ஊனம் உடலில்தான்… உள்ளத்தில் இல்லை!

சகோதரி J. உமர்கனி

கால் ஊனமுற்ற ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய இயலுமா? என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மன்றம் பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க சத்தியமார்க்கம் தளக்குழுவினர் இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த சில சகோதரர்களின் உதவியுடன் விபரங்கள் சேகரித்தனர். இச்சகோதரியின் குடும்பத்தினருடன் உரையாடிதன் மூலம், கிடைத்த தகவல் உண்மை என்ற அடிப்படையில் இச்சகோதரிக்கு உதவ சமுதாயத்திடம் சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள் வைக்கிறது.

ஊனம் என்பது உடலில் மட்டுமே உள்ளத்தில் இல்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதத்தில், கடுமையான உழைப்பின் மூலம் பயோ டெக்னாலஜி(Bio Technology) பிரிவில் முதுநிலைப்பட்டம் (Master) பெற்றுள்ள இவர் ஸ்டெம்செல்லைக் குறித்து முனைவர் (Phd) தகுதிக்கு தற்போது தயாராகிக் கொண்டு இருக்கிறார். இதற்கான மேற்படிப்பிற்கு இவருக்கு பிரபல ரஷ்ய பல்கலைகழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

சமுதாயம் கல்வி விஷயத்தில் மிகவும் பினதங்கி இருக்கும் பொழுது கால் ஊனமுற்ற நிலையிலும், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இச்சகோதரி ஆவலுடன் படிப்பை விடாது தொடர்ந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரிய செய்தியாகும்.

“கல்வி என்பது என் சமுதாயத்திற்கு காணாமல் போன ஒட்டகத்தைப் போன்றதாகும். அதனை எங்கு காண்பினும் முயன்று பெற்றுக் கொள்ளுங்கள்” என எம்பெருமானார் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள்.

கல்வியில் சமுதாயம் அதிக அக்கறை காட்டாததன் விளைவை இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டு வருகிறது. இவ்வேளையில் சமுதாய வருங்காலத்தை மனதில் கொண்டு கல்வியில் அதிக அக்கறை காட்ட முன் வரவேண்டும்.

பயோ டெக்னாலஜி என்பது உயிரியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் படிப்பாகும். எதிர்காலத்தில் இத்துறை கணினித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் உடலியல் சார்ந்த பிரிவாகும். சமுதாயத்தில் இத்துறை சார்ந்து இளம் சமுதாயத்தினர் முன்னேறுவது சமுதாயத்திற்கு எதிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். (இதனைப் பற்றிய விரிவான ஆய்வரிக்கையை சத்தியமார்க்கம்.காம் விரைவில் வெளியிடும் இன்ஷா அல்லாஹ்)

ரஷ்ய பல்கலைக்கழகம் கொடுத்திருக்கும் கால அளவு முடிய இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் நம்பிக்கை இழந்து விடாமல் இறைவனின் கருணையின் மீது நாட்டம் வைத்து இச்சகோதரி காத்திருக்கிறார்.

ஒருவர் இறந்த பின்னும் அவர் நன்மைக்கான தட்டின் கனம் கூடிக்கொண்டே இருப்பதற்கான ஓர் எளிய வழியாக பயன் தரும் கல்வியை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி தந்திருக்கின்றார்கள். இச்சகோதரி பெறவிருக்கும் கல்வியின் மூலம் இவ்வுலகிற்கு ஓர் பயன் விளையுமாயின் அதற்குரிய கூலி இவ்வுலகம் அழியும் வரை அதற்காக உதவியவருக்கும் கிடைக்கும்.

இதை வாசித்தீர்களா? :   மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை

எனவே இறைவழியில் செலவழித்து இறந்த பின்னரும் தங்களது நன்மையின் பக்கத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் இச்சகோதரிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

உதவ வேண்டிய முகவரி :

 

J. உமர் கனி,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

சுவாமிமலை.

வங்கி கணக்கு எண்: 16272

குறிப்பு :

1. இச்சகோதரிக்கு உதவ விரும்புபவர்கள் நேரடியாக மேற்கண்ட வங்கிக் கணக்கில் தங்களது பணத்தை அனுப்பிஉதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சத்தியமார்க்கம்.காம் இவ்விஷயத்தில் ஓர் இணைப்புப் பாலமே அன்றி இது தொடர்பான கணக்கு வழக்குகளுக்கு பொறுப்பாகாது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. அவ்வாறு அனுப்புபவர்கள் தாங்கள் அனுப்பும் பணத்தின் விபரத்தை சத்தியமார்க்கம்.காம் மன்றம் பகுதியில் தெரிவித்தால், அச்சகோதரியின் மேற்படிப்பு எந்நிலையில் உள்ளது என்பதை மற்றவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதோடு, தேவையான உதவியை சமுதாய அக்கறை உள்ளவர்கள் மேன்மேலும் செய்வதற்கும் ஓர் வாய்ப்பாக இருக்கும்.

3. இவ்விஷயமாக மேற்கொண்டு ஏதாவது ஆலோசனைகளோ, சந்தேகங்களோ இருப்பின் சத்தியமார்க்கம்.காம் தளத்தினை தொடர்பு கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.