Tag: பாய்ந்தோடும் புரவிகள்
பாய்ந்தோடுபவை!
முழு உந்து விசையோடு
முடுக்கிவிட்ட எந்திரம்போல்
மூச்சிரைக்க விரைந்தோடி
முந்துவன மீதாணை !
சிக்கிமுக்கிக் கற்களவைச்
சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல்
குளம்பில் பொறிபறக்க
குதித் தோடுவன மீதாணை !
ஒளிக்கதிரின் வேகம்போல்
விடிகாலை போதினிலே
எதிரிகளை வீழ்த்தவென
எம்பிப் பாய்வன மீதாணை !
புகைகிறதோ பூமி யென
பிரமித்துப் போகுமாறு
புழுதிப்படலம் எழுப்பி
பாய்ந்து...