
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31,2009
எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் அரசு உதவித்தொகையைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உதவித் தொகையைப் பெறுவதற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு, நவம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
விண்ணப்பங்களை WWW.tn.gov.inldge மற்றும் WWW.pallikalvi.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.50. இதை அரசுக் கருவூலகத்தில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறனாய்வுத் தேர்வு விண்ணப்பங்களை, தொடர்புடைய மண்டல அலுவலகத்திலும், தேசிய வருவாய்வழி தேர்வுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதிகள்: தேசிய திறனாய்வுத் தேர்வுக்குக் கடந்த கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்புத் தேர்வில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, இப்போது எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய வருவாய் வழித் திறன் படிப்பு உதவித் தொகைத் தேர்வுக்கு, 2009-10ஆம் ஆண்டில் மாநில அரசுப் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஏழாம் வகுப்புப் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர், அரசுத் தேர்வுகள் தலைமை அலுவலகத்திலும் கிடைக்கும். மேலும், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்கள், மையக் கல்வி மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும் கிடைக்கும்.