ரமளான் சிந்தனைகள் – 18

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

சூரத்துல் ஹஷ்ர்

அல்குர்ஆன் (ஆடியோ)

 

 سُورَة حشر

 59-23 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590231.mp3{/saudioplayer} هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ~َ إِلاَّ هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلاَمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
 59-24 அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன் {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590241.mp3{/saudioplayer} هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَه ُُ مَا فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ  
சூரத்துல் கவ்ஸர்

அல்குர்ஆன் (ஆடியோ)

 سُورَة الْكَوْثَر

108-1 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1080011.mp3{/saudioplayer} إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
 108-2 எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1080021.mp3{/saudioplayer} فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
 108-3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1080031.mp3{/saudioplayer}

إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ 

 

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   ரமளான் சிந்தனைகள் - 24