9/11 தாக்குதலின் பின்னணியில் மொஸாத்!

Share this:

2001 செப்டம்பர் 11 -ல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான ‘மொஸாத்’ -க்கு பங்கிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது.

9/11 நிகழ்வின் விமானக் கடத்தியாகக் கூறப்படும் ஸியாத் அல் ஜர்ராஹ் (Ziad al-Jarrah) நெடுங்காலமாக மொஸாத் ஏஜண்டாகப் பணியாற்றி வந்துள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதுதான், அச்சம்பவத்தில் மொஸாத்துக்கு பங்கிருப்பதற்கான நிரூபணம் என அமெரிக்க வார இதழான “அமெரிக்கன் ப்ரீ பிரஸ்” (American Free Press weekly) கூறுகிறது.
 
பாலஸ்தீனியர்களுக்குத் தன் விசுவாசமான ஆதரவைத் தந்து கொண்டிருந்த, லெபனான் நாட்டைச் சார்ந்த அலி அல்
ஜர்ராஹ் (Ali al-Jarrah) உண்மையிலேயே உயர்மட்ட இஸ்ரேலிய உளவாளியாக சென்ற இருபது ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரகசியம் இப்போது அம்பலமாகியுள்ளது. இதனை அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ்(New York Times) வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் கூட்டத்தில் ஒருவராக மறைந்திருந்து, வேவு பார்த்தல் போன்ற செயல்களில் பாலஸ்தீனியர்களுக்கும் லெபனான் நாட்டு ஹிஸ்புல்லாவுக்கும் எதிராக செயல்பட்டதாக அல் ஜர்ராஹ் ஒத்துக்கொண்டுள்ளார்.

இது இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜர்ராஹ் குடும்பத்தினரின் முதல் துஷ்டச் செயல் அல்ல. இக்குடும்பத்தின் மற்றொரு அங்கத்தினரான ஸியாத் அல் ஜர்ராஹ் (Ziad al-Jarrah) 2001 செப்டம்பர் 11 -ல் நடந்த தாக்குதலில் பங்கெடுத்த 19 விமானக் கடத்திகளில் ஒருவர் என டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது.

பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்பவர்களைக் கண்டுபிடித்து, தேர்வு செய்து, அவர்களைப் பொக்கிஷமாக இஸ்ரேலியர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

ஸியாத் அல் ஜர்ராஹ்வுக்கும் திட்டமிடும் தீவிரவாதத் தலைவர் ஒருவருக்கும் இருந்த தொடர்பு, மேலும் அந்தச் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

{youtube}wFFB0xvBNBQ{/youtube}

இரண்டு விமானங்கள், (விமான எண் 11 மற்றும் 175) உலக வணிக மையத்தின் மீது மோதியபோது அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஐந்து இஸ்ரேலியர்கள் துள்ளிக் குதித்து நடனமாடி, மகிழ்ச்சியுடன் நக்கலாக ஓலமிட்டது, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கூற்றுப்படி தெளிவாகிறது. இது 9/11 சம்பவத்தில் இஸ்ரேலுக்கு இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்க காவல்துறை இந்த ஐந்து இஸ்ரேலியர்களையும் கைது செய்து 71 நாட்களுக்குப் பின்னர் எந்த ஆரவாரமும் இன்றி விடுதலை செய்தனர். அதற்கு, அவர்கள் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான ‘மொஸாத்தின் அங்கத்தினர்கள் என்று சந்தேகம் ஏற்பட்டதே காரணம்.
 
அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIA -ன் பழைய உறுப்பினர்கள் இருவரின் தொடர்பு இதில் இருப்பதை பார்வார்டு வீக்லி (Forward weekly) பத்திரிக்கை  கண்டுபிடித்தது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இஸ்ரேலியர்கள் மொஸாத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் என அதே பத்திரிக்கை கூறியது,

“வெள்ளை மாளிகையிலிருந்து விசாரணைகளை நிறுத்தும்படி உத்தரவு வந்தது. இஸ்ரேலியர்களுக்கும் வணிக வளாக தீவிரவாதத் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மூடி மறைப்பதற்காகத்தான் இந்த உத்தரவு வந்தது என்பதை அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIA புரிந்து கொண்டது” என பார்வார்டு வீக்லி (Forward weekly) கூறுகிறது.

செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதலில் குறைந்த பட்சம் 2970 பேர் இறந்தார்கள். அதில் அதிக அளவில் இறந்தது சாதாரண மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம்.

CIA-யும் மொஸாதும் பின்னணியிலிருந்து இயக்கிய செயல் இது என இந்த நிகழ்வைப் பற்றி முந்தைய இத்தாலியப் பிரதமர் பிரான்ஸெஸ்கோ கொஸிகா (Francesco Cossiga) கூறினார்.

இந்தப் பேரழிவை CIA-யும் மொஸாதும் சேர்ந்து அரங்கேற்றினார்கள் என்று அமெரிக்க ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் அனைத்திற்கும் இப்போது தெரியும். அவர்களின் குறிக்கோள், அரபு நாடுகளின் மீது பழி போடுவதற்கும் மேற்கத்திய நாடுகளை இராக், ஆப்கானிஸ்தான் போர் நடடிக்கைகளில் பங்கெடுக்கச் செய்ய  வேண்டும் என்பதுதான். இவ்வாறு முந்தைய இத்தாலியப் பிரதமர் கூறியதாக இத்தாலிய பத்திரிக்கையான Corriere della Sera குறிப்பிடுகிறது.

உடனடி செய்தி சேவை (instant messaging services) வழங்கும் இஸ்ரேலிய தொலை தொடர்பு நிறுவனமான “ஓடிகோ” (Odigo) வுக்கு  இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக செய்தி வந்து, அது உடனடியாக யூதர்களை எச்சரித்துள்ளது. இது இத்தாலியப் பிரதமரின் வாதத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

உலக வணிக மையத்திலிருந்து இரண்டு கட்டிடங்களுக்கு அப்பால்தான் இந்த இஸ்ரேலிய தொலை தொடர்பு நிறுவனமான “ஓடிகோ” (Odigo)வின் தலமையகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழாக்கம்: அபூ அய்னு


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.