மாணவர்களுக்கு CBSE வழங்கும் உதவித்தொகை

Share this:

CBSE (Central Board of Secondary Education) எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் CBSE வழங்கும் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவிகள், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கும் CBSE உதவித்தொகை வழங்குகிறது. ஏற்கனவே உதவித்தொகை பெறும் மாணவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CBSE வழங்கும் உதவித்தொகைகள் அடிப்படைத் தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.cbse.nic.in இணைய தளத்தைப் பார்க்கவும்.

அடிப்படைத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இந்த உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். ஆனால் அந்த மாணவிகள் அவர்களது குடும்பத்தில் ஒரே பெண் வாரிசாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒரே பெண் வாரிசு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்றவர்கள் தொடர்ந்து உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பங்களை புதுப்பிக்கலாம்.

இதைத் தவிர மத்திய பிரிவு திட்டத்தின் கீழ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகையைப் பெற தகுதியுடையவர்கள்.

விண்ணப்பங்களை www.cbse.nic.in இணைய தளம் வழியாக மட்டும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். இணைய தளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து CBSE தலைமை அலுவலகத்திற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பப் பிரதியை CBSE, “Shiksha Kendra”, No. 2, Community Centre, Preet Vihar, Delhi – 110 092 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

நன்றி: புதிய தலைமுறை


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.