ரமளான் சிந்தனைகள் – 19

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் அன்பியா

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الْأنبياء
 21-30 நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0210301.mp3{/saudioplayer} أَوَلَمْ يَرَى الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالأَرْضَ كَانَتَا رَتْقا ً فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلاَ يُؤْمِنُونَ  
 21-31 இன்னும்; இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0210311.mp3{/saudioplayer} وَجَعَلْنَا فِي الأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجا ً سُبُلا ً لَعَلَّهُمْ يَهْتَدُونَ  
 21-32 இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0210321.mp3{/saudioplayer}

وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفا ً مَحْفُوظا ً وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ  

 21-33 இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0210331.mp3{/saudioplayer} وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلّ ٌ فِي فَلَك ٍ يَسْبَحُونَ 
 21-34 (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0210341.mp3{/saudioplayer}

وَمَا جَعَلْنَا لِبَشَر ٍ مِنْ قَبْلِكَ الْخُلْدَ أَفَإِيْنْ مِتَّ فَهُمُ الْخَالِدُونَ 

 21-35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.  {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0210351.mp3{/saudioplayer} كُلُّ نَفْس ٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ  

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   இரண்டு யூதர்கள்!