ஒன்றாகப் படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய் மகன்

Share this:

மெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவுதியைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.

தனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவர் ஆவது தான் தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். தாயாரின் கல்வி வேட்கையைப் பற்றி கருத்து கூறிய சலாம், “என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

அரபு நாட்டு ஊடகங்களும், மேற்கத்திய நாட்டு ஊடகங்களும் வியக்க வைக்கும் இப் பட்டமளிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமீத் சுல்தான்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.