கல்விச்சேவை தகவல்கள்!

Share this:

கல்விச் சேவை பற்றிய சில தகவல்களையும் அவற்றை அளிக்கும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்! – சத்தியமார்க்கம்.காம்

 

நான்கு ஆண்டு பி.பி.ஏ.,


நான்கு ஆண்டு பி.பி.ஏ., டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பை ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி நடத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத் துடன் இணைந்து நடத்தும் இந்தப் படிப்புக்கு, ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது!
 

மேலும் விவரங்களுக்கு: www.nithm.ac.in


ஐ.ஓ.சி., ஸ்காலர்ஷிப்


விளையாட்டு வீரர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஜூனியர் லெவல் விளையாட்டு வீரர்கள், அத்லெட்டிக்ஸ், டென்னிஸ், கேரம், ஹாக்கி, கோல்ஃப், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகளில் விளையாடுபவர்களும் இந்த உதவித் தொகை பெற விரும்பினால், வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள் 450 பேருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவிருக்கிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!
 

மேலும் விவரங்களுக்கு: www.iocl.com

 

ஐ.ஐ.டி-யில் எம்.பி.ஏ.,


மும்பை, டெல்லி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி-க்களில் மேலாண்மைப் படிப்புகள் படிக்க தனியே நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் (Joint Management Entrance Test). கான்பூர் ஐ.ஐ.டி நடத்தும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், அக்டோபர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். டிசம்பர் 14-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்!
 

மேலும் விவரங்களுக்கு: http://www.iitk.ac.in/gate

 

தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட்.,


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வி இயக்ககம் நடத்தும் பி.எட்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்டோபர் 18-ம் தேதி நடைபெறஇருக்கிறது. இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங்


நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீ யரிங் துறையில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேரலாம். ஓராண்டுப் படிப்பு இது. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றமாணவர் கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27. விண்ணப் பங்களை செப்டம்பர் 22-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
 

மேலும் விவரங்களுக்கு: www.nptisr.com

 

சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி

 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சென்னை அண்ணா நகரில் உள்ள ‘அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்’ பயிற்சி அளிக்கிறது. வருகிற டிசம்பர் முதல் 6 மாதங்களுக்குப் பயிற்சி. முழு நேரப் பயிற்சி அல்லது பகுதி நேரப் பயிற்சி என வசதிக்கேற்ற பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். முழு நேரப் பயிற்சிக்கு 200 மாணவர்களும் பகுதி நேரப் பயிற்சிக்கு 100 மாணவர்களுக்கும் அனுமதி. முழு நேரப் பயிற்சி மாணவர்களுக்கு விடுதி வசதி உண்டு. அனுமதிக்கு நுழைவுத் தேர்வு உண்டு. நவம்பர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வில் பங்கேற்க, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கிடைக் கும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
 

மேலும் விவரங்களுக்கு: www.civilservicecoaching.com


பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை!


பேங்க் ஆஃப் பரோடாவில் ஆயிரம் கிளார்க் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறைந்தபட்சக் கல்வித் தகுதி பிளஸ் டூ என்றாலும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 6-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வு நவம்பர் 30-ம் தேதி!
 

மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.com


டெக்னிக்கல் ரைட்டிங் பயிற்சி


விளக்கக் கையேடுகள், பதிவேடுகள், பயனாளிகளுக்கான குறிப்புகள் போன்றவற்றை ஓர் இலக்கண வரையறையுடன் எழுதுவதுதான் டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன். இணையத்திலும் இந்தப் பணிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன் குறித்த ஒரு மாதப் பயிற்சியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.பி.டி.இ. மையம் வழங்குகிறது. எம்பெட்டட் சிஸ்டம் டிசைன் குறித்த மூன்று மாத குறுகிய காலப் பயிற்சியையும் இந்த மையம் அளிக்கிறது.
 

மேலும் விவரங்களுக்கு: 99400 18051, 04422201777


அட்வர்டைசிங்!


அகமதாபாத் முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் நிறுவனம் ஹூயூக்ஸ்நெட் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து அட்வர்டைசிங் அண்ட் பப்ளிக் ரிலேஷன் முதுநிலை சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்த ஓராண்டுப் படிப்புக்குக் கட்டணம் ரூ.68,500. பட்டப் படிப்பை முடித்த மாணவர் களும் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களும் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
 

மேலும் விவரங்களுக்கு: www.hnge.in


ரீ-டெய்ல் மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகம்


18 லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் சில்லறை வர்த்தகத் துறையில் தகுதி வாய்ந்த திறனாளர்களை உருவாக்குவதற்காக புனே அருகே புதிதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாகிறது. ரீடெய்ல் மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியில் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

சமுதாய வானொலிப் படிப்பு!


