|
நற்சிந்தனைகள் -
வாழ்வியல்
|
|
சனி, 17 டிசம்பர் 2011 10:07 |
|
நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்சினைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி, செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.
|
|
|
இஸ்லாம் -
இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
|
|
வெள்ளி, 16 டிசம்பர் 2011 10:38 |
|
கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.
|
|
அறிவியல்-நுட்பம் -
அறிவியல்
|
|
புதன், 28 டிசம்பர் 2011 21:01 |
|
இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது.
|
|
|
ஐயமும்-தெளிவும் -
பிற மதத்தினருக்காக
|
|
திங்கள், 26 டிசம்பர் 2011 17:33 |
|
ஐயம்: இறைவன் ஆணா? பெண்ணா? - மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj
|
|
வரலாறு -
தோழர்கள்
|
|
புதன், 04 ஜனவரி 2012 14:17 |
|
அபூஅய்யூப் அல் அன்ஸாரி أبو أيوب الأنصاري
இஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை வாய்ந்த நகரம் இது. ரோமர்களின் ஆட்சிக் காலத்தின்போது செல்வச் செழிப்புடன் திகழ்ந்த இந்நகரத்துக்கு கான்ஸ்டன்டினோபில் (Constantinople) என்று பெயர். கி.மு. காலத்திலிருந்து துவங்கி நீண்ட நெடிய வரலாற்றுச் சங்கதிகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ள இந்நகரை நிறுவியவன் ரோமச் சக்கரவர்த்தி முதலாம் கான்ஸ்டன்டைன். அதற்குமுன் இந்நகருக்கு பைஸாண்டியம் என்று பெயர்.
|
|
|
|
|
|
|
|