
சென்னையில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குக் காது கேளாத பிரச்னை பிறந்ததிலிருந்து உள்ளது. இக்குறையை நீக்குவதற்குரிய மருத்துவப் பரிசோதனையை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் செய்து பார்த்துள்ளனர்.
பரிசோதனையில் ஒலி / ஊடுகதிர் சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் Bilateral Profound Sensorineural hearing Loss (SNHL) எனும் நோய், சிறுமியின் மூளையுடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்தைத் தாக்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நோயைக் குணப்படுத்த Cochlear implant எனப்படும் அறுவை சிகிச்சை ஒன்றைத் தவிர வேறு எந்த ஒரு தற்காலிகத் தீர்வின் மூலமும் இயலாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இந்தச் சிகிச்சைக்காக ரூ. ஏழு இலட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். (மருத்துவமனை அளித்துள்ள சான்றிதழை மேலே காணலாம்)
வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவினால் இத்தனை பெரிய தொகையைத் திரட்டுவது சாத்தியமற்ற சூழலில், கருணை மனம் கொண்டு உதவும் நல்ல உள்ளங்களைத் தேடுகின்றனர். இத்தகைய சூழலில் சத்தியமார்க்கம்.காமின் உதவிக்கரம் பற்றி அறிந்து நம்மைத் தொடர்பு கொண்டனர்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் வாசக சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற தொகையினை தாராளமாக இவருக்கு அனுப்பித் தந்து இச்சிறுமியின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவ கேட்டுக் கொள்கிறோம். ரமழான்-2011 ஐ நாம் தொட்டு விட்ட சூழலில் இந்த உதவியினைத் துரிதமாக்கி இருமை நன்மைகளையும் அடைந்து கொள்வோமே?
– சத்தியமார்க்கம்.காம்
சிறுமியின் தந்தை சையத் சித்திக் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை நேரடியாக அனுப்பலாம்: Bank Details Syed Siddique Postal Address S. Ayesha Sultana, |
குறிப்பு :
நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்த உதவிகளைச் சான்றுகளுடன் இங்குப் பதித்து, மற்றோரையும் ஊக்கப் படுத்தலாம்.