சமுதாய வானொலி குறித்த சான்றிதழ் படிப்பை வரும் ஜனவரி முதல் தொடங்கப்போவதாக இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ப்ளஸ் டூ முடித்த மாணவர்களும், சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்!


கலைத்திறன் படைத்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை!


இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கைவினைத் திறன் உள்பட கலைத் திறன் படைத்த 10 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்ச்சுரல் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 500 மாணவர்களுக்குத் தலா ரூ.3,600 வீதம் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர் 31-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் கல்ச்சுரல் ரிசோசர்ஸ் அண்ட் டிரெயினிங் அமைப்புக்குக் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்!
 

மேலும் விவரங்களுக்கு: www.ccrtindia.gov.in


என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட்!


என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட் என்ற புதிய சான்றிதழ் படிப்பை இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.  அமைப் பின் ஒத்துழைப்புடன் இந்தப் படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் இப் படிப்பில் சேரலாம். பத்தாம் வகுப்பு படித்து மூன்று ஆண்டு தொண்டு நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்களும் சேரலாம். விண்ணப்பம் அனுப்பக் கடைசித் தேதி அக்டோபர் 31.


ஆக்ஸ்போர்டு பல்கலையில் தற்கால இந்தியா!


இந்தியக் கலாசாரத்துக்கு இன்னொரு பெருமை. இந்தியாவைப் பற்றியும் அதன் கலாசார, பொருளாதார அம்சங்களைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தற்கால இந்தியா பற்றிய எம்.எஸ்ஸி., படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் முக்கியப் பொருளாதாரச் சக்தியாக உருவாகி வரும் இந்தியா பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அடுத்து இப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது!


டெல்லியில் லா ஸ்கூல்!


சட்டக் கல்லூரிகள் இருந்தாலும்கூட, அதைவிட லா ஸ்கூல்களில் படிக்கும் மாணவர் களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. டெல்லியிலும் நேஷனல் லா ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் கட்டணம் ரூ.1.25 லட்சம் (இரண்டு செமஸ்டர் களுக்கு)!


வேலூர் சி.எம்.சி-யில் மருத்துவப் படிப்பு!


வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.டி., எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு வருகிற டிசம்பர் 13-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!


மாணவர்களுக்குக் கூடுதல் நேரம்!


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் போது வினாத்தாள்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்காக ஏற்கெனவே 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விடைத்தாளில் பதிவு எண்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்டவற்றைப் பதற்றமில்லாமல் மாணவர்கள் செய்வதற்கு வசதியாக மேலும் 5 நிமிடங்கள் வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான ஆய்வுக் குழு அறிக்கையைப் பொறுத்து, இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்!

 

அஞ்சல் வழி மேற்படிப்பு:

 

அஞ்சல் வழி மேற்படிப்புகளுக்காக இந்திய அரசு ஒரு நடுவண் மையத்தை ஏற்படுத்தியுள்ளது..
 
அதன் பெயர் Distance Education Council (DEC). இந்த அமைப்பு அஞ்சல் வழி கல்வியை முறைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
 
இதன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் வலையேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த அமைப்பின் வலைமனை www.dec.ac.in
 
இந்தியாவில் Distance Education தற்போது மிக பலம் பெற்ற வகையில் வளர்ந்து வருகிறது.
 
முதலாவது, Online Education Introduction – இது இன்னும் கருத்து நிலையிலே இருக்கிறது.
 
இரண்டாவது, Convergence System – கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு பட்டப்படிப்பை படிக்க அனுமதி.. இவ்வளவு நாட்கள் அதை செய்திருந்தால் அது அனுமதிக்கப் பட்டதல்ல..
 
மூன்றாவது, அத்தனை பட்டப் படிப்புகளையும் முறையான வகையில், குறிப்பிட்ட தரத்துடன், தேவைக்கேற்ற நேரத்தில் படிக்க முடிகிறது.
 
மேலதிக விபரங்கள் www.ignou.ac.in

 

 

தொகுத்தவர்கள்: எம். ரிஷான் ஷரீஃப் மற்றும் ஏ. அஹமத் ஜுபைர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.