
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.
சூரத்துல் ஹஷ்ர் |
அல்–குர்ஆன் (ஆடியோ) |
سُورَة حشر
|
59-18 ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590181.mp3{/saudioplayer} | يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْس ٌ مَا قَدَّمَتْ لِغَد ٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِير ٌ بِمَا تَعْمَلُونَ |
59-19 அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும் பாவிகள் ஆவார்கள். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590191.mp3{/saudioplayer} | وَلاَ تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُوْلَائِكَ هُمُ الْفَاسِقُونَ |
59-20 நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள், சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590201.mp3{/saudioplayer} |
لاَ يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ
|
59-21 (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590211.mp3{/saudioplayer} | لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَل ٍ لَرَأَيْتَه ُُ خَاشِعا ً مُتَصَدِّعا ً مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ |
59-22 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0590221.mp3{/saudioplayer} |
هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ~َ إِلاَّ هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
|
ரமளான் சிந்தனை – 1