விண்வெளியில் நோன்பு நோற்க இருக்கும் முதல் முஸ்லிம்!

மலேசியா விண்வெளிக்குத் தனது நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்ததும் அவ்வாறு விண்வெளியில் தங்கி இருக்கும் போது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்தும் வெளியான செய்திகள் நீங்கள் அறிந்ததே.

இந்த பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர் அக்டோபர் முதல் வாரத்தில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குப் பயணமாகிறார். நோன்பு கடமையாய் இருக்கும் ரமளான் மாதத்தில் அவர் செல்லவிருப்பதால் அவர் விண்வெளியில் நோன்பு நோற்க இருக்கும் முதல் முஸ்லிம் என்ற பெருமையை இன்ஷா அல்லாஹ் அடைவார்.

நோன்பு கட்டாயக் கடமையிலிருந்து பயணிகள் தற்காலிக விலக்கு அளிக்கப் பட்டிருப்பதால் நோன்பு கடமையை இவ்விண்வெளி வீரர் நோற்க இயலாத பட்சத்தில் புவிக்குத் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்கவும் இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அதோடு விண்வெளியில் 100 கிமீ உயரத்தைக் கடந்து செல்லும் 9-வது முஸ்லிம் ஆகவும் அவர் இருப்பர் என்பது தனித் தகவல்.

இதை வாசித்தீர்களா? :   உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்