|
திங்கள், 06 பிப்ரவரி 2012 12:29 |
|
காயல் தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய 'தோழர்கள்' புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன் அருளால் கடந்த (03-02-12) வெள்ளிக்கிழமை இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அருமையான மாலைப் பொழுதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக அல் ஜாமியுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் அல்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் சகோதரர் சுவைலிம் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதித் துவக்கி வைத்தார்.
|
|
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:42 |
|
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم
பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான். அதற்குமுன் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால், முஸ்லிம்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாதவாறு அவர்களது கவனம் சிதிறிப் போயிருந்தது. இப்பொழுது அதெல்லாம் நீங்கி, யஸ்தகிர்த் தலைமையில் மக்கள் ஒன்றிணைந்து முழு மும்முரத்துடன் முஸ்லிம் படைகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள். மளமளவென்று போருக்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்தன. தன் படையை விரிவுபடுத்த, கட்டாய ஆளெடுப்புக்குக் கட்டைளையிட்டான் யஸ்தகிர்த். ஏகப்பட்ட உஷ்ணம் பரவியிருந்தது பாரசீகர்கள் மத்தியில்.
|
|
வியாழன், 29 மார்ச் 2007 05:46 |
|
ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.
|