பெண்களுக்கான வேலை வாய்ப்புக் கல்வி

சென்னை தியாகராய நகரில் உள்ள அஞ்சுமனே ஹிமாயத்தே இஸ்லாம் (AHI) அநாதைச் சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கல்வியையும் சிறப்பான முறையில் புகட்டுகிறது.  அத்தோடு நில்லாமல் பெண்களுக்காக AHI அகாடமியை நடத்தி வருகிறது.  அதில் இஸ்லாமியக் கல்வி மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கல்வி கற்க வாய்ப்பில்லாமல் போன பெண்களுக்காக அரசு அங்கீகாரம் பெற்ற குறுகிய கால பயிற்சிகளை துவங்கியுள்ளது.

8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்போடு படிப்பு நின்று விட்டதே என்று ஏங்கும் பெண்களுக்கும் ஏறிக் கொண்டே இருக்கும் விலைவாசியோடு போட்டிபோட முடியாமல் திணறும் குடும்பங்களுக்கும், கணவனால் கைவிடப்பட்டு அல்லது கணவனை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
 
தொடக்கப்பள்ளி ஆசிரியைப் பயிற்சிக்குத் தேவையான கல்வித்தகுதி 10வது மட்டுமே.  மிகக் குறைந்த கட்டணம், தகுதியானவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்கப் படுகிறது.  முதியோர் பராமரிப்பு பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.  அது மட்டுமல்லாமல் பயிற்சி முடிந்த பிறகு தகுதியான மாணவிகளுக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்யப் படுகிறது.  இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
கல்விக்கு வயது தடையல்ல என்பதை நடைமுறையில் காட்ட அஞ்சுமன் முன்வந்துள்ளது.  தற்போது விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப் படுகின்றன.  மிகக் குறைவான இடங்களே இருப்பதால் விரைந்து சென்று விண்ணப்பம் பெறுங்கள்.  
முகவரி:
15, விஜயராகவா சாலை
தி.நகர்
சென்னை-17
தொலைபேசி: 28152858, 9840870229
தகவல்: சம்ஷாத் 
நன்றி: ‘சமரசம்’   16-31 மார்ச் 08
இதை வாசித்தீர்களா? :   கல்விச்சேவை தகவல்கள்!