
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.
சூரத்துல் பகரா |
அல்–குர்ஆன் (ஆடியோ) |
سُورَة البَقَرَه |
2-266 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0022661.mp3{/saudioplayer} | أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَه ُُ جَنَّة ٌ مِنْ نَخِيل ٍ وَأَعْنَاب ٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ لَه ُُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَه ُُ ذُرِّيَّة ٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَار ٌ فِيه ِِ نَار ٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ |
2-267 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0022671.mp3{/saudioplayer} | يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الأَرْضِ وَلاَ تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ~ِ إِلاَّ أَنْ تُغْمِضُوا فِيه ِِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيد |
2-268 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன் | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0022681.mp3{/saudioplayer} |
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَة ً مِنْهُ وَفَضْلا ً وَاللَّهُ وَاسِعٌ عَلِيم
|
2-269 தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0022691.mp3{/saudioplayer} | يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرا ً كَثِيرا ً وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُوا الأَلْبَابِ |
2-270 இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0022701.mp3{/saudioplayer} |
وَمَا أَنفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْر ٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُه ُُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَار
|
ரமளான் சிந்தனை – 1