இந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்!

 

வ்வருடம் (2010) ஹஜ் பயணத்தை மேற்கொள்வோருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் உதவிடும் வகையில் இந்திய அரசு, முதல் முறையாக 24 மணி நேர சேவையினை மெக்காவில் துவங்கியுள்ளது.

ஹஜ் பயணிகளின் வசதிக்காக மெக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 மற்றும் +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத்தூதரகம்அறிவித்துள்ளது.

இந்திய துணைத்தூதரகம் 24 மணி நேர சேவை வசதியினைத் துவங்கியுள்ள இச் செய்தியினை இந்திய ஹஜ் அமைப்பிற்கான, செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவிலிருந்து இவ்வருடம் மெக்காவிற்குப் பயணமாகும் அனைத்து ஹஜ் பயணிகளுக்கான முன்னேற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. புனித யாத்திரிகர்களுக்கு மினாவிலும் அரஃபாவிலும் மூவேளையும் உணவு வழங்கப்படும். இந்திய ஹஜ் பயணிகளுக்கு இத்தகைய சேவைகளை அரசு வழங்குவது இதுவே முதல் முறை!” என்றார் முபாரக்.

ஹஜ் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களின் இந்திய உறவினர்களிடையே இச்செய்தி பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

இதை வாசித்தீர்களா? :   குவைத் IGC-யின் ரமளான் நிகழ்ச்சிகள் (வீடியோ)