Tag: வாலண்டைன்ஸ் டே
பயனற்றக் கொண்டாட்டங்கள் தேவைதானா?
ஒரு திரைப்படத்தில் “Loveன்னா என்ன?” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “ரூம் போடுறது” என்று சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும்.
நேற்று நான் பார்த்த ஒரு குறும்படத்தில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி...
கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…
கலாச்சாரத்தில் கலப்படம்
காதலர் தினம்...
தமிழ்க் கலாச்சாரத்தின்
தற்கொலை முயற்சி!
இந்தியப் பண்பாட்டின்மீது
இறங்கிய இடி!
வெள்ளைக்கார வேடன்
விரித்து வைத்த வலை
இதன்
கண்ணியில் சிக்கினால்
கற்புதான் விலை!
இந்த
மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின்
மீதான மோகம்
சுதந்திர இந்தியனின்
அடிமைக் காலத்து
சோம்பேறிச் சுகத்தின்
மிச்சம் மீதி!
பார்த்தும் ரசித்தும்
தொடுத்தும் முகர்ந்தும்
வருடியும் சூடியும்
கொண்டாடிய ரோஜாக்களைக்
கசக்கிப் பிழிந்து
குப்பையில் வீசிடும்
காமக்...
ஊன தினம்!
இரண்டாவது மாதத்தின்
இரண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் - ஒரு
கலாச்சார ரணம்!
வெள்ளைக்காரன் கண்டெடுத்த
கருப்புக்கறை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!
காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வந்துசேர்ந்த தினம்!
கலவியென்று களித்தது
கற்காலக் காதல்...
குளவியெனக் கொட்டுவது
தற்காலக் காதல்!
வெள்ளையனை வெளியேற்றி -அவன்
கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!
அன்னைக்கென்றொரு...