண்ணில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வாதி (24) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர். பதினொரு பேர் இலேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானமற்ற இந்தக் கொடூரச் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் சமுதாயத் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். குற்றவாளிகளைப் பிடித்துக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

செண்ட்ரல் குண்டு வெடிப்பைப் பற்றிப் பலவிதமான சாத்தியக் கூறுகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.

“ரயிலில் வைக்கப்பட்ட குண்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘டைம்பாம்’ வகையை சேர்ந்தது. ரயில் பெங்களூரில் இருந்து புறப்படும்போதே எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டனர். காலை 7.15 மணிக்கு வெடிக்கும் வகையில் நேரத்தையும் செட் செய்து வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்ட குண்டுகள்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்துள்ளன” என்று தமிழகக் காவல் துறையினர் கூறுகின்றனர்.

ரயில்வே போலீஸோ, “இரு குண்டுகளும் ரிமோட் மூலம் இயக்கப்படும் வகையைச் சேர்ந்தவை. ரயில் செண்ட்ரல் நிலையத்தில் வந்து நின்றதும், அதில் ஏறி 2 குண்டுகளையும் வைத்து விட்டு, பாதுகாப்பான தூரத்தில் நின்று அவற்றை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர்” என்கின்றனர்.

“எங்கள் கைவசம் CCTV மூலம் படமெடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளன. பெங்களூர் அல்லது நான்டெட் ஆகிய இரு நிலையங்களுள் ஒன்றில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை அவற்றின் மூலம் உறுதி செய்துவிடலாம்” என்று பெங்களூரின் அடிஷனல் டிஜிபி எம். என் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குண்டு வைத்தவர்களின் குறி சென்னையாக இருக்க வாய்ப்பில்லை” என்று தமிழக டிஜிபி ராமானுஜம் உறுதிப் படுத்துகின்றார்.

மூன்று நாளாகியும் இதுவரை சரியான துப்பு ஏதும் கிடைக்கவில்லை.

{youtube}pPtp0OYVtLo{/youtube}

காவல் துறையும் புலனாய்வுத் துறையும் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை இன்னும் தேடிக்கொண்டிக்கின்றன. ஆனால், குண்டு வெடிப்பு நடந்த ஐந்து மணி நேரத்தில் மு.க. அறிக்கை விடுகிறார்:

http://bsmedia.business-standard.com/_media/bs/img/article/2013-03/16/full/1363435271-8819.jpgபாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துறையினர் என்னதான் திறமையாகப் பணியாற்றிய போதிலும், அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்களை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் தான், இன்று காலையில்சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது”

இலங்கையின் கண்டியைச் சேர்ந்த துணி வியாபாரியான ஜாஹீர் ஹுஸைன் என்பவரை, சில நாட்களுக்கு முன்னர் காவல் துறையினர் திருவல்லிக்கேணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் மீது இன்னும் ச்சார்ஜ் ஷீட்டே வெளிவரவில்லை.

அந்த கண்டி ஜாஹிர் ஹுஸைனை “பாகிஸ்தான் தீவிரவாதி – ஐ எஸ் ஐ உளவாளி” என்று குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்தி, மு.க. செய்தி வாசிக்கிறார். ஜாஹிர் ஹுஸைன் தீவிரவாதியா இல்லையா என்பது விசாரணையில் / நீதிமன்றத்தில் வெளிவரும்; நடந்த குண்டுவெடிப்பு முஸ்லிம்கள் செய்ததுதான் என்ற முடிவுக்கு மு.க. எதன் அடிப்படையில் வந்தார்? இது வழக்கைத் திசை திருப்பும் வேலையில்லையா? யாரையோ திருப்திப்படுத்த இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

1967 கால முஸ்லிம்கள் அல்லர் இப்போது! ஒவ்வொரு அரசியல்வியாதியின் ஒவ்வொரு சலனத்தையுமே புரிந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு வந்துவிட்டது. இனியும் நீண்ட நாட்களுக்குக் குல்லா போட்டுக்கொண்டு நோன்புக் கஞ்சி குடிக்கும் ஸீன் எடுபடாது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஸ்டேஷனில் எந்த மாதிரியான ‘உபசரிப்புகள்’ நடக்கும் என்பது சின்னப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால், முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இல்லாததால்தான் இந்த குண்டு வெடிப்பே நடந்தாம். மு. க. சொல்கிறார். முதல்வரின் மீது மு.க.வுக்கு உள்ள நம்பிக்கையைப் பாராட்ட வேண்டும்.

அதேவேளை, இதே கருணாநிதிதான் கோவை கலவரங்களின்போது, முதன்முதலாகச் சட்டமன்றத்தில் “முஸ்லிம் தீவிரவாதிகள்” என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தவர் என்பதையும் தமிழக முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. இவர் இப்போது தொடங்கி வைத்த ‘பாகிஸ்தான் உளவாளி’, ‘ஐ எஸ் ஐ தீவிரவாதி’ ஆகிய இரு சொற்களையும் வைத்துக் கொண்டு, விண்டோ ஜர்னலிஸக் கில்லாடி ஊடகங்கள் இரு நாட்களாக ஆடிய ஆட்டத்துக்கு இன்று ஆப்பு அடிக்கப்பட்டு விட்டது.

“குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் ஹுஸைனுக்கும் செண்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை என்று விளக்கி, சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் ஊடகங்களுக்கு பலமாக ஆப்பு அடித்துள்ளார்.

செண்ட்ரல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புப் பற்றிக் கிடைத்துள்ள ஒரேயோர் உருப்படியான தகவல் என்னவென்றால், இந்த குண்டுகளும், பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுகளும் மோடி பாட்னாவில் பேசும்போது வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியான வேதிப் பொருட்களால் தயார் செய்யப்பட்ட பாட்னா குண்டுகள் என்பதே அது. பாட்னா குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்தவர்கள் யாவர் என்பது எல்லாருக்கும் தெரியும்; மோடிக்கும் தெரியும். அதனால்தான் குண்டு வெடிப்புக்குப் பின்னர் அதே மேடையில் பேசிய ‘துணிச்சல்கார’ மோடி, தான் பேசுவதற்குச் சற்று முன்னர் வெடித்த குண்டு வெடிப்பைப் பற்றி ஒரு வார்த்தையையும் தன் பேச்சில் குறிப்பிடவேயில்லை. ஆனால், ஆந்திராவில் மோடி பேசுவதற்காக வரும்போது ஆந்திர எல்லையில் வெடித்திருக்க வேண்டிய இந்த குண்டு வெடிப்பை மையப் படுத்தி, பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் உரிய நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்து, உரிய நேரத்தில் புறப்பட்டு, ஆந்திர எல்லையில் குண்டு வெடித்திருந்தால் அதனால் இலாபமடைய இருந்தவர்கள் யாவர் என்பது வெள்ளிடை மலை.

நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் “எல்லை தாண்டிய பயங்கரவாதம்”, “ஐ எஸ் ஐ சதி”, “முஸ்லிம் தீவிரவாதம்” என்று திசை திருப்பும் செயலை அத்வானி செய்து கொண்டிருந்தார். அனைத்து குண்டு வெடிப்புகளும் எங்களின் (சங் பரிவாரின்) கைங்கரியங்கள்தாம் என்று சுவாமி அசீமானந்தா பெருமையோடு வெளிச்சம் போட்ட பின்னர் அத்வானி அடங்கிவிட்டார்.

மு.க. அடங்குவது எப்போது?


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.