குவைத்தில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


கடந்த 2003 முதல் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களிடையே மார்க்க மற்றும் சமூகப் பணிகளை செய்து வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC) வழக்கம் போல இவ்வருடமும் ஃபஹாஹீல் பகுதியில் கூடாரம் அமைத்து ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை, சவுதி அரேபியாவிலிருந்து வருகை தரும் பல்வேறு மார்க்க அறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற இருப்பதாக IGC அறிவித்துள்ளது.

 


குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தங்கள் மார்க்க அறிவை மேலும் புதுப்பித்துக் கொள்வதுடன் புனிதமிக்க ரமளானில் இறைவனின் மன்னிப்பையும், அருளையும் பெற இஸ்லாமிய வழிகாட்டி மையம் அன்புடன் அழைக்கிறது. இச்செய்தியைக் காணும் பிற வாசகர்கள், குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இச்செய்தியை அனுப்பி கலந்து கொள்ள ஆர்வமூட்டுங்கள்.
(சுட்டி: https://www.satyamargam.com/1749)


அறிவிப்பினைப் பெரிய அளவில் காண, படத்தின் மீது கிளிக் செய்யவும்.


இதை வாசித்தீர்களா? :   அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பு - ஆம்னஸ்டி!