
இந்தியாவின் பரம ஏழை(!)களான அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா போன்றோர் வாங்கியிருக்கும் வங்கிக் கடன்களை சமாளிப்பது எப்படி?
என்று நடுவண் அரசின் நிதியமைச்சரும் பிரதமரும் ஆறுமாத காலம் சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முடிவெடுத்துள்ளனர். அதுதான் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் முன்வைக்கப்பட்ட Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill எனும் ‘நிதி நெருக்கடித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக் காப்பீட்டு’ வரைவு.
இந்நாட்டின் மன்னர்களான பொதுமக்களின் வங்கி வைப்புத் தொகைக்கு வந்துள்ள ஆபத்தைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் ‘நிதி நெருக்கடி’ யாருக்கு என்று பார்த்துவிடுவோம்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (முகேஷ் அம்பானி) |
101,303.00 கோடி |
பூஷன் ஸ்டீல்ஸ் |
46,262.23 கோடி |
வேதாந்தா ரிஸோர்ஸஸ் |
36,557.58 கோடி |
ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் |
32,696.57 கோடி |
டாட்டா ஸ்டீல் (ரத்தன் டாட்டா) |
30,209.04 கோடி |
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் |
26,557.00 கோடி |
அதானி பவர் (கவுதம் அதானி) |
25,274.19 கோடி |
ஜிண்டால் ஸ்டீல் |
24,163.34 கோடி |
ஹிண்டால்கோ (ஆதித்யா பிர்லா) |
22,621.93 கோடி |
அலோக் இண்டஸ்ட்ரீஸ் |
22,346.01 கோடி |
வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் |
19,512.00 கோடி |
டாட்டா மோட்டார்ஸ் |
19,511.56 கோடி |
அதானி ப்போர்ட்ஸ் ஷிப்பிங் |
18,694.46 கோடி |
ஜெயப்ரகாஷ் அசோஸியேட்ஸ் |
18,263.85 கோடி |
டாட்டா டெலி சர்வீசஸ் |
14,283.26 கோடி |
டாட்டா ப்பவர் |
12,739.84 கோடி |
ரிலையன்ஸ் இன்ஃப்ரா (அனில் அம்பானி) |
12,600.00 கோடி |
மேற்காணும் ஏழை(!)களின் கடன் கூட்டுத் தொகை 4 இலட்சத்து 83 ஆயிரத்து 595 புள்ளி 8 6 கோடி ரூபாயையும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள வங்கிகள் கடனாக வழங்கியுள்ளன.
மேற்காணும் ஏழை(!)கள் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியில் இருக்கின்றனர்.
வங்கிகளில் இருந்து கடனாக வழங்கப்பட்ட பணம் யாருடையது என்ற கேள்விக்கு பதில் தெரியுமா?
மொத்தமும் பொதுமக்களுடையது.
பொதுமக்கள் அனைவரும் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள தங்களின் சேமிப்பு / வைப்புத் தொகையை ஒரே நாளில் திருப்பிக் கேட்டால், கொடுக்க முடியாத நெருக்கடியில் வங்கிகள் இருக்கின்றன.
எனவே, இவ்விரு நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக, நடுவண் அரசின் அறிவாளி ஆட்சியாளர்கள் பொதுமக்களின் சேமிப்பு மற்றும் வைப்புத் தொகையை முடக்கி, தமக்கு வேண்டியவர்களின் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க் கடனுக்கு ஈடு வைப்பற்காகக் கொண்டு வர முயலுவதுதான் ‘நிதி நெருக்கடித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக் காப்பீட்டு’த் திட்டம்; சுருக்கமாக FRDI.
இந்த FRDI திட்டத்தைப் பற்றி விகடன் தொலைக்காட்சியில் விவரிக்கப்படும் திகிலூட்டும் விபரங்கள்:
{youtube}LzTJlBl7utg{/youtube}
கூடுதலாக, இந்திய வங்கிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளாரன திரு. தாமஸ் ஃப்ராங்கோ தரும் தகவல்கள் ஆட்சியாளர்களின் அயோக்கியத் தனங்களைத் தோலுரித்துக் காட்டுகின்றன:
{youtube}6dTnERZPn-o{/youtube}
இந்தப் பகற்கொள்ளைத் திட்டத்தை மாநிலங்களவையில் முன்வைத்து, சட்டமாக்குவதற்காக நிதியமைச்சர் பல சமாளிப்பு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி சட்டம் படித்தவர். திறமையான வழக்குரைஞர். எப்போதும் இயல்புக்கும் உண்மைக்கும் மாற்றமாகவே சிந்திப்பவர், செயல்படுபவர். தன் அமைச்சர் பதவியே கார்ப்பரேட்களின் நலன்களைக் காப்பதற்குத்தான் என்ற கொள்கையை உடையவர். ஏனெனில், தன்னுடைய பதவியின் பெயரில் (Minister of Finance and Corporate Affairs) கார்ப்பரேட் இருக்கிறது என்று வாதிக்கக்கூடியவர். எனவே, நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லாதவர்.
மக்களாகிய நாம்தான் நம்மைப் பற்றிக் கவலைப்பட்டு, நமக்கான முடிவை முன்கூட்டியே எடுத்துக்கொள்ள வேண்டும்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் – குறள்.