ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020

சஹீஹ் முஸ்லிம் - உள்ளங்கையில் அறிவகம்!

அன்பான வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…, நமது இணைய தளச் சேவைகளின் சிகரமாக, ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்பை அரபு மூலத்துடன் எளிய தமிழில் வாசகர்களுக்குத் தந்து கொண்டிருப்பதில் சத்தியமார்க்கம்.காம் தள குழுமம் பெருமகிழ்ச்சி கொள்கிறது!

வாசகர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, இணையத் தொழில் நுட்பத்தின் இன்றைய தேவைகளை அரவணைத்து, முஸ்லிம் தொகுப்பில் சிறப்பான மேம்பாட்டினைச் செய்துள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்.

புதிய தள முகவரி: http://muslim.satyamargam.com/

மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகள்:

  • – மொபைல் ஃபோன்களில் எளிமையாக வாசிக்கும் Intuitive, Responsive வசதிகள்
  • – வேகமான, மேம்படுத்தப்பட்ட Live search தேடுபொறி
  • – ஒவ்வொரு ஹதீஸுக்கும் எளிமைப்படுத்தப் பட்ட பிரத்யேக URL. (காட்டாக: http://muslim.satyamargam.com/1-14/56/ எனும் இணைய முகவரியானது அத்தியாயம்:1, பாடம்:14, ஹதீஸ் எண்:56 ஐக் குறிக்கிறது)
  • – உங்கள் இணைய தள / வலைப்பூ ஆக்கங்களுள் மேற்கோள் காட்ட விரும்பும் ஹதீஸ்களை, ஒரு சொடுக்கில் embed செய்து கொள்ளலாம்.
  • – தனி ஹதீஸ்களை பிரிண்ட், இமெயில் மற்றும் பகிர்தல் (வாட்ஸப், ஃபேஸ்புக், இமெயில்…) எளிது.
  • – புதிய பதிப்புகளை மின் அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
  • – விரும்பிய அத்தியாயத்தை, பாடத்தைத் தேர்வு செய்து வாசிக்கலாம்.
  • – இவ்வசதி தேவைப்படும் பிற இணைய தள நிர்வாகிகள், அவரவர் தளத்திலேயே தேடுபொறியைக் காண்பிக்கும் வசதி, மற்றும் பல…

புதிய அனுபவத்தைப் பெற,  பயனடைய, பிறருக்குப் பகிர சத்தியமார்க்கம்.காம் தளம் வாசக பெருமக்களை அழைக்கிறோம். நிறைகளைப் பிறருக்குத் தெரிவியுங்கள். குறைகள் இருப்பின் எங்களுக்குத் தெரிவித்தால் நன்றியோடு திருத்திக் கொள்வோம்.

இதை வாசித்தீர்களா? :   முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?