பைனாப்பிள் ரசம்

{mosimage}
தேவையான பொருள்கள்

1 கப் துவரம் பருப்பு
3 தேக்கரண்டி புளி
2 தக்காளி
1 தேக்கரண்டி முழு மிளகு
1 தேக்கரண்டி சீரகம்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி நெய்
1 தேக்கரண்டி கடுகு
2 ஸ்லைஸ் பைனாப்பிள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு கொத்தமல்லி தழை
தேவையான அளவு கறிவேப்பிலை
இரண்டு காய்ந்த சிவப்பு மிளகாய

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 10 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்)
ஆக்கம்: அபூ ஷிபா

 

முன்னேற்பாடுகள்:

1. தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
2. முழு மிளகை பொடி செய்து கொள்ளவும்
3. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கிக்கொள்ளவும்

செய்முறை

துவரம் பருப்பை நன்றாக கழுவி பாதி புளி மற்றும் பாதி மஞ்சள் தூள் சேர்த்து ப்ரெஷ்ஷர் குக்கரில் நன்றாக வேக வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் ஒரு கப் நீரில் மீதி புளி மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். வெந்த துவைரையை நன்றாக ஒரு கரண்டியால் நசுக்கி அதனுடன் இரண்டு கப் நீர் மற்றும் தக்காளி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். முதல் கொதியிலேயே அதனுடன் மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து விடவும். ஒரு நிமிடம் கழித்து முன்பு செய்த புளி+மஞ்சள்+உப்பு நீர் கலவையை ஊற்றி பைனாப்பிள் சேர்த்து அடுப்பிலிருந்து உடனே இறக்கிவிடவும்.

வாணலியில் நெய் விட்டு அதில் கடுகு போட்டு பொரிந்ததும், தயாரித்த கலவையை அதில் ஊற்றி மூடியால் மூடி பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவ சுவையான பைனாப்பிள் ரசம் ரெடி.

குறிப்பு

சூடான சாதத்துடன் சாப்பிட இனிமை. சூப்பாகவும் பரிமாறலாம்.

 

ஆக்கம்: அபூ ஷிபா

இதை வாசித்தீர்களா? :   பாதாம் ஃபிர்னி